இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

January 29, 2008

குவைத்தில் மாவீரன் பகத்சிங் நூற்றாண்டு விழா

மதிப்பிற்குரியவர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்..,

குவைத்தில் கடந்த 25-01-2008 அன்று இரவு 08-30 மணிக்கு மிர்காப் பகுதியிலுள்ள தஞ்சை உணவகத்தில் மாவீரன் பகத்சிங் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. தோழர். அமானுல்லாஹ்-திருச்சி அவர்கள் வரவேற்புரையாற்றி விழாவை தொகுத்து வழங்கினார். அவ்விழா தோழர். ஃபிரான்சிஸ் அவர்களின் புரட்சிப்பாடலோடு துவங்கியது. குள்ளாஞ்சாவடி புதுயுகம் வீதி நாடகக்குழு அமைப்பாளர் தோழர். ஆர். கே. சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் தலைவர் தோழர். கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்புச்சேர்க்க தோழர். சுப்ரமணி மற்றும் தோழர். செந்தில் குமார் இருவரும் புரட்சி மற்றும் சிந்தனையைத்தூண்டும் பாடல்களை பாடினர். சிறப்புரையாக தோழர்.மதியழகன்-பாலைக்குயில் கவிஞர்கள் சங்கம், தோழர். கவிஞர் ஸாதிக்-தலைவர், தமிழோசை கவிஞர் மன்றம், தோழர். பட்டு்க்கோட்டை சத்யா, தோழர். சம்சுத்தீன் மற்றும் கவிநடையில் உரையாற்றிய எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி இருதியாக புரட்சிக் கவிதை வாசித்த தோழர். அமானுல்லாஹ்-தலைவர், தமுமுக-குவைத் மண்டலம் இவர்கள் அனைவரும் இக்காலத்திலுள்ள அரசியல் சூழ்நிலையையும், மாவீரன் பகத்சிங்கின் வீரவரலாற்றையும் மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க எடுத்து வைத்தனர். இரவு மணி பதினொன்றை தாண்டியும் மக்கள் கூட்டம் கட்டுக்களையாமல் அமர்ந்திருந்தது மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பது தெள்ளத்தெளிவாக விளங்கியது. குவைத்திலுள்ள தமிழ், இஸ்லாமிய, கிருஸ்த்தவ சங்கத்தை சேர்ந்தவர்களும், பகத்சிங்கை பற்றி அறிந்திருந்த இலங்கைத்தமிழர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தோழர். பரங்கிப்பேட்டை அ.ப. கலீல்அஹமது பாகவீ-செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்க தேனீர் விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.


January 23, 2008

ஓர் அவசர செய்தி...!

ஜமாஅத் தலைவர்கள் , நிர்வாகிகள் , ஆலிம்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஓர் அவசர செய்தி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம ...

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து நடைமுறைக்கு வந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் ...!
பாடுபட்டு கிடைத்த இடஒதுக்கீட்டின் பலன்களை நமது சமுதாயம் அனுபவிப்பதற்குண்டான நடைமுறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

கடந்த கல்வியாண்டில் அதாவது 2007 ம் வருடம் பொறியியல் (Engineering ) கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் நமது முஸ்லிம் சமுதாய மாணவ , மாணவியர் 2.1 விழுக்காடு மட்டுமே சேர்ந்துள்ளனர். இது 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முன்பாக இருந்த நிலை .

ஆனால், இவ்வருடம் முதல் 3.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்த நிலையில் குறைந்த கட்டணத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நமது சமுதாய மாணவ , மாணவியர் சேர்ந்து பொறியியல் கல்வி கற்பதற்குண்டான பிரகாசமான சூழல் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் இவ்வருடமும் அதாவது 2008ம் ஆண்டிலும் கடந்த 2007 ம் ஆண்டைப் போன்றே 2.1 விழுக்காடு மாணவ, மாணவியர் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தால் ... ஏறத்தாழ ஆயிரம் (1000) பொறியியல் இடங்களை அதாவது இவ்வருடம் மட்டும் நமது சமுதாயத்தை சேர்ந்த ஆயிரம் பொறியாளர்களை இழக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் கிடைத்த இடஒதுக்கீட்டின் பயனை / பலனை நமது சமுதாயம் அடைய முடியாது என்பதை நாம் கவலையுடன் கவனிக்கின்றோம்.

பொறியியல் கல்வியில் மட்டுமே நமது சமுதாயத்திற்கு இவ்வளவு இழப்பு என்றால் மருத்துவம் , கலை ( Arts), தகவல் தொழிற்நுட்பம் (I.T ), தொழிற்கல்வி உள்ளிட்ட ஏராளமான பட்ட (Degree ) / பட்டயப் (Diploma ) படிப்புகளில் நாம் இழந்துவிட்ட / இழக்கப்போகின்ற எண்ணிக்கைகளை கணக்கெடுத்தால் நமது சமுதாயத்தின் அவல நிலைகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் நிகழ்காலத்திலோ / வருங்காலத்திலோ நமது சமுதாய முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுப்பதற்கு வழிவகுக்கும். இன்ஷா அல்லாஹ் ...!

நம்மில் சிலர் ஜமாஅத் தலைவராக அல்லது நிர்வாகியாக அல்லது ஆலிமாக அல்லது கல்வியாளராக ...ஏன் பெற்றோராகவாவது இருப்போம். அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

இவ்வருடம் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் தேர்வெழுத இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே , நமது சமுதாயத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அல்லது மதரஸாவிலும் அல்லது மதரஸா உள்ளிட்ட பள்ளிவாசல் வளாகத்திலும் தனித்தனியாக இலவச பயிற்சி மையம் (Tuition Center) அமைக்க ஒவ்வொரு ஜமாஅத்தார்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் .

பள்ளிவாசல் மற்றும் அதனுடன் சம்பந்தப்படும் இடங்களில் ஏற்பாடு செய்வதால் பிற சமூக மக்கள் தவறாக நினைக்கவும் வாய்ப்பில்லை. மாணவர்களும் தொழுகையை பேணுபவர்களாக ஆவார்கள். மாணவிகள் பர்தா அணிந்து வர வாய்ப்பும் ஏற்படும். மாதம் இருமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை கொண்டு மார்க்கக் கல்வியும் கொடுக்கலாம்.

இது போன்ற இலவச பயிற்சி மையங்கள் (Tuition Center ) கடந்த 4 மாதங்களாக இராமநாதபுரம் மாவட்டம் முழவதும், மதுரை , தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .

எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் , சிற்றூர்களிலும் , பேரூர்களிலும் அந்தந்த பகுதி புரவலர்கள் உதவியுடன் ஜமாஅத்தார்கள் இலவச பயிற்சி மையங்களை (Tuition Center) தொடங்கி நமது சமுதாய மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும்.

இது குறித்து மேலதிக விபரங்களை அறிந்த கொள்ள
இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ் . எம். ஹிதாயத்துல்லாஹ் ( அலைபேசி எண்: 9840040067) அவர்களையும் , தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இலவச பயிற்சி மையங்கள் குறித்த தகவல்களை பெற


இராமநாதபுரம்
மவ்லவி பஷீர் சேட் 94436 10495
அல்ஹாஜ் ராஜா ஹஸன் 94432 26374

மதுரை மாவட்டம்
அல்ஹாஜ் ஜவஹர் அலி 97893 66135
அல்ஹாஜ் மவ்லவி ஏ. பீர் முஹம்மது பாகவீ 94439 79187

சிவகங்கை மாவட்டம்
முஸஃப்பர் அப்துர் ரஹ்மான் 94439 19984
பேராசிரியர் ஆபிதீன் 94436 10350
திண்டுக்கல் மாவட்டம்
அல்ஹாஜ் முஹம்மது அலி 94437 40098
ஷே க் தாவூத் 98423 82053

தேனி மாவட்டம்
பேராசிரியர் அப்துஸ் ஸமது 93642 66001
கம்பம்
முஹம்மது அலி 99652 31110

'பார்த்திபனூர் மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது முஸ்தஃபா அறக்கட்டளை ' சார்பாக ' சிந்தனைச் சரம்' மாத இதழில் (ஜனவரி 2008, துல்ஹஜ் 1428) வெளியிடப்பட்ட இந்த அவசர செய்தி நமது சமுதாய நலன் கருதி வெளியிடப்படுகின்றது.


வருங்கால சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ... நிகழ்கால செல்வங்களுக்கு கல்வி அளிப்போம்!
அறியாமை நம்மை விட்டும் தொலைந்து போக... நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குவோம்!!
கருத்து வேறுபாடுகளை களைவோம்!
கல்விப் பணிகளில் ஒன்றிணைவோம்!!

