இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 07, 2008

கல்விக் கடன் பெறும் முறை

திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டத்தில் அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகளின் 200 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தத்தம் சேவை பகுதிகளில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்கள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றன. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள வங்கி கிளைகளை அணுகி கல்விக் கடனுதவி பெறலாம். மாணவர்கள் வங்கி கிளைகளை கல்விக் கடனுக்காக அணுகும் போது பின் ஆவணங்களுடன் செல்ல வேண்டும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மார்க் பட்டியல், மாறுதல் அத்தாட்சி, சேர இருக்கும் கல்வி நிறுவனத்தின் அனுமதி அட்டை, முழு படிப்பிற்கான கல்விக் கட்டணம், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஐந்து நகல்கள்.

இந்திய மெடிக்கல் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புகள், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், நர்சிங் படிப்புகள், பி.எட்., படிப்புகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமையின் படியும், தகுதியின் அடிப்படையிலும் அந்தந்த வங்கிககளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கல்விக் கடன்கள் வழங்கப்படும். வங்கிகளுக்கு கல்வி கடன்களை வழங்குவது பற்றி ஆலோசனை கூறவும், கல்வி நிறுவனங்களின் தகுதி மற்றும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆகியவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளவும் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுவுக்கு கலெக்டர் தலைவராக இருப்பார். முன்னோடி வங்கி மேலாளர், மாவட்டத்தில் அதிக கிளைகளை கொண்டு வங்கிகளின் மண்டல மேலாளர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், அண்ணா பல்கழைக்கழக பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், அரசு ஆசிரியர் பயிற்சி நிலை முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: