இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 22, 2007

எங்கே எங்களது மாமா...?

40 பேர் ஒரே நேரத்தில் தனது குறியில் மிதித்தும் உயிரோடிருக்கும் இரும்பு மனிதர், தென்றல் காற்றுக்கும் தள்ளாடும் மார்க்கண்டேயன், ஜெயலலிதா அவர்களிடமிருந்து பாதுகாப்பு தேடி ஜெயலலிதா அவர்களிடமே தஞ்சமடைந்த கூட்டத்தாரில் ஒருவர், ததஜவின் மாநில பொருளாளர், உங்களால் ASA என்று செல்லமாக அழைக்கக்கூடியவரும், மாமா என்று அழைக்கக்கூடியவருமான ஏ. எஸ். அலாவுதீன் அவர்கள் எங்கே..? என்ன செய்தீர்கள் அவரை..? அவரின் சத்தத்தையே காணோமே, அடக்கி விட்டீர்களா..? இல்லை அடங்கி விட்டாரா..? அண்னண் பி.ஜெ அவர்களே, மச்சான் பாக்கர் அவர்களே எங்கே எங்களது மா..............மா..? வெளிக்கொணருங்கள் எங்கள் சிங்கத்தை, கேட்போம் அந்த சீவாங்குச்சியின் சத்தத்தை.....!

July 21, 2007

கல்வி கற்க உதவிடுவோம்...வாரீர்

கல்வி கற்க உதவிடுவோம்...வாரீர்
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே..,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.., நமது தமுமுக-குவைத் மண்டலத்தின் பல்வேறு அரும்பணிகளில் தற்போது கல்வி உதவிப்பணிகளும் சேர்ந்துள்ளது. மாணவர்களின் தேவைக் கேற்ப அனைவரு க்கும் தற்போது கழகத்திலிருந்து உதவிட இயலாததால் வந்துள்ள விண்ண ப்பங்களுக்கு முழு நிறைவை அளிக்கமுடியாமல் வருத்தத்தில் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, எஞ்சியுள்ள மற்றும் தாமதமாக வந்துள்ள இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே மீதியுள்ளன. இவர்களில் ஒருவர், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர். கப்பல் துறையில் ஒரு பிரிவான G.P Wiring எனும் பிரிவிலும், மற்றவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரான சகோதரி. இவர் B.Sc Computer Science எனும் பாடத்தையும் எடுத்துள்ளார்கள். இவர்களிருவரின் மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டு உதவிடவிரும்பும் சகோதரர்கள் aman_kwt@yahoo அல்லது tmmkkwt@sify.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொண்டால் தக்க விவரங்கள் அளிக்கப்படும். 'சீனதேசம் சென்றேனும சீர்கல்வி பெற்றுவா..! என்பது திருநபியின் அருள்மொழி. எனவே, நபிகளாரின் வாக்கையொட்டி நற்கல்வி பயின்று இறைவனின் அருளால் நல்வாழ்க்கை பெற்றிருக்கும் சான்றோர்ளே, அறிஞர்களே, மார்க்க சிந்தனையாளர்களே, சமூக ஆர்வளேர்களே, சகோதரர்களே இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இவ்விருவருக்கும் இவர்களது கல்விக்காலம் முழுவதுமோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட காலத்திற்குகோ தங்களால் இயன்றளவு உதவிடுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
என்றும் சமுதாயப்பணியில்
தமுமுக - குவைத் மண்டலம்

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்:
அலைகள் மீது சவாரி - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அலைகள் எழும் - விழும். ஆனால் அதன் மீதும் சவாரி செய்வதில் கில்லாடிகள் தமிழக அரசியல்வாதிகள்!!!
நடக்குமோ, நடக்காதோ, தள்ளிப்போடப்படுமோ - தவிர்க்கப்படுமோ என்றெல்லாம் சந்தேகத் தொட்டிலில் ஊஞ்சலாடிய மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற இடைத் தேர்தல் கடைசியில் நடந்தே முடிந்துவிட்டது.
கலைஞர் கூட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்திருக்க 31,000 வாக்கு வித்தியாசத்தில் ஏறக்குறைய 'ஜேக்பொட்டே' அடித்து விட்டார்கள் தி.மு.க.கூட்டணியினர்.
சென்ற தேர்தலில் 57,000 வாக்குகள் பெற்று தொகுதியையும் கைப்பற்றியிருந்த அ.தி.மு.க சுமார் 30,000 வாக்குகள் மட்டுமே பெற்று 27,000 வாக்குகளையும் தொகுதியையும் இழந்துள்ளது.
தி.மு.க. அரசு ஊழல் நிறைந்தது என்றும் அராஜக அரசியல் நடத்துகிறது என்றும் ஜெயலலிதா அம்மையார் நடத்திய அதிரடி அரசியல் தாக்குதல்கள் பொது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய் விட்டதும், வேறு எது பற்றிப் பேசினாலும் இந்த இரண்டைப் பற்றியும் பேச இவருக்கு அருகதை இல்லை என்று இவரது கடந்த கால அரசியலை கணக்குப்போட்ட பொது மக்களின் கணிப்பு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அதே சமயம், திமுக, அதிமுக அணிகள் மாபெரும் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட தனி நபராகக் களமிறங்கிய விஜயகாந்த் சென்ற தேர்தலில் பெற்றதை விட சுமார் நான்காயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தமிழகத்தில் தான் தான் மூன்றாவது சக்தி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் இந்தத் தொகுதியில் இவர் பெற்ற வாக்குகளை விட இப்போது பெற்ற வாக்குகள் சுமார் 4,000 குறைவு என்பதை எண்ணும்போது மூன்றாம் சக்தி என்ற கூற்றை பலரும் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர்தான் என்றாலும் இது திமுகவுக்கும்இ கலைஞருக்கும் கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று சொன்னால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பல்வேறு பழிச் சொற்களுக்கு இலக்கான கலைஞரின் மூத்த மகன் அழகிரிக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது சற்று அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ' அண்ணன் அழகிரி வந்த பிறகுதான் வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொள்வேன் என்று அடம் பிடித்ததும், கலைஞரின் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வேன் என்று தன் கட்சியை விட திமுகவுக்கு தன்னுடைய விசுவாசத்தை பிரகடனப்படுத்தியதையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவும், விஜயகாந்த் கட்சியும் பிரித்ததால்தான் திமுக வெற்றி பெற்றது என்கிற வாதம் முன் வைக்கப் படுகிறது ஆனால் இவை இரண்டுமே சேர்ந்து போட்டியிட்டிருந்தாலும் திமுக கூட்ட்ணி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் என்றுதான் வாக்கு எண்ணிக்கை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
மேலும் திமுக - அதிமுக எதிர்ப்பு வாக்குகள்தான் விஜயகாந்துக்குப் போகின்றன. ஒரு வேளை ஏதாவது கட்சியில் விஜயகாந்த் ஐக்கியமாகும் பட்சத்தில் இது காணாமல் போக வாய்ப்புண்டு.
உண்மையில் வை.கோதான் மூன்றாவது சக்தியாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர் அதிமுக ஜோதியில் ஐக்கியமானதும் அந்த இடத்துக்கு விஜயகாந்த் வந்துவிட்டார் என்று சொல்லலாம் வை.கோ போல இவரும் ஏதாவது கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் விஜயகாந்தும் இந்த இடத்தை இழக்க நேரிடலாம்.
திமுக போய் அதிமுகஇ அதிமுக போய் திமுக என்ற நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாது என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் கணிக்கிறார்கள். ஒரு மூன்றாவது சக்திதான் ஆட்சிக்கு வரும் என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
2011ல் அந்த மூன்றாவது சக்தியாக பாட்டாளி மக்க்ள் கட்சி வரும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மார் தட்டுகிறார். ஆனால் அவரது கட்சிக்கு மாநிலத்தின் வட புலத்தில் உள்ள அபரிமிதமான செல்வாக்கு தென்புலத்தில் இல்லை. அது மட்டுமல்ல அதன் கோட்டையான விருத்தாசலம் தொகுதியையே சென்ற தேர்தலில் அது விஜயகாந்திடம் இழந்துள்ளது. மேலும் வன்னியர்களின் சாதிக் கட்சி என்கிற தோற்றப் பொலிவிலிருந்து மீண்டு வர டாக்டர் பெரிதும் பாடு பட வேண்டியதிருக்கும். தன் சாதியையும் அந்நியப்படுத்தி விடாது, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வது டாக்டருக்கு கம்பிமேல் நடக்கும் கடின வித்தையாக இருக்கும்
வை.கோ - விஜயகாந்த் - இடது சாரிகள் சேர்ந்த ஒரு கூட்டணிக்கு இது சாத்தியமாகலாம். ஆனால் அது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற சமாச்சாரம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சில அத்தைகளுக்கு மீசை முளைக்கவே செய்கிறது.
அடுத்த தேர்தலில் பா.ம.க - திமுக கூட்டணியில் அங்கம் வகிக்காது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. அதற்கு வலு சேர்ப்பதுபோல் 2011 தேர்தலில் பா.ம.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட்டார்.
அதுபோல வை.கோ அதிமுகவில் நீடிக்க மாட்டார் என்பது இப்போதைக்கு ஊகம். ஆனால் இது உண்மையாகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
உள்ளூராட்சி தேர்தலில் ஒப்புக் கொண்டதற்கும் குறைவான இடங்களை ஒதுக்கியது. ஒதுக்கிய இடங்களில் அதிமுக காரர்களையே போட்டியிட வைத்தது. இது பற்றிப் பேச வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் நேர எல்லை கடந்து அனுமதியளித்தது என்பவையெல்லாம் தமிழக அரசியலைப் பொறுத்தவரை சகித்துக் கொள்ளக் கூடிய அவமானம்தான். இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் பிறகு அரசியலே நடத்த முடியாது
ஆனால் ராஜ்ய சபாவில் ஓர் இடம் ஒதுக்காமல் போனது சகித்துக் கொள்ளக் கூடியதல்ல. ஆறு இடங்கள் காலியாகின்றன. நான்கு இடங்களில் திமுக எளிதாக வெற்றி பெற முடியும். அதில் ஒன்றைத் தன் மகள் கனிமொழிக்கும், இன்னொன்றை இளைஞர் அணித் தலைவர் திருச்சி சிவாவுக்கும் கலைஞர் ஒதுக்குகிறார். இருக்கும் இன்னும் இரண்டில் ஒன்று காங்கிரசுக்கும், மற்றொன்று வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போகின்றன.
மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்றில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்னொன்றை கைப்பற்ற இன்னும் சில வாக்குகள் மற்றவர்களிடமிருந்து தேவை. இதை வைத்து கலைஞர் ஓர் அரசியல் சித்து விளையாட்டு விளையாடி இருக்கக் கூடும் ஆனால் தன் மகள் கனிமொழி களத்தில் இருப்பதால் போட்டி என்று வந்தால்
பிரச்னைகளும் கூடவே சிக்கல்களும் வரக்கூடும் என்று கருதி அந்த ஓர் இடத்தை பெருந்தன்மையுடன் கலைஞர் அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ஜெ.அம்மையாரும் முதன் முறையாக கலைஞரை இதற்காகப் பாராட்டுகிறார்.
'போனஸாகக்' கிடைத்த இந்த இடத்தை நல்ல 'பார்லிமெண்டேரியனான' வை.கோவுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்தால் நா.ம. கூட்டணிக் கட்சிகளின் தலைவராகவும் வை.கோவை நியமிக்க வேண்டியது நேரிடலாம். இது அம்மையாருக்கு ஏற்புடையதல்ல என்பது பொதுவான கணிப்பு அதுமட்டுமல்ல, தனக்கு நிகராக யாரும் வளர்வதை அந்த அம்மையார் விரும்புவதில்லை என்பது இது காறும் நாம் கண்டு வந்துள்ள சரித்திரம். அடுத்தவர் தனக்கு நிகராக மேடைகளில் ஆசனம் போட்டு அமர்வதைக் கூட அந்த அம்மையார் அனுமதிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை
வை.கோவை 'புரட்சிப்புயல்' என்கிறார்கள். ஆனால் 'புரட்சிப்புலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புலி கூண்டுகுள்ளேயும் கூட உலாவும் சுபாவமுடையது. அடங்கி இருக்காது. எனவே அது தனது கட்டுத் தளைகளை அறுத்துக்கொண்டு ஒரு நாள் சீறிப்பாயும் என்கிற எதிர்பார்ப்பு இங்கே நிறைய இருக்கிறது. இது என்றோ நடந்திருக்கும். ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட பின்னல்கள் - பிணக்குகள் - பிளவுகள் அவரை நிதானிக்க வைத்திருப்பதாகவும் சிலர் கணக்குப் போடுகிறார்கள்.
இந்த நிலையில்தான் நடிகர் சரத்குமார் இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய புதிய அரசியல் கட்சி தோன்றும் என்று அறிவித்துள்ளார். ரஜினியைப் போலவே சந்தர்ப்பம் வந்த போது நழுவ விட்டு விட்டு வாலை விட்டு தும்பைப் பிடிப்பதையே இவரும் தொடர்கிறாரோ என்கிற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்துள்ளது.
சமூக அமைப்பில் ஒற்றுமைக்கு மிகச் சிறந்த உதாரணம் நாடார் இன மக்கள். ஆனால் அமைப்பு ரீதியாக பல்வேறு பிளவுகளுக்கும் - பிரிவுகளுக்கும் சிறந்த இலக்கணமும் இவர்கள்தான். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு அந்த சமூகத்தை வழி நடத்த POLITICAL HEAVY-WEIGHT எனப்படும் அரசியல் ஜாம்பவான்கள் யாரும் தோன்றவில்லை. குமரி அனந்தன் 'சின்னக்காமராஜர்' என்று சிறிது காலம் வலம் வந்தார். இடையில் இலக்குகள் தவறிப் பயணித்ததால் பாதை மாறிப் போய் தன் வழியில் தானே தடைக் கற்களை ஏற்படுத்திக்கொண்டார்.
நாடார் அமைப்புகளில் காணப்படும் பல்வேறு பிரிவுகள்தான் சரத்குமாரை களம் இறங்க தயங்க வைத்தன. அந்த நிலையில் இன்னும் மாற்றம் எதுவும் இல்லை. எனினும் துணிந்து களம் காண்கிறார். இதற்கு விஜயகாந்த் நாடார் இன மக்களை இலக்கு கொண்டு நெல்லையில் மாநாடு நடத்தியதும், ஆதித்தனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் பொருளாள ராக்கியது மட்டுமல்ல நாடார் இன மக்களின் ஜீவாதார பிரச்னையான கள் இறக்கும் உரிமம் வேண்டும் என்றும் விஜயகாந்த் குரல் கொடுத்தது தான் சரத்குமாரை துயில் கலையச் செய்திருக்கிறது
நாடார் இனத்தைச் சேர்ந்த திமுகவின் தூத்துக்குடி பெரியசாமியும், அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனும் சரத்தை நாடார் மக்களிடையே அரசியல் ரீதியாகத் தலை எடுக்க அனுமதிப்பார்களா என்பது எழும் கேள்வி.
இதற்கிடையில் கலைஞர் இறக்கியுள்ள துருப்புச் சீட்டுகள் சரத்குமாரின் உறக்கத்தை கெடுக்க வல்லவை. தூத்துக்குடி பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை ஆகியோரை மாநில அமைச்சர்களாகவும், காவல்துறை 'என்கவுண்டரில்' உயிரிழந்த வெங்கடேசப் பண்ணையாரின் துணைவி ராதிகா செல்வியை மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நாடார் இன மக்களின் பெருத்த அன்பிற்கும் அபிமானத்துக்கும் கலைஞர் ஆளாகியுள்ளார்.
இவற்றை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கலைஞர் தன் மகள் கனிமொழியை மத்திய மேல் சபை உறுப்பினராக அறிவித்ததும் அதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட முதல் அமைப்பு ஒரு நாடார் இன அமைப்புதான் அவர்கள் கூற்றுப்படி கலைஞரின் இரண்டாவது துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடார் இனத்தைச் சேர்ந்தவர். எனவே கனிமொழியும் நாடார் இனத்தவர் என்பது அவர்களது வாதம்.
இது போக, சரத்குமார் மதுரைப் பகுதியில் பிறந்தவர் என்றாலும் விருதுநகர்-சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த வணிக வைசிய நாடார்கள் சரத்தை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. தெற்கிலுள்ள தக்ஷ்ணமாற நாடார் அமைப்புகளில் எந்த அமைப்பு அல்லது எத்தனை அமைப்புகள் சரத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதும் கண்டு அறிய வேண்டிய ஒன்று. அது காலத்தின் தீர்ப்பாகவும் இருக்கும். ஆக, சலசலப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் சரக்குக்கு நிச்சயம் பஞ்சமிருக்கும்.
தமிழக அரசியலில் வருங்காலங்களில் பல சூடும் சுவையும் நிறைந்த திருப்பங்களை எதிர்பார்க்கலாம். Survival of the Fittest - தகுதி உள்ளவன் மட்டுமே தாக்குப்பிடிப்பான் - என்கிற இந்த ஆதிக்கப் போட்டியில் யார், யார் நிற்பார்கள், யார், யார் நிலைப்பார்கள், யார், யார் நினைவில் மட்டுமே இடம் பெறுவார்கள் என்பது கேள்வி ! பதில் ? - யாமறியோம் பராபரமே!!!

July 16, 2007

ஸ்டெப்ஸ் - ஷரீஃபா அவர்களுக்கு

தாங்கள் பெண்களுக்கான 'தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாஅத்' என்ற பெயரில் நெல்லையில் நடத்திய உண்ணாவிரதம் பற்றிய தகவல்கள் அறிந்தோம். அப்போழுது தாங்கள் பேசிய பேச்சுக்களும், பேசியவிதமும் தங்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. இஸ்லாமியப் பெண்ணிற்கு இஸ்லாமும், குர்ஆனும் பல்வேறு உரிமைகளையும், கடமைகளையும் வகுத்துத் தந்துள்ளது. அதே நேரம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இவ்வாறு ஏக இறைவன் அல்லாஹுத்தஆலாவால் ஏற்படுத்தித் தந்துள்ள சில பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும்பொழுது தான் ஒரு பெண் எல்லாநிலையிலும், எல்லோராலும் மதிக்கக்கூடிய, போற்றக் கூடியவளாக இருப்பாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதைவிடுத்து, பன்நெடுங்காலமாகவே முஸ்லிம் விரோத பாசிஸ சக்திகளிடம் விலை போனவர்கள் பல்வேறுபட்ட கொள்கைக் குழப்பங்களை உண்டாக்கி நமது சமுதாயத்தை பாகுபடுத்தி, கூறுபடுத்தி, வேறுபடுத்தி வைத்திருக்கின்றனர். இன்னும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற பாசிஸ சக்திகளுக்கு மத்தியில், நமக்குள் உட்கார்ந்து பேசிதீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களைக்கூட மேடைபோட்டு, மைக் வைத்து கூப்பாடு போட வேண்டுமா..? அதை அந்நிய ஆடவர்களும், கேமராக்களும் சுற்றி வந்து படம் பிடிக்கத்தான் வேண்டுமா..? அதை பிரசுரிக்கின்ற பத்திரிக்கைகளும், அதை பார்க்கின்ற, படிக்கின்ற முகம் தெரியாத ஆண்களும் என்னென்ன கற்பனைகள் செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா..?
நீங்கள் உங்களை அவமதித்து அடிமைபடுத்திய ஜமாஅத் என்று எந்த ஜமாஅத்தைக்கூறுகிறீர்கள். மஹரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது என்னவென்று தெரியுமா..? இன்றும் கூட இஸ்லாமி விரோத மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய ஆண், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களை எதிர்க்க ரோட்டுக்கு வரும் பெண்கள் கூட ஹிஜாப் என்ற கவசத்துடனே பிரவேசிக்கிறார்கள். ஆனால், நீங்களோ புடவையை இழுத்துச் சொருகிக் கொண்டு குழாயடிச் சண்டைக்கு வருவது போல் மைக் முன்பு நிற்கிறீர்கள். உலகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்களோடு உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.
ஏறத்தாழ எல்ல மஹல்லாக்களிலும் பெண்களுக்கான பயிற்சிகள், இல்லற ஒழுக்கம், பெண்கள் பயான், போட்டிகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் எல்லா ஜமாஅத்துகள் மூலமாகவும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. பள்ளியோடும், மஹல்லா ஜமாஅத்தோடும், மார்க்கத்தோடும் சிறிதேனும் நெருங்கி வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலான ஊர்களிலெல்லாம் பெண்கள் ஜமாஅத் என்று 3 நாட்களுக்கு பக்கத்து ஊர்களுக்கு செல்வார்கள், வருவார்கள். பெண்களுக்கு உண்டான எந்த பிரச்சனைகளையும் கேட்டு தங்களது கணவன்மார்களிடம் சொல்லி பிரச்சனைக்குள்ளான பெண்களின் கணவன்மார்களிடம் பேசச்சொல்லி எவ்வளவோ பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறார்கள். ஷெரிஃபா அவர்களே நீங்களும், உங்களுடன் உள்ளவர்களும் ஒரு 3 அல்லது 40 நாள் பெண்களுக்கான தப்லீக் ஜமாஅத்தில் சென்று வாருங்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், 'மார்க்க செயல்பாட்டில் குறைபாடு கொண்டவர்களாகவும், அறிவில் குறைபாடு கொண்டவர்களாகவும் இருந்து உறுதியான மனிதனொருவனின் அறிவையும் போக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒருவரை நான் காணவில்லை' என்று, அப்போது பெண்கள், 'அல்லாஹ்வின் தூதரே..! அறிவுக் குறைபாடு மார்;கக செயல்பாட்டில் குறைவு என்பதன் மூலம் எதனை நீங்கள் கருதுகின்றீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தில் பாதியல்லவா' என வினவ 'ஆம்' என பெண்கள் பதில் கூறினர். 'அதுவே அவர்களது குறைவைக் காட்டுகின்றது' என்றார் இறைத்தூதர் (ஸல்). 'மாதவிடாய்க் காலத்தில் அவள் நோன்பு பிடிக்கவோ, தொழவோ மாட்டாள் அல்லவா..,' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வினவ பெண்கள் 'ஆம்' என்றனர். 'இது அவளது மார்க்க செயல்பாட்டில் உள்ள குறைவைக் காட்டுகின்றது' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். இது ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
அதே நேரத்தில் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்களை பரிகசிப்பதும் பிழையான செயலாகும். ஏனெனில் இறைத்தூதர் இப்படியும் சொல்லியிருக்கிறார்கள். ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்.'' (இப்னுமாஜா) என்றும் இருப்பதனால், பெண்களது பிரச்சனைகளை ரோட்டுக்குக் கொண்டு சொல்ல அனுமதியளித்த இவர்களின் கணவன்மார்கள் சிந்திக்க வேண்டும்.
இன்னும் ஷெரிஃபா அவர்களே, உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களும், நீங்கள் தேடிய ஆதாரங்களினாலும் தங்கள் செய்வது தான் சரியான வழி என நினைத்தால் உங்கள் ஊர்களில் உள்ள பெரும்பான்மை பெற்ற, ஆண்கள் நிர்வாகிக்கும் இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அவ்வியக்கங்கள் நடத்தும் சமுதாய முன்னேற்றத்திற்கும், உரிமைக் குமான ஆர்பாட்டங்கள், போரட்டங்கள், மறியல்கள், தர்ணாக்கள் போன்ற எல்லாவற்றிலும் கணவன்மார்களின் முழுச் சம்மதத்தோடு அவர்களின் பெண்களும் கலந்து கொள்வதனால் அவர்களுக்குரிய முழுப்பாதுகாப்பையும், பொருப்யையும் கணவன்மார்களால் கொடுக்க முடிகிறது. அதேபோல் உங்களுடைய, உங்களுடன் இருப்பவர்களுடைய கணவன்மார்களையும் உங்கள் ஊர்களில் உள்ள இயக்கங்களில் இணைத்துக்கொள்ளச்செய்து அதன் மூலம் உங்களது பிரச்சனைகளை வெளிக் கொணருங்கள். நன்மையை நாடி நீங்கள் நடத்திய பெண்களுக்கான உரிமைப்போராட்டங்கள் உங்கள் தலைமையில் நடத்தப்பட்டு அதன்மூலம் நீங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருந்தால் அதற்குண்டான கூலி மறுமையில் இன்ஷாஅல்லாஹ் உண்டு. ஆனால், நீங்கள் சென்ற வழிமுறை மற்றும் இஸ்லாமிய சட்ட மீறல்களுடன் இருந்தால் இறைவனால் பலமாக தண்டிக்கப்படுவீர்கள். ஏனெனில் மிக அத்தியாவசியத் தேவை இருந்தாலன்றி ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுதல் கூடாதென அல்லாஹ் கூறுகின்றான், ''அவர்கள் (பெண்கள்) தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக் கட்டும், ஆரம்ப ஜாஹிலிய்ய நிலை போன்று தமது அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' எனறு இவ்வசனம் இரு கருத்துக்களைத் தருகின்றது :
