இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 17, 2008

சமூக நீதி கருத்தரங்கம்

அனைவரும் வாரீர்!!
தீவிரவாதமும் பயங்கரவாதமும்.
(நிழலும் நிஜமும்)
பேரா. சுப. வீரபாண்டியன்.
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கி யிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.)
மனித குலத்தின் இன்றைய சவால்கள்
சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
இடம்: ஜம் இய்யதுல் இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்
நேரம்: மாலை 5:15, ஜனவரி 1, 2009.
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சி இது.
தமிழகத்திலும் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாகவும், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது
அடுத்த நாளும் (வெள்ளிக் கிழமை) தமுமுக, குவைத் மண்டலத்தின் சார்பாக அதே அரங்கத்தில் மற்றும்ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

புஷ்ஷை செருப்பால்..!

எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...! தோழனே! இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..! தோழனே!உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..! இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!தோழனே!நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!தோழனே! பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!தோழனே! எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை பின்புறம் தேசீய கொடி இருக்குமல்லவா? தோழனே! உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
தமிழச்சி

November 15, 2008

தயாராகுங்கள்..! பாபர் மஸ்ஜித் போராட்டம்

தலைவரின் சிறப்புப் பேட்டி

குவைத்தில் தமுமுக மங்காஃப் கிளை துவக்க விழா

மாநில தலைவர் பேரா. டாக்டர் M.H.ஜவாஹிருலலா அவர்கள் குவைத்தில் த மு மு க நிர்வாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்கு பிறகு முதன் முறையாக 31-10-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஃபாஹில் மண்டல தமுமுக சார்பாக மாபெரும் மஙகாஃப் கிளை துவக்க விழா மஙகாஃப் தீன் மெஸ்ஸில் சிறப்பாக நடை பெற்றது.
குவைத் மண்டல துணை தலைவர் A.K.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் J. சித்திக் அஹ்மத், அப்துல் அஜீஸ், இகபால் அஹ்மத், சலீம் ரப்பானி, நசீர் அஹ்மத் ஜமாலி, சாகுல் ஹமீது பிர்தௌசி ஆகியோர் உரையாற்றினார்கள். மஙகாஃப் கிளையின் நிர்வாகிகளாக தலைவர் J.இக்பால் அஹ்மத் திருச்சி செயலாளர் ஹஜ்ஜப்பா மேலபாளையம் தேர்ந்தெடுக்கபட்டனர்.
இந்தியா திரும்ப விமான டிக்கெட் நிதியுதவி கேடு வந்த அதிரை சகோதரர் அப்துல் மாலிக் என்பவருக்கு கூட்டத்தில் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

November 12, 2008

மார்க்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

கடந்த 9-11-2008 அன்று திருச்சி குத்பிஷாநகர் கிளை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சகோ. கோவை. எஸ். அய்யூப் அவர்களின் சிறப்புரை நடந்தது.

November 05, 2008

சேலத்தில் முதல் முதலில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!

எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், தமுமுக, சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை, 6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம் களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச் செயலர். ஹைதர்அலி பேசுகையில், நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக, அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி, மாற்றி கொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர். மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில துனை செயலாளர் கோவை சாதிக், தலைமைகழக பேச்சாளர் ரபிக், மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன், மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.

October 29, 2008

தமிழன் தொலைக்காட்சியில் தமுமுக நிகழ்ச்சிகள்


தமிழன் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேஷன்ஸ் நிகழ்ச்சிகள்
திங்கள்: மார்க்க அரங்கம்
செவ்வாய்: மார்க்க அரங்கம்
புதன்: சமுதாய அரங்கம்
வியாழன்: வரலாற்று அரங்கம்
வெள்ளி: சென்ற வாரம்
இந்திய நேரம்: இரவு 10:30 முதல் 11:00 வரை
குவைத், சவுதி நேரம்: இரவு 8:00 முதல் 8:30 வரை
துபை, மஸ்கட் நேரம்: 9:00 முதல் 9:30 வரை
(குறிப்பு: நிகழ்ச்சிகள் இறுதிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது)

Channel Details : Tamilan channel
FREQUENCY: 3845 MHZ
SYMBOL RATE : 26043msps

POLORIZATION:Vertical

FEC : 3/4
Satellite: Insat 2E 83* east
(Asianet dish ) C band –Wide Beam

சேலம் மாவட்ட தமுமுக அழைக்கின்றது

மும்பையில் திருக்குர்ஆன் மாநாடு

October 23, 2008

திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாஸிஸ சக்திகளை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கண்டன உரையாற்றும் சகோ. புளியங்குடி சையது அலி (தலைமைக்கழக பேச்சாளர்)
கண்டன உரையாற்றும் சகோ. கோவை. சையது (தலைமைக்கழக பேச்சாளர்)

October 15, 2008

Notice _ Invitation


மன்னிப்பு கேட்டார் காதர் மைதீன்!

பாசிச ஏடான `துக்ளக்’ வார இதழுக்கு முஸ்லிம் லீக் தலைவரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம். காதர் மைதீன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். தமிழக முஸ்லிம்களின் மாபெரும் இயக்கமான தமுமுகவை தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டு, காழ்ப்புணர்ச் சியுடன் கூடிய காதர் மைதீனின் நேர்காணல் 27.8.08 தேதியிட்ட இதழில் வெளியானது.இது சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.எனினும் தனது கருத்துக் களுக்கு காதர் மைதீன் விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. எனவே தமுமுக சார்பில் வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணிச் செயலாளர்), கே.விஜயகுமார் ஆகியோர், தமுமுக பற்றிய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்குமாறும் இல்லையேல் அவதூறு வழக்கு தொடரப்படும் என காதர் மைதீனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.இதையடுத்து காதர் மைதீன் தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "நான் கூறிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நான் எந்த நிலையிலும் தமுமுக குறித்து தவறாகக் கூறவில்லை, அப்படி ஏதேனும் கருத்துக்கள் தமுமுக வினரை பாதித்திருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் அவர் மீது தொடர இருந்த அவதூறு வழக்கு நிறுத்தப்பட்டது. எனினும் பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் சமுதாயத் தலைவர்கள் சகோதர அமைப்புகள் பற்றி கண்ணியத் துடன் பேச வேண்டும். நமது வார்த்தைகள் எதிரிகளுக்கு ஊக்கம் அளித்து விடக் கூடாது என்பதை உணர்ந்தால் சரி.

அம்கராவில் மார்க்க சொற்பொழிவு




தமுமுகவின் ரமழான் நிகச்சிகளில் ஒன்றாக. தமிழகத்திலிருந்து வருகைதந்த சிறந்த பேச்சாழறும் இஸ்லாமிய அழைப்பாலருமான எம்.சி.முஹம்மத் அவர்களின். மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. மிகவும் எளுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு அம்கரா கிளைத்தலைவர். முஹமது அலி ஜின்னா சிறப்பாக செயதிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துபயனடைந்தனர்

August 13, 2008

தமுமுகவின் ஆம்புலன்ஸ் தேவைக்கு..!

சமுதாயம் காத்த தமுமுக..!
சமயத்தில் உங்கள் உயிரையும் காக்கும்..!!
இன்ஷா அல்லாஹ்..!!!

August 11, 2008

அரசின் அலட்சியமும் - மக்களின் அவசரமும்

ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்த கார் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில், டான்செம் நிறுவன அதிகாரி, அவரது மனைவி, கார் டிரைவர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலுள்ள தமிழ்நாடு அரசு சிமென்ட் நிறுவனத்தில்(டான்செம்) துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன்(57). பி.இ., பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாக அரசு சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ரம்யா என்ற மகளும், ராஜேஷ், தினேஷ் பிரவீன் என்ற மகன்களும் உள்ளனர். ரம்யாவுக்கு திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ராஜேஷ் பி.இ., எம்.பி.ஏ., முடித்து விட்டு துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகன் தினேஷ் பிரவீன் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
துபாயில் பணியாற்றும் ராஜேஷுக்கு, மதுரையில் "அம்மா மெஸ்' என்ற ஓட்டலை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த ரதி என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. செப்., 3ம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். முதல் திருமண பத்திரிகையை சந்திரசேகரன், திருச்சி ரெட்டமலையிலுள்ள குலதெய்வமான கருப்பசாமி கோவிலில் வைத்து, சாமி கும்பிட நேற்று அதிகாலை ஆலங்குளத்திலிருந்து தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு வந்தார்.
டான்செம் நிறுவனத்துக்கு சொந்தமான டி.என்., 05-7070 என்ற எண்ணுள்ள அந்த அரசு காரை, சிவகாசியைச் சேர்ந்த டிரைவர் வேலுச்சாமி ஓட்டினார். மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வந்து பத்திரிகை வைத்து சாமி கும்பிட்டு விட்டு, அங்கேயே மதிய உணவையும் முடித்துக் கொண்டு 2.15 மணிக்கு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். ரெட்டமலை கருப்பசாமி கோவில் அருகே ரயில்வே பாதையை கடந்து தான் மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.
காரில் சந்திரசேகரன் தனது மனைவியுடன் புறப்பட்ட நேரம், திருச்சி ஜங்ஷனில் இருந்து மாயவரத்துக்கு நெல்லை பாசஞ்சர் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெட்டமலை அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை ரயில் நெருங்கிக் கொண்டிருந்த போது, சந்திரசேகரனும், அவரது மனைவியும் வந்த காரை ஓட்டிவந்த டிரைவர் வேலுச்சாமி, "ரயில் வரும் முன் கடந்து விடலாம்' என்ற நினைப்பில் காரை வேகமாக செலுத்தினார். ஆனால், ரயிலும் வேகமாக வந்ததால், ஆளில்லா ரயில்வே பாதையை கடக்க முயன்ற கார் மீது ரயில் இன்ஜினின் முன்பக்கம் பயங்கரமாக மோதியது. ரயில் இன்ஜினால் கார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
காரில் இருந்த சந்திரசேகரனின் மனைவி ராணி மற்றும் டிரைவர் வேலுச்சாமி ஆகியோர், ரயில் தாண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்தனர். காரிலேயே மாட்டிக் கொண்ட சந்திரசேகரனும் உடல் நசுங்கி இறந்தார். சம்பவத்தை கண்டதும் ரயிலை நிறுத்திய டிரைவர், விபத்து குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். ரயில்வே பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஒரு மணிநேரம் போராடி காரை ரயில் இன்ஜினில் இருந்து பிரித்து எடுத்தனர். இறந்து போன டான்செம் டி.ஜி.எம்., சந்திரசேகரன், அவரது மனைவி ராணி, டிரைவர் வேலுச்சாமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

விமானப்படை பணி - சில தகவல்கள்

விமானப்படையில் ஏர்மென் பணி என்பது இன்று பல இளைஞர்களின் கனவாக இருப்பதை அறிவோம். இதற்காக பல தேர்வு முறைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் இவை நடத்தப்படுகின்றன. ஏர்மென் பணிவாய்ப்பு பற்றிய தகவல்கள் நாளிதழ்களிலும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வார இதழிலும் வெளியிடப்படுகின்றன.
விளம்பரங்களில் குறிப்பிடப்படும் நாளில் தவறாது நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும். இப்படிச் செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்களை தவறாது எடுத்துச் செல்ல வேண்டும். இவை பரிசீலிக்கப்படுகின்றன. அடுத்ததாக எழுத்துத் தேர்வு இடம் பெறுகிறது. குரூப் எக்ஸ் எனப்படும் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவு களிலிருந்து கேள்விகள் இடம் பெறுகின்றன.
குரூப் ஒய் பிரிவு ஏர்மென் பணிப் பிரிவுக்கு பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் ரீசனிங் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. குரூப் ஒய் மெடிக்கல் அசிஸ்டண்ட் பிரிவு ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், வேதியியல், உயிரியல் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை அப்ஜக்டிவ் கேள்விகளே. கல்வி பயிற்சியாளர் மற்றும் இசைப் பிரிவு ஏர்மென் பணிகளுக்கு அவர்களின் குறிப்பிட்ட பிரிவுத் திறனறியும் கேள்விகள் இடம் பெறுகின்றன.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு பிசிகல் பிட்னஸ் டெஸ்ட் எனப்படும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 6 முதல் 8 நிமிடங்களுக்குள் ஓடும் 1.6 கி.மீ. ஓட்டம் இதில் இடம் பெறுகிறது.
எழுத்துத் தேர்விலும் உடற்தகுதித் தேர்விலும் வெற்றி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் இறுதியில் பரிந்துரைக்கப்படுபவர்கள் மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். குரூப் எக்ஸ் பிரிவில் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருப்பதுடன் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ருமெண்டேசன் டெக்னாலஜி/ ஐ.டி. போன்றவற்றில் ஒன்றில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதன் எஜூகேஷனல் பிரிவுக்கு பி.ஏ./பி.காம்/பி.எஸ்சி. இவற்றில் ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட். தகுதியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம்/இயற்பியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ. இவற்றில் ஒரு தகுதியுடன் பி.எட். தகுதி மற்றும் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் முதல் பிரிவுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அடுத்த பிரிவுக்கு 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குரூப் ஒய் மற்றும் குரூப் இசட் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒய் பிரிவுக்கு 17 முதல் 22 வயதுக்குள்ளும் இசட் பிரிவுக்கு 17 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பொதுவாக இந்தப் பணிகளுக்கு 152.5 செமீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையைப் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 5 செ.மீ. விரிவடைவதாக இருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
உங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யவும் முழு விபரங்களறியவும் பார்வையிட வேண்டிய இணைய முகவரி: http://indianairforce.nic.in

August 10, 2008

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக..!

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பொந்தம்புளி கிராமம். நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை. ரோடு வசதி இல்லாததால் மழை காலங்களில் வெளியூர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப முடியாமல் நாள்முழுக்க காத்திருக்கும் அவலநிலை உள்ளது.அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சரின் தனிபிரிவுக்கு இவர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய பின்பும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆக.15 ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்க கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவதோடு ரேஷன் கார்டுகளை முதுகுளத்தூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்போவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கிராம துணை தலைவர் தங்கமுத்து கூறுகையில், "அதிகாரிகளின் கவனத்தை கவரவேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.

கம்பெனி செகரட்டரி ஆக விருப்பமா?

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு இந்தியாவில் தற்போது பெரும்பாலானோரால் விரும்பி தேர்வு செய்யப்படும்படிப்பாக மாறி வருகிறது. கம்பெனி சட்ட விதிமுறைகளின்படி, ரூ.2 கோடி முதலீடு செய்து துவக்கப்பட்ட கம்பெனிகள் அனைத்தும் கம்பெனி செகரட்டரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. நல்ல சம்பளத்துடன் கவுரவமான முறையில் நியமிக்கப்படும் இந்த பணியில் சேர இளைஞர்களிடையே இன்று நல்ல வரவேற்பு உள்ளது. பார்லிமென்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், சென்னை, கோல்கட்டா மற்றும் மும்பையில் 45 அலுவலகங்களையும் 24 துணை மையங்கள் மற்றும் 66 தேர்வு மையங்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் நடத்தும் தேர்வுகள் வழியாக மட்டுமே கம்பெனி செகரட்டரியாக முடியும். நிர்வாகத்தின் முக்கிய நிலைகளில் பணியாற்றும் பொறுப்பு உள்ளதால் இந்த பதவியில் திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளங்களை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இந்த நிறுவனம் மூன்று நிலைகளில் தேர்வுகளையும் இரு நிலைகளில் உறுப்பினர் அந்தஸ்தையும் வழங்குகிறது. பவுணடேஷன் தேர்வில் 4 பாடங்கள், எக்சிகியூடிவ் தேர்வில் 6 பாடங்கள், புரபஷனல் தேர்வில் 8 பாடங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் தேர்வான பின்னரே இன்னொரு நிலைக்கு உரிய தேர்வை எழுத முடியும்.

பிரீ மெம்பர்ஷிப்/மேனேஜ்மென்ட் டிரெய்னிங் 16 மாதங்களும் பயில வேண்டும். பவுண்டேஷன் தேர்வுக்கு - பிளஸ் 2 தேறியவர்கள் ரூ.3,600 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30க்குள் பதிவு செய்தால் அடுத்த ஆண்டு ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம்.
எக்சிகியூடிவ் தேர்வுக்கு - கம்பெனி செகரட்டரி பவுண்டேஷன் தேறியவர்கள் அல்லது நுண்கலை தவிர்த்த இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.சி.டபிள்யூ.ஏ., அல்லது சி.ஏ., இறுதி தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.6,500 முதல் ரூ.7,750 வரை ஒவ்வொருவரின் தகுதியைப் பொறுத்து பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். இருபிரிவுகளாக தேர்வு நடக்கிறது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், மே 31க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் டிசம்பரில் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், நவம்பர் 30க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம்.
புரபஷனல் தேர்வு - எக்சிகியூடிவ் தேர்வு முடித்தவர்கள் மட்டுமே இத்தேர்வு எழுத முடியும். பதிவுக்கட்டணம் ரூ.7,500. ஜூன் மற்றும் டிசம்பரில் நான்கு பிரிவுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டடு தேர்வு நடைபெறும். பிரீமெம்பர்ஷிப் பயிற்சியை எக்சிகியூட்டிவ் தேர்வு எழுதியபின்னர் எழுத தொடங்கலாம். இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:
The Institute of Company of Secretaries of India,
C37, Sector 62,
NOIDA 201 309 (U.P)
Ph.: 0120 423 999398
Email : dss@icsi.edu/ ss_fond@icsi.edu.
HEADQUARTERS ICSI House,
22, Institutional Area,
Lodi Road,
New Delhi 110 003
இந்த எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - 01141504444, 2461732124 Fax :24626727
Email : info@icsi.edu
Website : www.icsi.edu
SOUTHERN INDIA REGIONAL COUNCIL, CHAPTERS AND SATELITE CHAPTERS, ICSISIRC House,
No.9 Wheat Crofts Road,
Nungambakkam,
Chennai 600 034.
Phones: 28279898, 28222212,
Fax : 28268685
EMail : siro@icsi.edu;icsisirc@md3.vsnl.net.in.
MADURAI CHAPTER OF ICSI,
C3, Third Floor, AR Plaza, 16/17,
North Veli Street,
Madurai 625 001.
Ph:0452 2340797, Mobile :98431 55753
Chapters:
Bangalore:22286574, 22287158, Coimbatore : 2452006, 4385766, Hyderabad : 23399541, 23396494, Kochi:2392950, Mangalore :2216482, Mysore:2516065, Puducherry:2205017, Thiruvananthapuram: 2451915, Tiruchirapalli:2416337, Visakhapatnam:2533516,
Satellite Chapters :
Calicut:2762239, 2762338, Palakkad:2524548, Salem:2442072, Thrissur:2383960.

August 06, 2008

மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறு வனங்கள் முஸ்லிம் அமைப்புகளையும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்கு வதையும், கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக்கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும், ஒளிபரப்புவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்லவியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொண்டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த மீடியாக்கள் மறுபுறம் கேட்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் என்ன கூறப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும், மதத்தையும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆனால் எழுதுவதற்கு முன்னால் தங்கள் மூளையிலும், பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்களையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.
தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ் நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியை கொண்டு தமிழகத்தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊடகத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

நன்றி: தமுமுக இணையதளம்

August 04, 2008

பணியிலிருப்பவருக்கான ராணுவ வாய்ப்பு

டெரிடோரியல் ஆர்மி எனப்படும் துணை ராணுவப் பிரிவு பற்றி பலருக்குத் தெரிவதில்லை. சாதாரண குடிமகனாகவும் ராணுவ வீரராகவும் பணியாற்றும் வாய்ப்பை இது தருவதால் சமீப காலமாக இந்த வாய்ப்புக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டும் இந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் இதோ...
தகுதிகள்:
பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2008 அன்று 18 முதல் 42 வயதுக்குள் இருக்கவேண்டும். தற்போது முறையான வேலை ஒன்றில் இருப்பதும் முக்கியம்.
முக்கியக் குறிப்புகள்:
விண்ணப்பிப்பவர்கள் முதனிலை நேர்முகத் தேர்வு போர்ட் ஒன்றினால் சுருக்கப்பட்டு அடுத்தடுத்த கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். இது சர்வீசஸ் செலக்ஷன் போர்ட் மற்றும் மெடிக்கல் போர்ட் ஆகியவற்றால் நடத்தப்படும். இதன் பின் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவருக்கு ஒரு மாத துவக்க பயிற்சி தரப்படும். இதன் பின் ஆண்டுக்கு 2 மாத பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். முதல் 4 ஆண்டுகளுக்குள் கமிஷனுக்குப் பிந்தைய பயிற்சியானது இந்தியன் மிலிடரி அகாடமி, டெகராடூனில் தரப்படும். தொடக்கத்திலேயே லெப்டினன்டாக பணி வாய்ப்பு தரப்படும். லெப்டினன்ட் கர்னல் பணி வரை பதவி உயர்வு பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ரூ.12 அஞ்சல் தலை ஒட்டிய 28க்கு 12 செ.மீ. அளவுள்ள சுய முகவரியிட்ட அஞ்சலுறையையும் ரூ.10க்கான போஸ்டல் ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதோடு முழுத் தகவல்கள் அடங்கிய பயோ டேட்டாவையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் பெறும் முகவரி:
Commander, TA Group Headquarters, Southern Command, Pune 1.
விண்ணப்பத்தை
www.mod.nic.in தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் இது பற்றிய விபரங்களை www.joinindianarmy.nic.in, www.indarmy.nic.in தளங்களிலிருந்தும் அறியலாம்.

July 30, 2008

அதே...தமுமுக இணையதளம்

தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீ்ண்டும் புதுவேகத்தில், அதே முகவரியில் தமுமுக இணையதளம்

July 28, 2008

அல்-உம்மா பாட்ஷா மகள் திருமணம்

பாட்ஷாவின் மகள் முபக்தீராபானுவுக்கும், பொள்ளாச்சி- கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜபருல்லாவின் மகன் ஜாகிர்உசேனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று இத்திருமணம் போத்தனூர் ரோடு பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை கோவை சிறையிலிருந்து பாஷாவும், அவரது மகன் சித்திக் அலியும் போலீஸ் பாதுகாப்புடன், உக்கடம்-பிலால் நகர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து போத்தனூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மணமக்களை வாழ்த்தினர். இத்திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மகள் திரு மணத்திற்காக பாட்ஷாவுக்கு வழங்கப்பட்ட நான்கு நாள் பரோலில், மூன்று நாட்கள் நேற்றுடன் முடிந்தது.

குவைத்தில் வேலை வாய்ப்புகள்

Arabia Insurance Company
Consultants/Personal Lines
Ali Alghanim & Sons.
Foreman – HVAC
Draftsman – Electrical Works
Mechanical Engineer - Plumbing & Fire Fighting
Foreman – Plumbing & Fire Fighting
Draftsman – HVAC
Mechanical Engineer - HVAC
Draftsman – Plumbing & Fire Fighting Hasan Optical Co

Optician

Asst. Opticicann

Al Rai

Sales Women

Gynecologist

Dermatologist

Telecom Engineer & Technicians

Ophthalmology

Urology

Marketing Offiicer

Medical Representative

Kuwait Network Engineer

Medical record clerks

Network Technicians

Pediatrician

Network Engineer

Secretary

www.q8cv.com

தமுமுக இணையதளம்...இதோ

தமுமுகவின் இணையதளம் புதிய www.tmmk.info என்ற தற்காலிக முகவரியிலிருந்து கிடைக்கும். படித்து பயன்பெறவும்.

July 27, 2008

உணர்வாய் உன்னை..! அல்ஹம்துலில்லாஹ்..!!

(கிளிக்கி பார்க்கவும்)

ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமிய சிறப்பு ஒலி - ஒளி நிகழ்ச்சி அனைவரையும் அன்போடு அழைக்கிறது தமுமுக - குவைத் மண்டலம்

July 26, 2008

ரயில்வே பணி வாய்ப்புகள்..!

சென்னை ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆர்.ஆர்.பி. வெளியிட்டுள்ளது.
பணியிட விபரங்கள் செக்ஷன் இன்ஜினியர்: காலியிடங்கள்: 30தகுதிகள்: மனுபாக்சரிங் / மெக்கட்ரானிக்ஸ்/இன்டஸ்ட்ரியல்/மெக்கானிக்கல்/டூல் அண்ட் மெஷினிங்/ ஆட்டோமொபைல்/ புரடக்ஷன்/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிகல் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செக்ஷன் இன்ஜினியர்: டீசல் எலக்ட்ரிகல் பிரிவு காலியிடங்கள்: 5தகுதிகள்: எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் ஒன்றில் பட்டப்படிப்பு தகுதி.
செக்ஷன் இன்ஜினியர்: டிராக் மெஷின் பிரிவு காலியிடங்கள்: 5 , தகுதிகள்: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/புரடக்ஷன் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தகுதி.
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் உண்டு. இவை தவிர பிற பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் இன்ஜினியர் டபிள்யூ.எஸ். 57 இடங்களும், சி அண்ட் டபிள்யூ. 2 இடங்களும், மெக்கானிக்கல் டிசைன் 10 இடங்களும், டிராக் மெசின் 17 இடங்களும் சிக்னல் 54 இடங்களும் உள்ளன.இவற்றுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். கிராஜூவேட் தகுதிக்கான காலியிட விபரம் டிராபிக் அப்ரென்டிஸ் 6, அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் 5, குட்ஸ் கார்ட் 51 மற்றும் மெடலர்ஜிகல் அசிஸ்டண்ட் 3 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. தகுதியிடங்கள் இவை.
விண்ணப்பிக்கும் முறை:
முழு விபரங்களையும் சென்னை ஆர்.ஆர்.பியின் http://www.rrbchennai.net என்னும் இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை தபால் மூலமாக விண்ணப்பப் பதிவுத் தாளுடன் அனுப்ப வேண்டும்.
பதிவுத் தாள் மற்றும் கட்டணம் அனுப்பும் முகவரி:
Assistant Secretary,Railway Recruitment Board,5, Dr. P. V. Cherian,Crescent Road,Behind EthirajCollege, Egmore,Chennai – 600 008.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் :ஆகஸ்ட் 11, 2008.

வக்ப் வாரியத்தில் வேலைவாய்ப்பு:

வக்ப் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஜான் பிலிப்போஸ் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைமை நிர்வாக அலுவலரால் அறிவிக்கப்பட்ட தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக் காலியிடங்களுக்கு உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு முஸ்லிம் ஆண் மனுதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 31.7.2007 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வேறு எந்த சலுகையும் கிடையாது. இப்பணி காலியிடங்களுக்கு 31.12.97 வரை பதிவு செய்த பட்டதாரி முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஆண் மனுதாரர்கள் மட்டும் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரத்தை வரும் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

July 22, 2008

IDMK சொல்வது என்ன..?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.,

அண்ணே....... ஐடிஎம்கே அண்ணே உங்க கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானாக, வயிற்றெரிச்சலில் பாலை ஊற்றுவானாக, உங்களோட இணையதளத்தை தற்போது தான் பார்த்தேன். கட்டுரைகள் தான் 20 முறை ஏற்றியிருக்கின்றீர்களே தவிர மற்ற எல்லா லிங்குகளும் Under Construction ஆக தான் இருக்கின்றது. இணையத்தையே நீங்கள் இனிமேல் தான் முறைப்படுத்த வேண்டும். இதற்கிடையில் சமுதாயத்தை எங்கே முறைப்படுத்துவீர்கள். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லையே. அதனால, தமுமுகவிற்கு பலத்தை குடுறா அல்லாவே, இஸ்லாமிய எதிரிகள இல்லாம ஆக்குடா அல்லாவே, சமூகத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களை திருத்துடா அல்லாவே, தமுமுக சரியா செயல்படல திராவிட கட்சிகளிடம் எங்கே விலை போயிருவாங்கலோன்னு பயந்து அவசரப்பட்டு ஐடிஎம்கேவ ஆரம்பித்தது தவறுதான் அல்லாவே, இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் ஐடிஎம்கேவ கலைச்சிட்டு மமுகவோடு சேர்ந்து புதிய எழுச்சியுடன் கூடிய மலர்ச்சியை உருவாக்கனும்டா அல்லாவே, சமுதாயத்தின் பெரிய தலைகளுக்குள் இருக்கும் ஈகோ, பிரஸ்டீஜ், ஆணவம், திமிரு, நயவஞ்சகம், இன்னும் இதுபோன்று இறையும், மறையும் மறுக்கும் தீய குணங்களை இல்லாமல் ஆக்குடா அல்லவேன்னு துஆ செஞ்சிட்டு இருங்க. உங்கள் துஆ பரக்கத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

// இந்திய தேசிய மக்கள் கட்சியை ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். //

கண் முன்னே நடந்த வரலாற்றை இப்படி திருப்புகிறார்களே இவர்களா நாளைய சந்ததிக்கு இந்திய சுதந்திர தியாக வரலாற்றை கொடுப்பார்கள். 1995ல் இருந்து சமுதாயப்பணியில் களம் கண்ட தமுமுக 2004லில் அரசியல் களம் காண புதிய உத்வேகத்துடன் அன்றிலிருந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செல்ல துவங்கிவிட்டது. 2008 பிப்ரவரி மாதமே நிலையான அரசியல் கட்சி துவக்குவதற்காக செயற்குழு கூடி முடிவெடுக்கப்பட்டு பொது மக்களிடம் அது பற்றி கருத்துக்கணிப்பும் கேட்கப்பட்டது. http://www.tmmkonline.org/tml/others/108632.htm
இதையெல்லாம் கூட அறியாமல் IDMK ஆரம்பித்த பிறகு தான் எல்லாம் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பது சொல்லித்தெரியவில்லை. 06-04-2008 அன்று கட்சியை ஆரம்பித்துவிட்டு 22-09-2008ல் அடுத்தவர்களை விமர்சிக்க ஆரம்பித்து விட்டது. அந்தப்பக்கம் முஸ்லீம் லீக்கும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட ஆரம்பித்து விட்டது. அருமையான ஆலோசனை வழங்கி எங்களை அவ்வப்போது சீர்படுத்திக்கொண்டிருக்கும் இது போன்ற விமர்சனங்கள் வரவேற்கின்றோம். 15 ஆண்டு காலமாக சாதித்து விட்டு சாதனைகளங்களை கடந்து ஒரு வாழ்வுரிமை போராட்டத்திற்கு தயாராகின்ற நேரத்தில், இது வரை சமூகக்களத்தையே கண்டிராத, எந்தவித ஆர்ப்பாட்டம், போராட்டம், பிரச்சனைகளை எதிர்கொள்ளல், அதற்கு தீர்வுகளை காணுதல், நெருக்கடிகளை எதிர்கொள்ளல், சிறைக்கொட்டடிகளை சகித்தல் இப்படி எதையுமே கண்டிராத ஒரு அரசியல் கட்சி, சாடுவதை மட்டும் சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா. இருதியாக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி சமுதாயத்திற்காக தாங்கள் ஏதேனும் செய்யவிரும்பினால் தமுமுகவுடன் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய விரும்புகிறீர்களோ அதே சமுதாயத்திற்க்காகத்தான் தமுமுகவும் இதுவரை பல தியாகங்களை செய்து விட்டு அடுத்த கட்டத்திற்காக தயாராகிறது. இந்தப் பயணம் தொடங்குவதற்குள் வந்து சேர்ந்து விடுங்கள். இல்லையேல் யாருக்காகவும் இந்த பயணம் தடைபடாது. இன்ஷா அல்லாஹ்.

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்¢ அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் - 2:207 )
வஸ்ஸலாம்

July 21, 2008

துஆ செய்கின்றோம்..!

ஐ. உஸ்மான்கான் தகப்பனார் மரணம்.
நெல்லை மாவட்ட த.மு.மு.க. செயலாளரும், குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்களுக்காக இன்று வரை தமுமுக - குவைத் மண்டலத்துடன் இணைந்து போராடிக்கொண்டு இருப்பவருமான சகோ. ஐ. உஸ்மான் கான் (9443310150) அவர்களின் தகப்பனார் காலமனார். அவரது ஜனாஸா இன்று (21.07.08 திங்கள்) அஸரில் திருநெல்வேலி டவுண் ஜாமிஆ பள்ளி கபரஸ்தானில் இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக..!.
'அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை' எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்- 45:26)

கோவை நிகழ்ச்சி

July 17, 2008

ததஜ நிர்வாகிகள் கூண்டோடு...,

அவர்கள் நேர்மையுடனும், தூய சிந்தனைகளுடனும், இறைவனுக்காக பணியாற்ற முன்வர வேண்டும் என்பதே நமது வாழ்த்து செய்தியாகும். சகோதர அமைப்புகளை விமர்சிப்பதை கைவிட்டு, எல்லோருடனும் நல்லுறவை வளர்க்க அவர்கள் முன்வரவேண்டும். அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் செய்த தவறுகளை சரி செய்து, சுயசிந்தனையோடு செயல்பட்டால் கொள்கை சகோதரர்களின் அன்பையும், சமுதாயத்தின் நன் மதிப்பையும் பெற வாய்ப்புள்ளது. - தமுமுக

சுதந்திரத்திற்கான வாக்குறுதி..!

- ஒரு போராளி

July 16, 2008

திறன் வளர்க்கும் பயிற்சி திட்டம்..!

(இந்த படத்தின் மீது கிளிக்கவும்)

தாங்களும் பயன்பெறுங்கள்..., சகோதரர்களுக்கும் பரப்புங்கள்.

வல்லம் மாநாடு - சொல்வதென்ன..?

பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) எனபவரின் யோக்கியதையையே புரிய முடியாத இவர்களுக்கு சத்தியம் எது? அசத்தியம் எது? என்ற விளக்கம் எப்படி புரிந்து கொள்ள முடியும். மாநாடு பற்றிய விளம்பரம் செய்தவதில் மாதக்கணக்கில் கவனம் செலுத்திய இவர்கள் குறைந்த பட்சம் 15 நாளாவது மாநாட்டு அரங்கத்திலே கவனம் செலுத்தியிருக்கலாம். உண்மையிலேயே பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) மிகவும் புத்திசாலி மட்டுமல்ல சாமார்த்தியசாலியும் கூட. எந்த அளவுக்கு தொண்டர்களை முட்டாளாக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கிறார். ததஜ தொண்டர்கள் அடிமட்ட மடையர்கள் என்பதை வெளியிலிருந்து யாரும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை அவ்வப்போது அவர்களே (ததஜ தொண்டர்கள்) 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொண்டுவருகிறார்கள்.

மற்றவர்களுக்கெல்லம் கணக்கு தெரியாது இவர்களுக்கு மட்டும்தான் கணக்கு தெரியும் என்கிற நினைப்பு இவர்களுக்கு. தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் (6 அல்லது 7 கோடி மக்களும் மத வேறுபாடின்றி) வல்லம் மாநாட்டிலே இருந்தார்கள், அன்றைய தினம் வல்லம் தவிர தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் மற்ற அமைப்பு தலைவர்களுக்கும் மாநாட்டு அழைப்பு கொடுக்கததால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிமையில் கோட்டையில் இருந்து என்ன செய்வது என்று நினைத்து அன்றைய தினம் டெல்லிக்குப்போய்விட்டார் என்று பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொன்னாலும் எந்தவித மறுப்புமின்றி நம்பி, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்கள் 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொள்ள ததஜ தொண்டர்கள் தயார்.

எப்படிப்பட்ட குறைகள்தான் மாநாட்டிலே இருந்தாலும், ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் மாநாட்டிலே இயற்கை தேவைகளை நிறைவுசெய்வதில் எப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும், நாகூர் தர்ஹா குளத்திலே பெண்கள் குளிப்பதை தரங்கெட்ட மனிதர்கள் பார்த்து ரசிப்பதைப்போல ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அந்நிய ஆடவர்களால் ரசித்து இடிக்கப்படுவதைப்பார்த்தும், ஊர்வலம், ஆர்பாட்டகோஷம் என்று சொல்லி ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அவர்களின் மனைவிகள் அந்நிய ஆடவர்களால் இழுக்கப்படுவதும், அவர்களின் மனைவிகள் இடுப்பை - அவர்கள் விடும் குரல் சத்தத்தை ரசிப்பதும் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை நம் ஷரிஅத் சட்டத்திலே இல்லையே என்ற விபரம் அவர்களுக்கு இல்லாததால் அது பற்றிய அபாயம் அவர்களுக்கு தெரியவில்லை.

இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொல்லித்தரவில்லை. இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை சொல்லிவிட்டால் கூட்டம் காண்பிக்க முடியாது என்பதை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) தெளிவாக உணர்ந்திருப்பதால் சொல்லிக்கொடுக்கவில்லை. ததஜ தவிர்த்த மற்ற தமிழக முஸ்லிம்கள் அந்தோ பரிதாபம் என்று நம் சமுதாயப்பெண்களா இவர்கள் - மேற்கத்திய கலாச்சரத்தைவிட மேற்கத்திய ஐரோப்பிய பெண்களைவிட கேவலமாக போய்விட்டார்களே, கணவனுக்கு மட்டுமே (நான்கு சுவருக்கு மத்தியில்) காட்டவேண்டிய உடல் அழகை கணவன் முன்னாலேயே வீதியில் வந்து காட்டுகிறார்களே, கட்டிய மனைவிக்கு முன்னாலே அடுத்தவளின் இடுப்பை பார்க்கக்கூடிய அளவிற்கு தரங்கெட்டுவிட்டார்களே என்று நொந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ததஜ தொண்டர்களின் கருத்தோ எப்படியிருக்கிறது என்றால் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வு என்கிறார்கள். இது விழிப்புணர்வு என்றால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் விழிப்புணர்வுதானே. மக்காவில் மட்டும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்யவில்லையா என்று இவர்கள் கேட்கலாம் ஏன் என்றால் இவர்கள் முட்டாள்கள்தானே நிச்சயம் கேட்பார்கள். அப்படி இவர்கள் கேட்டால் மற்ற இடங்களிலும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்ய குர்ஆன்-ஹதிஸ் ஆதாரம் கேளுங்கள். அப்படி அவர்கள் ஆதாரம் கொடுத்தால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் கூடும் என்றாகிவிடும். அல்லாஹ் நம் சமுதாயத்தை காப்பாற்றுவானாக.

முகமது இலியாஸ்
சென்னை

July 15, 2008

இன்னுமா இந்த அவலம்? - அபு நூறாவுக்கு

எங்கயாவது இருவரோ, இரு குழுக்களோ, இரு இயக்கத்தினரோ, இரு சமய பிரவினரோ, இரு மார்க்க சகோதரரோ இணைந்து விட்டாலோ அல்லது சமாதானமாகிப்போனாலோ அபுநூறா மாதிரி ஆட்களுக்கு எங்கயோ வலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நான்கு கிராமத்து மக்கள் எதன் பெயராலோ ஒன்று கூடியதும் இவர்களுக்கு என்னதான் ஆகுமோ தெரியவில்லை. யாரிடமாவது காட்டி கொடுத்து, போட்டு கொடுத்து விட்ட பிறகு தான் தூக்கமும் நிம்மதியும் வரும் போலிருக்கின்றது. எதன் பெயராலோ இஸ்லாமியர்களிடம் நட்பாக இருப்பது பிடிக்கவில்லையோ அல்லது இவர்களுக்கு அரசியல் பண்ண வழி இல்லாததாலோ தெரியவில்லை. எதார்த்தத்தை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளட்டும். எதார்த்தம் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் மெல்ல மெல்ல திருத்திக்கொள்ளலாம். வளைக்கிறேன் பேர்வழின்னு ஒடித்து விடாதீர்கள்.
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)

இஸ்லாம் அமைதியான மதம் : தலாய்லாமா

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புத்த மதத் துறவி தலாய்லாமா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கிற்கு பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தலாய்லாமா பதிலளித்தார். அமெரிக்கர்களுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்கள் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திவருகின்றனரே என்று கேட்டதற்கு ஒரு நாட்டை மட்டும் மையமாக வைத்து ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது, ஏனெனில் இஸ்லாம் மதம் அமைதியான மதம் என்று அவர் கூறியுள்ளார்.

July 14, 2008

ஆம்புலன்ஸ்க்கு உதவுங்கள்..!

குவைத்தில் தொடர்பு கொள்ள விட்டுக்கட்டி நகர பொருப்பாளர் மஸ்தான் தொலைபேசி - +965 - 9382025

July 12, 2008

வாழ்வு தரும் சிவில் இன்ஜினியரிங்

அந்தஸ்து, பெருமை, விளம்பரம், இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எந்தத் துறை கிடைக்கிறதோ, அதில் சேர்ந்து சிறப்பாகப் பயின்று, பணிபுரிந்தால், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும். நம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் பொறியாளரின் சேவைகள். இந்தியாவில், தென்கிழக்கு ஆசியநாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபுநாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு, உயர்தர வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering.

Civil படித்துவிட்டு, என்னமாதிரி வேலை செய்யலாம்? பலருக்கு இந்தக் கல்வியின் கவனம் திரும்பாதது, அறியாமையின் அவதாரம். சிவில் இன்ஜினியர் என்றால் வீடுகட்டுபவர், அல்லது கஙிஈ போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒரு தலைப்பட்சக்கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும்? என்ன மாதிரி ?
கட்டடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor), நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor), கட்டடம், இடம் வடிவம் செய்பவர் (Design Engineer), இடப் பொறியாளர் (Site Engineer), திட்ட மேலாளர் (Project Manager), பாலம்கட்டும் பொறியாளர் (Bridges Engineer), சாலைப் பொறியாளர் (Road Engineer), போக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer) கடல் வாழ் கட்டடம் அமைப்பவர் (Marine Construction), பூகோள-நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer), ஒப்பந்த மேலாளர் (Contract Manager) வாணிப மேலாளர் (Commercial Manager), உற்பத்தியாளர் (Producer), ஒப்பந்தக்காரர் (Contractor), யோசனை - டிராயிங், கட்டட சூப்பர்விசன் செய்பவர் (consultant) இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம்.

"Quantity Surveyor" படிப்பு பற்றிபார்க்கலாம். தகுதி BE Civil Engineering. or DCE (Diploma in Civil, with 3 years experience) துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் Rs.2லட்சம் அதிக பட்சம் Rs.4லட்சம் மாதம். QS/ QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை ?

திட்டம் சம்பந்தப்பட்ட, வடிவங்களைப் படித்து சரிசெய்தல் (Review), கட்டடம், திட்டம், சம்பந்தப்பட்ட, புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை, படித்து அதுசம்பந்தப்பட்ட , சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல். மனிதவளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு, திட்டம் தயாரிப்பது., செய்யத்தக்க செயல் முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies), தயாரிப்பது, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல், வேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு, பணம் செட்டில் செய்தல், பட்ஜெட் விபரங்களை தயாரித்தல், ஒப்பந்ததாரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல், மதிப்பிடுசெய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல், வேலைநடக்கும் இடங்களுக்கு (Field Visit) சென்று திட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, Mechanical/Electrical வேலைகளின் பிறசேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல்.
மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்:- BE Civil/Diploma Civil, நாட்டில் உள்ள கட்டட வேலைகளின் விபரம், பொருட்களின் தரம், விலை சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல் மனிதவளம் செலவுகளைச் கணக்கிடுதல் வேண்டும். மற்றநாடுகளான, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில், Bachelor degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள்.

BE Civil படித்து, இதேவேலையை எடுத்துக் கொள்ளலாம். Indian Quantity surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு, வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். WEBSITE ல் IQSA சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம்.
வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்களிடமிருந்து "கையூட்டு' பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். (Intergrity)

BE Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது!

QS சம்பந்தப்பட்ட விபரங்களை, கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveryors (RICS). National Institue of Construction Management and research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல் பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம், கட்டட வேலைகள் நடக்கும், இடத்திற்குச் சென்று பார்வையிடலாம். கொத்தனார், தச்சர், பிட்டர் போறவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள், கட்டாயமாக, பீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials கட்டடப் பொருட்கள் இயந்திரங்கள், இதில்உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து, படிக்கும் பொழுது பணத்தாசை கொள்ளாதீர்கள்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல போதனைகளையும், ஒழுக்கங்களையும் வளர்கக வேண்டும். படிப்பு, கல்வி, வளர்ச்சிகளை, கடுமையாக எடுத்துக் கொண்டுவிட்டால், முன்னேறலாம் தம்பி! உன்வேலைக்கு வெளிநாடு செல்ல வேண்டியதில்லை! சொந்த மண்ணில் சுதந்திரப்புருஷர்களாக, செயல்படலாம். உனக்குதேவை, உன் மனதை ஒரு முனைப்படுத்து எந்தப்படிப்பாகயிருந்தாலும் நிச்சயம் உன்னால் முடியும் ! வெற்றி உமக்கே! இன்ஷா அல்லாஹ்.

July 08, 2008

தமிழக அரசியலில் தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஜுலை 6 அன்று 'தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்' நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் தமுமுக தலைவர் டாக்டர். பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, மவ்லவி அலி அக்பர் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளனமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குறிப்பு: செயற்குழுவில் புதிய அரசியல் கட்சியாக
மக்கள் முன்னேற்றக் கழகம்
உருவாக்குவது என்றும், அதன் கொடி கறுப்பு வெள்ளை கறுப்பு வண்ணமாகவும் இருக்கும் என்றும் மிகுந்த உற்சாகத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டது.