இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

January 31, 2010

முத்துப்பேட்டையில் வன்முறை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது பேட்டை.இந்த பகுதியைசேர்ந்தவர் பேட்டை சிவா(35). இவர் மாவட்ட பா.ஜனதா செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டில் இருந்து காரில் முத்துப்பேட்டைக்கு சென்றார். அப்போது இருட்டில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று அவரது கார்மீது கற்களைவீசியது.

இந்த சம்பவம் குறித்துபேட்டை சிவா முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சமரசம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் அங்கு இருபிரிவினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.இருபிரிவினரும் அடிதடி மோதலில் இறங்கினர்.

இந்த மோதல் தொடர்பாக பழையபஸ் நிலையம் அருகில்உள்ள ஒருகாய்கறி கடைக்கும் ஒரு மெக்கானிக் கடைக்கும் பைபாஸ் அருகே டூவிலர் ஒர்க்ஷாப்புக்கும் தீவைக்கப்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை வந்த அரசு பஸ்,மற்றும் மினிடோர் ஆட்டோ,ஆட்டோவை ஆகியவற்றைஅடித்து உடைத்தனர்.

மோதலில் நடராஜன் என்பவருக்கு மண்டை உடைக்கப்பட்டது. தங்கராஜிக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது.அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து முத்துபேட்டையில் பதட்டம் ஏற்பட்டது. கடைகளுக்கு தீவைத்தல், பஸ் உடைப்பு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக முத்துப்பேட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் (42,), சாகுல் அமீது(28) திராஜீதீன் (32), சேக் தாவூது (20) வாசிம்கான்(17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டையில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள் ளதால் அங்கு திருச்சி டி.ஐ.ஜி ராமசுப்பிரமணியன், தஞ்சை எஸ்.பி. செந்தில்வேலன், திருவாரூர் எஸ். பி. பிரவின் குமார் அவி நவ், அரியலூர் எஸ். பி. நஜ்மல்ஹோடா, ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாக திருவாரூர் எஸ்.பி. பிரவின்குமார் அவிநவ் கூறியதாவது:-

முத்துப்பேட்டையில் நடந்த கலவரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அஞ்சவேண்டாம் என்றார்.

January 21, 2010

திருவாரூர் மாவட்ட மமக மாநாடு

வேலூர் கோட்டை மசூதியை மீட்க தடையை மீறி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உள்பட 682 பேர் கைது



காவல் துறையின் தடையை மீறி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 682 பேர் கைது செய்யப்பட்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மசூதி மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திருமாளவன் பேசியது:

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வேலூர் கோட்டைக்குள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். வழிபாடு உரிமை ஜனநாயக உரிமை. அதனால் வேலூர் கோட்டையில் உள்ள மசூதி முஸ்லிம்கள் தொழுகைக்காக திறக்கப்பட வேண்டும். அது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 682 பேரை போலீஸôர் கைது செய்தனர். கைதான திருமாவளவன் உள்ளிட்ட 682 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

January 05, 2010

தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா

நேரலை - சனவரி 05,

எழுச்சித்தமிழர தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா சென்னையிலிருந்து இந்திய நேரம் மாலை 5:00 முதல் உங்கள் thiruma.netல் நேரடி ஒலிபரப்பு.

மாநகராட்சி மேயர்-கமிஷனரிடம் த.மு.மு.க. புகார்

திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அப்துல் ஹக்கீம் திருச்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி 7-வது வார்டில் அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட உக்கடை, ரகமத் பள்ளிவாசல் மற்றும் ஹலிபா பள்ளிவாசல் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.


இப்பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் உக்கடை, ஜோதி நகர், வடக்கு உக்கடை, மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் குழந்தைகளை கடித்துள்ளது.

ஏராளமான பன்றிகள் இப்பகுதியில் இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தற்போது பன்றி காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில் பன்றிகள் தொல்லையால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே 7-வது வார்டு பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிடித்து அவற்றை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணை செயலாளர் இப்ராகிம்ஷா, கிளை செயலாளர் ஜஹா¢ங்கீர், தமீம் அன்சாரி, மாலிக், ஜமால் ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுவை பெற்று கொண்ட மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

January 04, 2010

தலித் வரலாற்று நூல் வரிசை வெளியீட்டு விழா

1. தலித் மக்களும் கல்வியும்,
2. எம்.சி.ராசா சிந்தனைகள்,
3. தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
4. பஞ்சமி நில உரிமை மீட்பு ஆகிய நூல்களை எழுச்சித்தமிழர் வெளியிட்டார் அதனை முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் ஜவாஹிருல்லா பெற்றுக் கொண்டார்.