எங்கயாவது இருவரோ, இரு குழுக்களோ, இரு இயக்கத்தினரோ, இரு சமய பிரவினரோ, இரு மார்க்க சகோதரரோ இணைந்து விட்டாலோ அல்லது சமாதானமாகிப்போனாலோ அபுநூறா மாதிரி ஆட்களுக்கு எங்கயோ வலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நான்கு கிராமத்து மக்கள் எதன் பெயராலோ ஒன்று கூடியதும் இவர்களுக்கு என்னதான் ஆகுமோ தெரியவில்லை. யாரிடமாவது காட்டி கொடுத்து, போட்டு கொடுத்து விட்ட பிறகு தான் தூக்கமும் நிம்மதியும் வரும் போலிருக்கின்றது. எதன் பெயராலோ இஸ்லாமியர்களிடம் நட்பாக இருப்பது பிடிக்கவில்லையோ அல்லது இவர்களுக்கு அரசியல் பண்ண வழி இல்லாததாலோ தெரியவில்லை. எதார்த்தத்தை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளட்டும். எதார்த்தம் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் மெல்ல மெல்ல திருத்திக்கொள்ளலாம். வளைக்கிறேன் பேர்வழின்னு ஒடித்து விடாதீர்கள்.
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)
1 comment:
அபு நூறாவையெல்லாம் ஏன் கவனித்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கறீர்கள்? நானும் அவர் பிளாக்கை பார்த்திருக்கிறேன். கம்மண்ட் பண்ணினேன் ஆனால் என்னுடைய கம்மண்ட்டை அபு நூறா பதிவு செய்ய வில்லை. அவர்களுக்கு சாதகமாக இருந்தால்தான் பதிவாகும் என்று தெரிந்து கொண்டேன். மார்க்கத்தில் உண்டா இல்லையா என்று பார்க்காமல் அவர்களின் கொள்கை மட்டுமே பதிவாகும். அபு நூறாவும் அதிசய ரிபாயியும் என்று கட்டூரை அபு நூறா பிளாக்கிலே 6 பாகங்களாக வெளிவந்தது. இது இருவருக்கும் நடந்த இமெயில் கடித தொடர்புகள். அந்த ஆறு பாகத்தை படித்த நான் இது முழுமையடையவில்லையே என்று எண்ணி என்னுடைய கருத்தை
"ரிபாயி உங்களுக்கு அனுப்பிய மெயில்களை முழுவதுமாக வெளியிடுங்கள் அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும் இல்லை உங்களுக்கு மட்டுமே இது நியாயமாக இருக்கும்" என்ற கருத்து வருவது போல
அபு நூறா பிளாக்கிற்கு அனுப்பினேன்.
பதிவாக வில்லை
ஆபாசமாக ரிபாயி கடிதம் இருந்தால் இந்த அபு நூறாவுக்கு என்ன வந்தது? பதிவு செய்ய வேண்டியதுதானே? அபு நூறாவும் அதிசய ரிபாயியும் என்று பாகம் போட்டு வெளியிடுவதற்கு முன்பாக யோசித்திருக்கவேண்டும்? சில மெயில்களை ஆபாசமாக இருந்ததால் பதிவு செய்யவில்லையாம். (ஆபாசமாக இருப்பதால் அவர்களின் கண்ணியம் கருதி வெளியிடவில்லையாம் - அபு நூறா பிளாக்கில்தான் இந்த வாசகத்தை போட்டு தப்புகிறார்கள்) ததஜ தொண்டர்கள் நம்பலாம் மற்றவர்கள்? அபு நூறாவுக்கும் ரிபாயிக்கும் நடந்த அனைத்து மெயில்களையும் பதிவு செய்தால்தானே படிப்பவர்களுக்கு உண்மை விளங்கும். அப்படியில்லாமல் வேண்டியதை மட்டும் பதிவு செய்வதை அவதூறு என்றுதானே சொல்லமுடியும். இப்படி உள்ள பிளாக்கை கவனிக்க வேண்டுமா?
எனவேதான் சொல்கிறேன் அபு நூறாவையெல்லாம் ஏன் கவனித்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கறீர்கள்?
Post a Comment