திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அப்துல் ஹக்கீம் திருச்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 7-வது வார்டில் அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட உக்கடை, ரகமத் பள்ளிவாசல் மற்றும் ஹலிபா பள்ளிவாசல் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் உக்கடை, ஜோதி நகர், வடக்கு உக்கடை, மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் குழந்தைகளை கடித்துள்ளது.
ஏராளமான பன்றிகள் இப்பகுதியில் இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தற்போது பன்றி காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில் பன்றிகள் தொல்லையால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே 7-வது வார்டு பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிடித்து அவற்றை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணை செயலாளர் இப்ராகிம்ஷா, கிளை செயலாளர் ஜஹா¢ங்கீர், தமீம் அன்சாரி, மாலிக், ஜமால் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனுவை பெற்று கொண்ட மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment