இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

September 27, 2007

திருச்சியில் 3 முஸ்லிம்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

திருச்சி மரக்கடை வீதியில் உள்ள நத்ஹர்வலி தர்க்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா கடந்த 13-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து மகான் ஹச்ரத் சப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்க்காவை சுத்தம் செய்வது வழக்கம்.
இதற்காக நத்ஹர்வலி தர்க்காவில் இருந்து 500 பேர் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு செல்வார்கள் பிறகு காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் தீர்த்த தண்ணீரை எடுத்து தர்காவுக்கு வருவார்கள். நேற்றும் 500 பேர் காவிரி ஆற்றுக்கு குடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் 10 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்களும் அடக்கம். இன்று அதிகாலை 1.30 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், அண்ணா சிலை எதிரே உள்ள அய்யாளம்மன் படித்துறையில், குவிந்த 500 பேரும் காவிரி ஆற்றில் இறங்கி தண்ணீரை குடத்தில் நிரப்பினர். அப்போது, இருட்டு நேரமானதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீரென்று கூட்ட நெரிசலில் சிலர் காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர். கும்மியிருட்டில் எத்தனைபேர் விழுந்தார்கள் என்று தெரிய வில்லை.
காவிரி ஆற்றுக்குள், விழுந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் சிலர் ஆற்றுக்குள் குதித்து முடிந்தவரை சிலரை காப்பாற்றி கரையில் சேர்த்தனர். சிலரின் கதி மட்டும் என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. அந்த இடத்தில் ஒரே அபாய குரலாக இருந்தது. காவிரி ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணியில் நத்தர்ஷா பள்ளி வாசலை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடும் பணிக்கு பிறகு மாலிக் (வயது 20), என்ற வாலிபரின் உடலை மீட்டனர். இவரது தந்தை ஜாபர்முனபா. முனாபா வெளிநாட்டில் உள்ளார். ஒரே மகன் ஆன மாலிக் தீர்த்தக்குடம் எடுக்க நேர்த்திக்கடன் செய்திருந்தாராம். காவிரி ஆற்றுக்கு சென்ற இடத்தில் பலியாகிவிட்டார். சற்று நேரத்தில் மற்றொருவர் உடலும் மீட்கப்பட்டது.
30 வயது மதிக்கத்தக்க அவர், பெங்களூரைச் சேர்ந்த வர் சந்தனக்கூடு விழாவுக்காக பெங்களூரில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் காவிரி ஆற்றில் விழுந்து பலியாகிவிட்டார். இவரது உடல், தர்க்காவில் வைக்கப்பட்டு உள்ளது. உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் நத்தர்ஷா பள்ளி வாசல் அருகில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த ஷாநிவாஷ் (25) என்ற ஷானு என்பவரும் காவிரி ஆற்றில் மூழ்கிவிட்டார். அவரது உடலை இன்று காலை 11 மணி வரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாலிபர்கள் தேடியும் கிடைக்கவில்லை. உடலை தேடி வருகிறார் கள். ஷாநிவாஸ்க்கு திருமண மாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது.

சந்தனக்கூடு விழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்று3 பக்தர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி கரையில் சோகமாக கூட்டம் திரண்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் 8 பேர் வரை நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 3 பேர் மட்டுமே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 பேர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
நன்றி - மாலைமலர்

September 19, 2007

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையின் தீவிரம் இருந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலையில் மழை விட்டு விட்டு பெய்ததால் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி முதல் பாலத்தை தொட்டுக் கொண்டு தண்ணீர் விழுந்தது. அருவியில் கற்கள், மரக்கிளைகள் வந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

September 18, 2007

இந்திய நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு

இந்திய இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெற உள்ள அகில இந்திய புத்தகக் கண்காட்சியில், மொழிபெயர்ப்பு நூல்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள புல்வாடியில், அரபு நாட்டு பிரதிநிதிகளும், இந்திய பதிப்பீட்டாளர்களும் கூடி, இந்திய நூல்களை மொழி பெயர்ப்பது குறித்து விவாதித்தனர். மொழி பெயர்ப்பு நூல்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ள குழுவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. புத்தகக் கண் காட்சியின் இயக்குனர் ஜமா அல் கியூபைசி, தலைமை அதிகாரி அப்துல்லா கியூபைமி, புத்தக கண்காட்சியின் உதவி இயக்குனரான கிளவ்டியா கைசர் ஆகியோர், பின்னர் நிருபர்களடம் கூறியதாவது: கிட்டத்தட்ட ஐந்தாயிரம் இந்திய நூல்கள் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பதிப்பிக்க திட்டம் கொண்டுவரப்படும். ரவீந்திரநாத் தாகூர் பற்றிய நூல்கள் அரபு மொழியில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. தற்போது, இந்திய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களைத் தவிர, கிளாசிகல் மற்றும் சம காலத்திய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் வேலை நடந்து வருகிறது. புத்தக விற்பனை அதிகாரி கிஷோர் குமார் கூறியதாவது: இந்திய வெளியீட்டாளர் கழகமும், இந்திய பதிப்பாளர் சங்கமும் இணைந்து இவ் விலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.இ.,) 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதனால், அங்கு மொழி பெயர்ப்பு நூல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதால், இரு நாடுகளின் கலாசார உறவும் மேம்படும். டில்லி புத்தகக் கண்காட்சியிலும் இதற்கான விளம்பரம் செய்யப்பட்டு, ஸ்டால் போடப்பட்டு, இந்நூல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனு - புது ஐடியா

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆன, ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. சேதுசமுத்திர திட்டத்துக்கு, மாற்றுப் பாதை பற்றி பரிசீலிக்கவும் தயார் என்றும் அறிவித்து உள்ளது. -இது பத்திரிக்கைச் செய்தி.
கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை முடக்குவது உண்மையான வந்தேறிகளா? இல்லை இந்திய நாட்டின் குடிமகன்களா? என்பதில் சந்தேகம் எழுகிறது. 850 ஆண்டுகாலம் இந்திய நாட்டை ஆண்டதற்கான ஆதாரங்கள் இன்றும் பசுமை மாறாமல் வானளாவி நிற்கின்றது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கூட இதே ஆரிய ராமரின் பெயரால் ஓர் அயோக்கியத்தனத்தை அரங்கேற் றினார்கள். 15 ஆண்டுகள் கழித்து இவர்களின் கற்பனை கதைகளை கலாச் சாரமாக்க மீண்டும் ஒரு நாடகத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு. இதில் இந்து மதத்தின் மீது மட்டும் கரிசனம் காட்டுவது ஏன். வந்தேறிகளால் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பகரமாக ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். கொளுத்தப்பட்ட கிறுத்துவப் பாதிரியாருக்கு பகரமாகவும் ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். 100 சதவீதம் வந்தேறிகளால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி. காவி பயங்கரவாதிகளால் சாம்பலாக்கப்பட்ட பாதிரியார். அதற்கு பதிலாக 3.5 + 3.5 எங்களுக்குள்ள பங்கில் பாலத்தை இடித்து கொள்கிறோம்.

இன்னும் அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தோமானால், இன்று ராமர் பாலம் என்று வந்தேறிகளால் கூறப்படும் அந்த இடம் 1,40,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே சமதளமாக குறுக்கே கடல் நீர் புகாமல் விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தது. இந்திய வம்ச வழி வந்த எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் இலங்கையில் திருமணம் முடித்தார். அப்போது அவருக்கு சீதனமாக வழங்கப்பட்டதே அந்த இடம். அப்போது இலங்கையை ஆண்டு வந்த இவர்களால் இராவணன் என அழைக்கப்படும் மன்னர் நிலவழங்கி பாண்டியன் என்பவரின் பண்ணை நிலத்திற்கு அடுத்ததாக எங்கள் முப்பாட்டனாரின் நிலம் இருந்தது. சீதையின் அழகில் மயங்கிய மன்னன் நிலவழங்கி பாண்டியன் சீதையை திருமணம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்படுகிறான். வழியில் எங்கள் முப்பாட்டனார் நிலத்தை கடந்து செல்ல அனுமதிக்காக காத்திருக்கும் போது மன்னருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் விருந்து தருவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது எங்களது முப்பாட்டனாரும், மன்னர் நிலவழங்கி பாண்டியனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எங்கள் முப்பாட்டனார் மன்னரிடம், "மன்னா சீதைக்கு சிவபெருமான் ஒரு வரம் தந்துள்ளார் அது பற்றி தாங்களுக்கு ஏதும் விபரம் தெரியுமா?", என்று கேட்டார். அதற்கு மன்னரோ, "அப்படியா அது பற்றி எனக்கேதும் தெரியாது நண்பா..! கொஞ்சம் விளக்குங்களேன்", என மன்னர் கேட்டதற்கு முப்பாட்டனாரோ, "அதாவது சீதையின் விருப்பமில்லாமல் யாரேனும் அவரை தீண்டினால் தீண்டியவர் தலை வெடித்து சிதறிவிடும் என்பதே அந்த வரம்", என்று முப்பாட்டனார் விளக்கினார். விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பிய மன்னர் காட்டுக்கு வந்து சீதையை எந்த வித வற்புறுத்தலும் இன்றி சீதையின் எதிர்ப்பும் இன்றி மன்னரின் தலையும் வெடிக்காமல், அவரது தொடையின் மீதமர்ந்து மகிழ்ச்சியோடு இலங்கை வந்து சேர்ந்தார். (அப்படியென்றால் சிவன் கொடுத்த வரம் பொய்யா) மீண்டும் மூன்று மாத இடைவெளியில் ராமர் அங்கு வருகிறார். இல்லாத கடல் மீது பாலம் கட்ட வானர சேனைகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு உதவிய அணிலின் முதுகில் ராமரால் கோடு போடப்படவும் இல்லை. சமதளப்பரப்பில் நடந்தே ராமர் வந்தார் எங்கள் முப்பாட்டனார் வசம் அனுமதி பெற்று நிலத்தை கடந்து இலங்கைக்குள் சென்றார்கள். மன்னரைக்கொன்று சீதையை திரும்ப அழைத்துச் சென்றார்கள். கட்டிய மனைவியை அத்துவானக்காட்டில் கோடு போட்டு வைத்து விட்டு கணவன் சென்றுவிட்டான். அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து தன் தாயின் அரவணைப்பில் வைத்தான் மன்னன் நிலவழங்கி பாண்டியன்.

மொத்தம் நான்கு முறை இந்தியா – இலங்கை தரைப்பகுதியை கடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை கூட பாலம் தேவைப் படவில்லை. இவர்களின் முதல் இராமாயணத்தில் இந்த நிகழ்வுகளெல்லாம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள். நாசாவிலிருந்து எடுத்த புகைப்படம் என்னவென்றால் எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தரின் மகனார் மஸ்தான் எள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் காலத்தில் இந்த ராமர்-ராவணர் சண்டையெல்லாம் முடிந்து விட்டதால் போரடிக்கும் நேரத்தில் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றை உறுவாக்கினார். பல அடி உயரத்தில் பல கிலோ மீட்டர்கள் நீளத்தில் ராட்சத மைதானம் அது. அதுதான் பாலம் போல் தெரிந்திருக்கிறது. பிறகு 40,000 வருடங்களுக்கு முன் நம் நெஞ்சை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் ஆம், கடல் கொந்தளிப்பு, இலங்கைக்கும்-இந்தியாவிற்கும் இடையே இறைவனால் பேடப்பட்ட பெருந்திரை. அந்த கொந்தளிப்பின் போது முப்பாட்டனாரின் நிலப்பத்திரம், மூலப்பத்திரம், அவரின் மாமனாரின் உயில், முதல் இராமாயணத்தின் நகல் எல்லாமே அடித்துச் சென்று விட்டது. இன்றும் கூட இந்திய-இலங்கை வான் எல்லையில் பறக்கும் போது கடல் பகுதியை பார்த்தால் ஆங்காங்கே கோல்ப் விளையாட்டு மைதானங்கள் இருப்பது தெரியவரும். வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்களான இவர்களின் இந்த இராமாயணம் இரண்டாவதாக 25,000 ஆண்டுக்கு முன்பு வால்மீகி அவர்களால் எழுதப்பட்டது. வால்மீகி காலத்திலெல்லாம் இந்தியாவும்-இலங்கையும் பிரிந்து 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. வால்மீகி காலத்தில் இந்தியா-இலங்கை நடுவே கடல்நீர் இருந்ததால் லாஜிக் இடிக்கக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு பாலம் கட்டி போனதாக கதையில் எழுதி விட்டார். ஒரு பேச்சுக்கு பாலம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் காவிகளின் சுயலாபத்திற்காக நாங்கள் பாபர் மஸ்ஜிதை இழந்தோமல்லவா அதுபோல மக்களின் பொதுலாபத்திற்காக இவர்கள் பாலத்தை இழக்கட்டுமே. அதுவன்றி பாலம் தான் முக்கியமெனக் கருதினால் முதலில் பாபர் மஸ்ஜிதை கட்டி கொடுத்துவிட்டு பிறகு பாலத்தை பாதுகாக்கட்டும். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்காக யார் எங்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்?. இனி இவர்கள் மன்னிப்பு கேட்டால் நாங்களும் கேட்போம் இல்லாத பாலத்தை இடித்துவிட்டு.
நன்றி.

விநாயகர் ஊர்வலத்தை செல்ல விடாமல் தடுத்த

மனிதநீதி பாசறை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு பாறைபட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை தெருக்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது சிலர் கல் மற்றும் செருப்புகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மறியல் உட்பட பல சம்பவங்கள் நடந்ததால் பதட்டம் நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பாறைபட்டி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு கோட்டை குளத்தில் விசர்ஜனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சிலை பாறைபட்டியில் இருந்து ஊர்வலமாக பேகம்பூர் வழியாக வந்த போது, மனித நீதிபாசறை, தமிழ்நாடு முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த 60 பேர் கோஷங்களை எழுப்பியவாறு விநாயகர் சிலையை மறித்தனர்.

இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டி.ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., பாரி ஆகியோர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் மாலை 4 மணிக்கு இந்து முன்னணி சார்பில் 45 விநாயகர் சிலைகள் திருவள்ளூவர் சாலை, ஆர்.எஸ்.ரோடு, சென்ட்ரல் ரோடு, தெற்குரதவீதி வழியாக எடுத்து செல்லப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன், மாநில துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், பா.ஜ., பொது செயலாளர் திருமலைபாலாஜி, ஆடிட்டர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., பாரி, கூடுதல் எஸ்.பி., ஜெயஸ்ரீ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மத மோதலால், தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது, தம்மம்பட்டி மசூதி அருகே விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடந்தது. இதை, முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு கண்டனர். இப்பிரச்னை முடிந்த நிலையில், புதிய பிரச்னை எழுந்தது. தம்மம்பட்டி பஸ்நிலையம் அருகே, "வெங்கடேஷ்வரா' என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகராறு செய்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து, சாலை மறியல் நடந்தது. போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர். பதட்டம் காரணமாக தம்மம்பட்டி வெறிச் சோடிக் கிடக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்கின்றனர்.

September 11, 2007

வேண்டும் தமுமுகவின் வர்த்தகர் அணியின் சாதனைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

புதுப்பொலிவுடன் அமைந்திருக்கும் மேலான தலைமைக்கு, பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இங்கு, குவைத் மண்டலத்தில் வர்த்தகர் அணியை அமைக்க கடந்தவாரம் கூடிய பொதுக்குழு தீர்மானித்துள்ளது. எனவே, வர்த்தகர் அணியின் சாதனைகளை எமக்கு அறியத்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவோ, அல்லது குவைத் பிரதிநிதி சகோ. இப்ராஹிம்-9941211377 இவர் மூலமாகவோ அனுப்பிவையுங்கள். இந்த இணையத்தை பார்வையிடும் நமது தமுமுக வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காத்திருக்கிறோம்
வஸ்ஸலாம்
தமுமுக - குவைத்