முதலாவது, ஒரு முஸ்லிம் பெண், வீட்டில் இருக்கும் போது தான் மன அமைதியையும் பூரண திருப்தியையும் பெறுகிறாள். ஏனெனில் அப்போது தான் அவள் அல்லாஹ் பெண்ணில் படைத்து விட்;ட இயற்கை உணர்வோடு ஒத்துப் போகும் பணியில் ஈடுபடுகின்றாள். அப்போது தனது பணியை மிகச் சரியாக நிறைவேற்றுகிறாள். பெண் வீட்டிலிருப்பதை ஒரு நிர்ப்பந்தமாக கருதி வீட்டை விட்டு வெளியேறுவதை விரும்புவார் களாயின் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாக அமையும். மேலும் தனது வீட்டுக் கடமைகளிலும் தோல்வி அடைவாள்.
இரண்டாவது, ''ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' என்ற வசனத்தின் அடுத்த பகுதி சொல்லுகிறது. ஒரு பெண் வீட்டில் தன் கணவனுக்கு மட்டும் அழகுகளைக் காட்டுவது ஜாஹிலிய்ய பண்பா? அல்லது சிறந்த முறையா? உண்மையில் வீட்டுக்கு வெளியே செல்லும் போது அழகுகள் வெளித் தெரிய நடந்து கொள்ளுவது தான் ஹராமாகும். இந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண் அடிப்படையில் வீட்டில் இருந்து தன் பணிகளை நிறைவேற்ற வேண்டும். ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டால் ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டி நடந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து குறிப்பிட்ட இறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறும் போது அழகுகளை வெளிக்காட்டக் கூடாது என்று இறைவசனம் கூறுவதனூடாக, அனுமதிக்கப்பட்ட காரணத்திற்காக உரிய முறையில் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற கருத்தையும் பெற முடிகின்றது. அந்த வகையில் ஷரீஅத்தில் வாஜிபான ஒரு காரியத்தை நிறைவேற்ற ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறல் வாஜிபாகும். முபாஹான காரியத்தை நிறைவேற்ற வெளியேறல் முபாஹ் ஆகும். மக்ரூஹ் அல்லது ஹராமான காரியத்தில் ஈடுபட வெளியேறினால் அது மக்ரூஹாக அல்லது ஹராமாக அமையும். எனவே இஸ்லாமியப் பணிக்காக வீட்டை விட்டு வெளியே றுவதும் அப்பணியின் சட்ட நிலைகளைப் பொறுத்து வாஜிபாகவோ, சுன்னத்தாகவோ அமையலாம்.
''அல்குர்ஆன் பெண்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கிவிட்டது எனவும், ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அப்படி பெண்களை அடிமைப்படுத்துவதற்கு மார்க்கத்தையும், குர்ஆனையும் ஆண்கள் முகமூடிகளாகப் பயன்படுத் திக்கொள்கின்றனர். குர்ஆனில் பெண்களுக்குக் கல்வி, திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் மறுக்கப்பட்டிருக்கின்றன...,'' இவையெல்லாம் நீங்கள் பேசியவைதான்.
குர்ஆன் கூறுகிறது, எங்களது உரிமைகளை கொடுங்கள் என்று கூப்பாடு போடும் நீங்கள், அதைப் பெற்றுக்கொள்ள அழகான வழிமுறைகளை கையாண்டீர்களா என்றால் இல்லை. ஏனெனில், இஸ்லாமிய சிந்தனையில் கவனம் செலுத்து வதற்காக உங்கள் வீட்டில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும்; நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட அந்த நேரத்தில் கணவன், பிள்ளைகள் அனைவரும் உட்கார்ந்து குர்ஆனை ஓதி, விளங்கி ஷரீஅத்தின் சட்டதிட்டங் களையும், உரிமைகளையும் உங்கள் வீட்டில் பெற்று கொண்டிருப்பதன் மூலமாகத்தானே மற்றவர்களின், சமூகத்தின் பிரச்சனைகளைக் களைய முடியும். அவ்வாறு செய்திருக் கிறீர்களா..? தன் வீட்டில் ஓர் அழகிய இஸ்லாமிய சூழலைப் பெற்றுள்ள பெண் தான் ஏனைய பெண்களுக்கு மிகவும் தேவையாக உள்ளாள். எனவே இத்தகைய பெண், பெண்கள் பகுதியில் உழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வது ஏனைய பெண்களை விட ஒருபடி கூடுதலாக கடமையாகிறது.
நீங்களும், உங்கள் பின்னால் உள்ள ஒவ்வொருவரும் கீழ்வரும் கேள்விகளை மனந்திறந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதோடு அதற்கான தெளிவான பதில்களையும் தேடிக் கொள்ள வேண்டும்.
  • நான் இஸ்லாத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதில் உண்மையான நாட்டமும் எண்ணமும் கொண்டுள்ளேனா?
  • எனது நேரம் எனது தேவை இவை அனைத்திலும் இஸ்லாத்திற்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேனா?
  • இஸ்லாமியப் பணிக்காக உலக இன்பங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்க நான் தயாராக உள்ளேனா?
  • இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவது, இஸ்லாமிய நாகரீகத்தை உருவாக்குவது ஆண் இன்றி பெண்ணினால் மாத்திரம் சாத்தியமாகுமா?
  • எமது கணவரும் ஆண்மக்களும் கலந்து கொள்ளாமல் ஆண்களிடையே, பெண்களுக்கான இஸ்லாமிய எழுச்சி பெற முடியுமா?
  • எமது உரிமைகள் சிலவற்றை நாம் விட்டுக் கொடுக்காமல் அல்லது வீட்டு வேலைகள் சிலவற்றில் நாம் பங்கு கொள்ளாமல், போராட்டத்தில் கலந்து கொள்ளுதல் சாத்திய மாகுமா?
  • நாம் எமது சுயநலப் போக்கால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேவைகளுக்கு, அவர்களின் மனைவியர்கள் எவ்வாறு உதவினார்களோ அவ்வாறு நாமும் நமது கணவன்மார்களுக்கு உதவுகின்றோமா..?

இது போன்ற கேள்விகளுக்கு உண்மையான விடை தேடிக்கொண்டு பிறகு உங்களது உரிமைகளையும், தேவைகளையும் தேடுங்கள்.
மேற்சொன்ன கருத்துகளையெல்லாம் சிந்தித்து, ஆராய்ந்து மார்க்க அறிஞர்களிடமும், இயக்கத் தலைவர்களிடமும் கலந்தாலோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். ''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது'' என்று பிரகடனம் செய்தவர்களே தங்கள் ஜமாஅத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவதை வன்மையாக கண்டித்து வருகின்ற இவ்வேளையில் நீங்கள் தனித்து ஆண்கள் துணையின்றி மார்க்கத்திற்கு முரணான (ஹிஜாப் இன்றியும், மஹரத்தை பேணாத) வகையில் போராடுவது எவ்வகையில் நியாயம் என்று கூறுங்கள். (உங்கள் உடம்பு இளைக்க ஊர் பெண்களையும் ஏன் பட்டினி போடுகிறீர்கள்.)

July 11, 2007

ஜனநாயகத்தை தேடிய தீவிரவாதத்தின் பயணங்கள்..!

ஜனநாயகம் - இது மக்களால், மக்களில், மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைமை. தலைமைகள் என்ன ஆரோக் கியமாகவா இருக்கின்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பதவி வகிப்பவர்களுக்கு குறைந்த பட்ச தகுதி என்னவென்றால், அவர் மீது ஏதாவது ஒரு வகையிலாவது கிரிமினல் வழக்கு பதிவாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் எங்கும் ஓட்டு பதிவானது கிடையாது. ஆக, 40 சதவீதம் பேர்கள் தேர்தல்முறையை விட்டே விலகி நிற்கின்றார்கள். மீதி 60 சதவீதம் பேர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்கின்றார்கள். குறைந்தது மூன்று கட்சிகள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியாக ஒரு கட்சிக்கு 20 சதவீத ஓட்டு என்றால், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓட்டளித்தவர்கள் 20 சதவீதம் என்றாகின்றது. ஆக, ஜனநாயகம் என்பது 80 சதவீதம் பேர் வெறுப்பில் 20 சதவீதம் பேரின் விருப்பம் நிறைவேறுகின்றது.
இதுதான் ஜனநாயகம் என்றால், முரண்பாடுகள் தான் முதலாக அமையும். ஏனெனில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பது என்பது, அறுதிப் பெரும்பான்மையின் வெறுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று தான் அர்த்தமாகின்றது.
ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகள், நாடுகள் சந்தித்த பிரச்னைகள், அங்கே ஜனநாயகம் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றார்கள், அவர்களுக்கு சுவாசத்தை மீட்டுத் தரப் போகின்றோம் என்றார்கள். ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன. என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார்.
மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது. சரி.., மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை.
அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.
யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.
நமது பக்கத்து நாடு.., நேபாளம். மன்னராட்சி அறிமுகம். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு..! என்ன செய்ய.., அமெரிக்கா மன்னராட்சிக்கு மலர்வளையம் வைக்கின்றது, நவீன ஆயுதங்கள் இறக்குமதியாகின்றன.
பங்களாதேஷில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுகின்றது. மன்மோகன் சிங் குதிக்கின்றார். சார்க் மாநாட்டுக்கு நான் போக மாட்டேன். ஜனநாயகம் மலர வேண்டும். நல்ல காரணம், நல்ல நோக்கம் தான். என்ன செய்ய கொள்கைப் பிடிப்பு தளர்கின்றதே..?
சற்று எட்ட தூரத்தில் பர்மா..! இராணுவ ஆட்சி.., ஜனநாயகத்திற்குப் போராடும் ஒரு பெண்மணி, வீட்டுக் காவலில்.., சார்க் மாநாட்டுக்குப் போகாத மன்மோகன் சிங்கின் அமைச்சர், இராணுவ ஆட்சி நடக்கும் பர்மாவிற்கு ஒப்பந்தம் போடப்போகின்றார், ஏன்.., பர்மா, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக..! ஏன்..! அங்கு விளையும் ஓபியம் என்ற கஞ்சா தான் இன்றைக்கு உலக வல்லரசின் உளவுத் துறைக்கே தீணி போடுவதாக வேறு பிரச்சாரம் அந்த நாட்டிலேயே வெகுவேகமாக நடக்கின்றது. அதன் முன்னாள் தலைவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். மனித விரோத, சர்வாதிகார இராணுவ ஆட்சியுடன் எப்படி ஒப்பந்தம் போடுகின்றோம்.
ஆனால் பக்கத்தில் பாகிஸ்தானில் மட்டும் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை என்று தினம் அரைப்பக்கத்துக்கு செய்தி வாசிக்கின்றோம்.., முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் ஜனநாயகமோ..?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசூலா அதிபர் அவ்வப்பொழுது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப் படுகின்றார். அவரைக் கவிழ்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
கியூபா.. பிடரல் காஸ்ட்ரோ.., அவரையும் மக்கள் நேசிக்கின்றார்கள். இருந்தும் என்ன? நான் நேசிக்கவில்லையே..! என்கிறார்.., பின்னே என்ன அங்கும் தீவிரவாதத்திற்கு பயிற்சி.., ஆயுத சப்ளை.. என்ற குற்றச்சாட்டு.
இப்படியே போய்.., இப்பொழுது ஈரான், சிரியா அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளில்லாத விமானம் ஈரானின் மீது பறந்து கொண்டு எங்கே ஆதாரம் கிட்டதா என்று அலைகின்றது. அந்நிய நாட்டின் வான் எல்லை மீறப்படுகின்றது. அந்நிய நாட்டின் இறையாண்மை தூக்கி எறிப்படுகின்றது.
மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.
பக்கத்து நாட்டின் மீது போட்டுத் தாக்க ஒரு நாடு அணுஆயுதம் தயாரித்தால் அது ராஜ தந்திரம்.., ஆனால் தனி மனிதன் வெடிக்காத பட்டாசை கையில் வைத்திருந்தால் அது தீவிரவாதம். இப்பொழுது புரிகின்றதா.., ஆட்சி, அதிகாரம், ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், அந்த சமூகம் எந்தவித உணர்ச்சியையோ எதனையும் அது வெளிக்காட்டக் கூடாது. புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன்.., காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.
ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு..
இவ்வளவு ஏன் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஜெர்மனியில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஹிட்லர் அரிதப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத்தின் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரண கர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டி யாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.
ஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப்பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.
ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல் லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்பிரிக்கப் பிரதே சத்தில் ஃபிரான்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவ ருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டிய தேற்பட்டது.
ஆனால், வரலாறு நெடுகிலும் எந்தவொரு போர்ப் பிரகடனத்தையும் முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள், தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள், குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின் றார்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.
ஹிட்லரை மேற்க்கத்திய நாடுகள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் ஹிட்லர் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.
உண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர் களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பார்க்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.
ஏனெனில், இறுதி வரைக்கும் முஸ்லிம்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். பனி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகராவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.
இன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..!
நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத்தாகம் அவ்வப்பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்றுவிடக்கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.
அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள், நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள், பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
ரஷ்யாவை எதிர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட பின்லாடன் அப்போது விடுதலை வீரர், இப்போது தேடிக் கொல்ல வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.
யூதர்களைப் படுகொலை செய்தார் என்பதனால் ஹிட்லரை அழித்ததில் நியாயம் இருக்கின்றது. சைபீரிய மரணப் படுகொலை முகாம்களில் மனித நர வேட்டை நடத்தியது ரஷ்யா என்பதனால் அதனை அழித்ததிலும் நியாயம் இருக்கின்றது. முஸ்லிம்கள் யாரை எதனை அழித்தார்கள்? எதற்காக இந்த வெறியாட்டம் நடக்கின்றது?
அமெரிக்காவுக்குச் சொந்தமான பியர்ள் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காக ஹிரோஷிமா - நாகஸாகியில் அணு குண்டுகளைப் போட்டோம் என்றாலும்.., வாதத்திற்காக தலையை ஆட்டி வைக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் அமெரிக்காவின் எந்த ஹார்பரையும் அழிக்கவில்லை,
செப்டம்பர் 11 தாக்குதல் கூட, அதன் விசாரணை அறிக்கையின் உண்மை என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த பொழுது ஸவூதி அரேபியாவின் பெயர் அதிகம் அடிபட்டது. சமீபத்தில் ஸவூதியின் தலையீடு இதில் இல்லை என்று அமெரிக்காவே கூறி விட்டது. பின்னர்.., முஸ்லிம்களின் மீது ஏனிந்தப் போர்..!
அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அவர்களிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.
அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இஸ்லாத்தைக் கொள்கையாகப் பின்பற்றுபவர்கள்.., சுய ஆதிக்கம், சுய லாபம் என்ற மனித விரோதசக்திகளுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்திருக் கின்றார்கள். அதற்கு அவர்களது கொள்கை ஊட்டமளிக்கின்றது.
ஆனால், ஜனநாயகம் - தீவிரவாதம் போன்ற எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங்காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
ஆதிக்கச்சக்திகளோ.., ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.
சுய ஆதிக்கமும், சுய லாபமும் மனித சமூகத்திற்கு எதிரானது..! அதனை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால், மனித விரோதிகள் என்பவர்கள் யார்..!? மனித குலத்திற்கு எதிரி யார் என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் இப்பொழுது புரிந்திருப்பீர்கள்..!

July 10, 2007

பொதுக்கூட்டம்

கடந்த 11-5-2007 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு சரியாக குவைத் மண்டலத்தின் பொதுக்குழு கூட்டம் முர்காப் சிட்டியில் அமைந்துள்ள ரவுண்டானா பள்ளிவாசலில் நடைபெற்றது. கோடைவிடுமுறையின் துவக்கமாதலால், விடுமுறைக்கு தாயகம் செல்பவர்கள் பயணம் சொல்லிக் கொள்ளவும், அவர்களை வழியனுப்பி வைக்க வந்தவர்களும் என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு துணைத்தலைவர் அப்துல்கரீம் பாபு - முஹம்மதுபந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். மண்டலத்தலைவர் அமானுல்லா அவர்களின் முன்னுரையோடு ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் காலசூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப் போருக்காக அரசாங்கம் அளித்திருக்கும் பொது மன்னிப்பைப் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. இப்பொதுமன்னிப்பின் காலக்கெடு மே மாதம் 1ஆம்தேதி முதல் ஜுன் மாதம் 31ஆம் தேதி வரையாகும். உதவி தேவைப்படுவோருக்கு விவரங்கள் தரப்பட்டன. மேலும், எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் பற்றியும் அமையவிருக்கும் புதிய நிர்வாகிகள் தமுமுகவை இதைவிட சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்லவும், தீவிர அரசியலில் ஈடுபட்டு நமக்கான வாழ்வாதார உரிமைகளை பெற்றுத் தரவும், சிறைவாசிகள் அனைவரும் பூரண விடுதலையடையவும் நாமனைவரும் துஆ செய்யவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 2006 - 2007க்கான ஆண்டறிக்கையை மண்டலபொருளாளர் சத்ருத்தீன் அவர்கள் மக்கள் மத்தியில் சமர்பித்து தமுமுகவின் தூய்மையை நிரூபித்து விட்டு தனது பணிச்சுமையால் பொருளாளர் பொருப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதையொட்டி புதிய பொருளாளாராக சகோ.பஜ்லுர்ரஹ்மான் - திருச்சி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும், மக்கள்உரிமை இதழுக்கு வருட சந்தா சேகரிக்க தீர்மானிக்கப்பட்டது. நெல்லை-தாழையூத்து பகுதியின் முன்னாள் தொண்டரணி செயலாளரும், குவைத் - அபாஸிய்யா கிளைத்தலைவருமான சகோ. பீர்மரைக்காயர் அவர்களின் நன்றியுரையோடு இரவு 8:30க்கு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

குவைத் தமுமுக-வின் முதலாம் ஆண்டு விழா..!

குவைத் நாட்டில் தமுமுகவின் பணிகளை சிறப்புறச் செய்ய கடந்த 2005 டிசம்பர் 09 ஆம் தேதியில் தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டி பணிகள் முடுக்கிவிடப்பட்டது. தாங்கள் யாவரும் அறிந்ததே. அதன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கடந்த 2006 டிசம்பர் 08 ஆம் தேதியில், குவைத்தின் நகரப்பகுதியான முர்காப் என்னுமிடத்தில் தஞ்சை உணவகத்தில் மிகச்சரியாக மாலை 05:00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கியது. நிகழ்ச்சியை பொதுக்குழு உறுப்பினரான சகோ. கா. அப்துல் ரஹ்மான்-பெரம்பலூர் அவர்கள் தொகுத்து வழங்கினார். ஹால்திய்யா கிளை தலைவர் சகோ. முஹம்மது இப்ராஹிம்-சென்னை அவர்கள் கிராஅத்துடன் துவக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சகோ. ஜ.முஹம்மது இக்பால்-பெரம்பலூர் அவர்கள் தலைமை யேற்றார். தலைமையுரையில் குவைத் தமுமுகவின் முதல் ஆண்டின் சாதனைகளான தங்களது செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அழகுற எடுத்து வைத்தார். சிறப்புரையாக குவைத்தின் மூத்த மார்க்க அழைப்பாளர் பேரா. தாஜீத்தீன்-புதுஆத்தூர் அவர்கள் உலக அரங்கில் இஸ்லாமியர்களின் நிலை பற்றியும், இளம் மார்க்க அழைப்பாளர் சகோ. முஹம்மதலி ரஷாதி-பாண்டி அவர்கள் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் நிலை பற்றியும் அரங்கம் அதிர வீரவுரையாற்றினார்கள். துணைத்தலைவர் அப்துல்கரீம்பாபு-முஹம்மது பந்தர் அவர்கள் குவைத்தில் இதுவரையுள்ள தமுமுக கிளை நிர்வாகிகளையும், அன்று புதிதாக துவங்கப்பட்ட பயான், சால்மிய்யா, சல்வா கிளைகளின் நிர்வாகிகளையும் அறிமுகப் படுத்தி வைத்து வாழ்த்தினார். மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களின் நன்றியுரையாற்றினார். இரவுச் சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

தமிழர்கள் தவிப்பு – தமுமுக அரவணைப்பு

கடந்த புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு குவைத் மண்டல தமுமுக தலைவர் அ. அமானுல்லாஹ் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர 'மீனா பஜார் என்னுமிடத்தில் 30 பேர் கொண்ட ஒரு கூட்டம் யாரோ ஒருவரை பிடித்து வைத்துகொண்டுள்ளது. ஒரே பிரச்சனையாக உள்ளது. உடனே வாருங்கள்' என்ற செய்தியோடு தொலைபேசி துண்டிக்கப் பட்டது. மீனா பஜார் என்ற பகுதி வியாபார ஸ்தலங்கள் மிகுந்த இடம். குவைத் சிட்டியின் மையப்பகுதி. அங்கு வந்து சேர்ந்த தமுமுக தலைவர், அங்குள்ள கூட்டத்தை கண்டு பிரமித்து என்ன ஏது என்று தீர விசாரித்து செய்திகளை உள்வாங்கி கொண்டார். அவர் சேகரித்த செய்திகளின் சாராம்சம் இதுதான்
"தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலி டிராவல்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் இந்த 31 பேரும் குவைத்திற்கு வர முக்கிய காரணமானவர் சென்னையில் தங்கியிருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த அலாவுதீன் என்பவர். இந்த அலாவுதீன் குவைத்தில் உள்ளவர் தான். அவ்வப்போது சென்னை சென்று வருவார். குவைத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ரெட்டி என்பவருடன் தொடர்பு. இவரு(ரங்கநாதனு)க்கு இங்குள்ள சில நல்ல மனம் படைத்த அரபிகளுடன் தொடர்பு. இத்தொடர்பை தவறாக பயன்படுத்தி அந்த அரபிகளின் நிறுவனத்தில் உள்ள கைக்கூலிகளின் மூலமாக எலக்ட்ரீசியன், பிளம்பர், லேபர், ஹெல்பர், லைட், ஹெவி டிரைவர் என்று கூறி 50க்கும் மேற்பட்ட விசாக்களை பெற்று அலாவுதீன் என்பவரிடம் தந்துள்ளார். அலாவுதீன் வழக்கமாக அவருக்கு தெரிந்த போலி ஏஜென்டுகளிடம் விற்றுள்ளார். போலி ஏஜென்டுகளிடம் இந்த 31 நபர்களும் சிக்கியுள்ளனர். நபருக்கு 1 முதல் 1.5 லட்சங்கள் வரை பெற்று குவைத்திற்கு அனுப்பியுள்ளார்கள். இந்த முதல் குழு வரும்போதே சென்னையிலுள்ள லாட்ஜ்களில் பின்னாளில் வருவதற்காக 50க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து வந்திருக்கிறார்கள்.
பல கட்டங்களாக குவைத் வந்த 31 பேரையும் ஹஸாவிய்யா என்னுமிடத்தில் இரண்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 10, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் ரங்கநாதன் என்பவர் மட்டும் வந்து உணவும் சிறிது தீனார்களும் தந்து விட்டு போவாராம். கம்பெனி எங்கே, வேலை எங்கே என்று 6 மாதங்களாக கேட்டு வந்துள்ளார்கள். இப்போ, அப்போ என சமாளித்து வந்துள்ளார்கள். இதற்கிடையில் குவைத் வந்து சேர்ந்த அலாவுதீனும் அவ்வப்போது சந்தித்து பர்மிட் –அக்காமா- ரெடியாக தாமதமாகும் சற்று பொறுங்கள் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார். நாளடைவில் இருவரும் (அலாவுதீன், ரங்கநாதன்) வருவதை தவிர்த்து விட்டனர். அங்கம்பக்கத்து ரூமில் உள்ளவர்கள் தான் உணவுக்கும், செலவுக்கும் உதவிசெய்து கொண்டு வந்துள்ளனர். இதில் கந்தகுமார் என்ற சகோதரர் குறிப்பிடத்தக்கவர். 6 மாதமாக பொறுத்திருந்து பார்த்தவர்கள் பிறகு பொங்கி எழுந்து குவைத் முழுவதும் இந்த இருவரையும் தேடி புறப்பட்டு விட்டார்கள். அப்படி தேடிவரும் பொழுதுதான் மீனா பஜார் என்ற இடத்திலுள்ள ஒரு உணவகத்தில் ரங்கநாதன் ரெட்டியை அடையாளம் கண்டு கொண்டவர்கள் பிடித்து வைத்துகொண்டு உடன் வந்த மற்றவர்களுக்கும் தகவல் தந்து விட்டு, நமது தமுமுக தலைவருக்கும் தகவல் தந்துள்ளனர்'.
இந்த பிரச்சனையை தூதரகம் தான் தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட தமுமுக தலைவர், தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, சமீபத்தில் 12ஆம் விழா கொண்டாடிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரிடம் இது விஷயமாக ஆலோசனை கூற முடியுமா? உதவி செய்ய முடியுமா? என்பதை கேட்டு ஆளனுப்பிய போது 'இந்த விசயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை' என்று ஒற்றை வாக்கியத்தில் நழுவிக்கொண்டார். அதன் செயலாளரை தொடர்பு கொண்ட போது, 'இதோ அதோ' என்று அன்றிரவு 11 மணி வரையிலும் வரவேயில்லை. யாரும் வரமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட தமுமுக தலைவர் அ. அமானுல்லாஹ், மண்டல செயலாளர் அப்துர் ரவூப் ஆகியோர் உடனே குவைத் காவல்துறைக்கு போன் செய்தனர். ரங்கநாதன் என்பவரை காவலர்கள் வசம் ஒப்படைத்து விட்டு மும்பையை சேர்ந்த சகோ.ஆரீப் காஜி என்பவரின் துணையோடு இப்பிரச்சனையை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டது தமுமுக. பிறகு அவர்கள் அனைவரையும் (21 பேரையும்) தங்களது பாதுகாப்பில் தூதரகம் எடுத்துகொண்டது. இப்பிரச்சனையை விரைந்து முடிக்க சொல்லி தமுமுகவின் நெருக்குதலால் கம்பெனியின் உரிமையாளரான குவைத்தியை வரவைத்து லேபர்கோர்ட்டில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, 'இந்த விசா சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. தற்போது எனது கம்பெனியில் எந்த வேலையும் காலியில்லை என்னை ஏமாற்றி விட்டார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கட் மட்டும் எடுத்து தருகிறேன். என்னை மன்னித்து கொள்ளச்சொல்லுங்கள்' என்று அந்த குவைத்தி கேட்டுக்கொண்டார்.
உடனடியாக (பாதிக்கப்பட்ட 31 பேரில் 5 பேர் காவல்துறை சோதனையில் சிக்கி 15 தினங்களாக காவலர் வசம் உள்ளனர். அவர்களுக்கும் டிக்கட் கொடுத்தாகிவிட்டது. மற்றொரு 5 பேர் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை வந்தவுடன் தெரிந்து கொண்டு தங்கள் வீட்டில் இருந்து டிக்கட் வரவைத்து கொண்டு திரும்பிச் சென்று விட்டார்கள்) மீதி இருக்கும் 21 பேருக்கு மட்டும் டிக்கட் எடுத்து 9ஆம்தேதி முதல் தவணையாக 13 பேர்களையும் 10ஆம்தேதி மீதி 8 பேர்களை சென்னை வரை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் உரிய முறையில் வேலையுடன் கூடிய விசாவை இறைவன் நாடினால் ஏற்பாடு செய்ய பாஸ்போர்ட் காப்பியை தமுமுக வாங்கி வைத்து கொண்டது. அவர்கள் வைத்திருந்த விசாவை பரிசோதனை செய்த பிறகு இது டூரிஸ்ட் விசாதானே தவிர பணி நியமன விசா அல்ல என்பது உறுதியானது.
இப்படி தமுமுக தலைவரோடு எல்லா இடங்களிலும் உடன் இருந்தவர்கள் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற 'உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் குவைத் பொறுப்பாளர்' கவிஞர் சம்சுத்தீன் அவர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், 'கே-டிக் செய்தி மடல்' இலவச இஸ்லாமிய மாத இதழின் இணையாசிரியரு மான மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களும், 'குவைத் தமிழ் டாட் காம்' இலவச மாத இதழின் ஆசிரியர் அப்துல்கனி, வடிவமைப்பாளர் லுக்மான் சித்திக், ஜி.சங்கர் ஆகியோர்களும், சமுதாய ஆர்வலர்களும் அவ்வப்போது ஆலோசனைகள் கூறிவந்தனர். அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி துஆச்செய்கின்றோம்.
"இறைவனையன்றி எவனையோ நம்பி, எதிர்காலக் கனவுகளோடு
ஆகாய கப்பலேறி வந்தவர்களுக்கு
நட்பையும், நாளைய நம்பிக்கையையும் கொடுத்து வழியனுப்பி வைத்தது
குவைத் தமுமுக"
களத்தொகுப்பு: பரங்கிப்பேட்டை 'அய்மான்' (மண்டல செயற்குழு உறுப்பினர்)

செய்வோம் பிரார்த்தனை..! நமக்காகவும், உலக மக்களுக்காகவும்..,

கீழ்வரும் துஆக்கள் அனைத்தும் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள். ஆதாரப்புர்வமான ஹதீஸ் புத்தகங்களிலிருந்து திரட்டப்பட்டது. கீழ்காணும் விதிமுறைகளின் படி துஆ கேட்க வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத்துக்கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். தூய மனதோடும், பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும். சந்தோஷ, கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும். முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். 'துஆ' ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும்.
  • 'இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவா! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • இறைவா! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக!
  • இறைவா! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!
  • யாஅல்லாஹ்! நேர்வழியையும் உனது அச்சத்தையும், பத்தினித் தனத்தையும், பிறரிடம் தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச்சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய்.
  • யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும், உனக்கு பயப்படாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத மனதை விட்டும், பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அதில் உறுதியாக நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
  • யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் என்னை விட்டு நீங்குவதை விட்டும் ஆரோக் கியத்தன்மை என்னிடத்தில் மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக! வணக்கத்திற்குரியவன் மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான அல்லாஹ் வைத் தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி மற்றும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
  • யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன். அதனை கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட நிறுத்தி எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத் திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
  • யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன்.
  • இறைவா! குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!
  • யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக! உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன். யாஅல்லாஹ்! என்னுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!
  • யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யா திருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக!
  • இறைவா! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!
  • யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே! யாஅல்லாஹ் நீ விதித்தவற்றிலிருந்து விலகவோ, விதிக்காதவற்றை செய்ய சக்தி பெறவோ உன் துணையின்றி முடியாது.
  • யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கைவிட்டும் உள்ளத்தின் தீங்கைவிட்டும் எண்ணத்தின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிடும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந் தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக! யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழைகளை நேசிக்க அருள் புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அந்தச் சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.
  • யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய முஹம்மது-ஸல்- அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  • யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும், ஏற்பாடுகளையும் எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.
    யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப் பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்! உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் எனக்கு தருமாரு நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
    யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடிய உன்னைப் பற்றிய அச்சத்தையும் உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தருவாயாக! இறைவா! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் உடல் சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும் வரை குறையின்றி இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு பாதகமாக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாமல் இருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டாத ஒருவரை எங்கள் பொருப்பாளியாக ஆக்கா திருப்பாயாக!
.... பிரார்த்தனைகள் தொடரும்...,