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்று அணுஆயுத ஒழிப்பு மற்றும் அமை திக்கான மக்கள் இயக்கங்களும், பொது அமைப்புகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தம் ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல, அமைதிக்கு எதிரானது, நிலைத்த எரிசக்தி உருவாக்கத்துக்கு எதிரானது, சுயசார்பு பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் மக்கள் கருத்தை அறிவது இருக்கட்டும், நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்ட ளிக்கக்கூட மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மதவாதக் கட்சி என்றால், காங்கிரஸ் அமெரிக்காவின் அடிமைக்கட்சியாக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின்நிலையங்களும், நமது மின்சாரத் தேவையில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தற்போதுள்ள பூர்த்தி செய்கின்றன. இதை 7 சதவிகிதமாக உயர்த்தப் போகிறார்களாம்.அதற்காகத்தான் இந்த ஒப்பந்தமாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. 3யை 7 ஆக்கவா, பிரதமர் சவால் விடுக்கிறார்? பதவியை ராஜினாமா செய்வேன் என்று மறைமுக மிரட்டல் விடுக்கிறார்? மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் (!) கைகளில் இந்தியா இருப்பது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது புரிகிறது. இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். இந்தியா இனி அமெரிக்க அடிமை. நமது வெளியுறவுக் கொள்கைகள் இனி அமெரிக்காவின் கட்டளைப்படியே இயங்கும். இரானை அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லையா. இந்தியாவுக்கும் பிடிக்காது. எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய அணுஆற்றல் அவசியம் என்று மன்மோகன் சிங் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். சரி, இதே எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யத்தானே இரானுடன் குழாய் மூலம் எண்ணெய் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதை ஏன் இரண்டாம் பட்சமாக ஒதுக்க வேண்டும். அப்படியானால் அணுசக்தியை அதிகரிப்பது, எரிசக்தி ஆகிய இரண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பொருத்தவரை முக்கியமானவை அல்ல என்பது புரிகிறது. அதைத் தாண்டி எது முக்கியம்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. சீனாவின் பொருளாதார போட்டியைச் சமாளிக்க பாகிஸ்தான் பயன்படுமா என்று அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. பாகிஸ்தான் ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து அவசரஅவசரமாக இந்தியாவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது அமெரிக்கா. அதன் முழுமையான வெளிப்பாடுதான் இந்த ஒப்பந்தம்.

இப்படி இந்தியாவின் எதிர்காலம், வெளியுறவுக் கொள்கைகள், மற்ற நாடுகளுடனான உறவில் ஏற்படும் விரிசல் போன்றவற்றைப் பற்றி மக்கள் கருத்தை துளியும் அறியாமல், ஒப்பந்தத்தை நிறை வேற்றுவது தவறு என்று இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. மக்கள் சார்பில் இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய இந்த நெருக்கடி வரவேற்கத்தக்க அம்சம். நினைத்துப் பாருங்கள், பாரதிய ஜனதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். அதுதான் அந்தக் கட்சியின் கொள்கை. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் சாதகமா, பாதகமா என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம் முழுமையாக ஓராண்டு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் என்ன நடந்தது? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு விடுதலை நாள், குடியரசு நாளின்போது மார்தட்டிக் கொள்ளும் இந்தியா, எந்த வகையிலும் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளாததையே இது காட்டுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் நேரடியாக கால்பதித்துள்ள அமெரிக்கா, இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்தத் தொடங்கும். இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அமைதி முயற்சிகளைத் தொடராமல், ஆயுதப் போட்டியில் இறங்கும். ஆயுத விற்பனையின் ஒரு பாகமாகத்தான் ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியது. அவை முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை ஏற்கெனவே விற்று வருகிறது. சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வருகை அதன் ஒரு பகுதிதான். இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி, காற்றாலை, கடல்அலை, மனித உழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவது பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. இந்த மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவதில் அரசு அக்கறை காட்டுவது போல் பெயருக்கு மட்டும் செயல்படுகிறது. மாற்று எரிசக்திகள் மூலமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே அரசு கூறுவது போல் அணுசக்தி சிறந்தது என்றால், அது பற்றி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கலாமே. விவாதம் நடத்தலாமே. எல்லா நேரமும் ஏன் மூடிமறைத்து நடத்த வேண்டும்?

அடுத்து...
இதுபோன்று நாட்டின் பாதையையே மாற்றியமைக்கக் கூடிய ஒப்பந்தங்கள், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பற்றி ஜனநாயக ரீதியிலான எந்த ஆலோசனைகளும் நடத்தாமல் நிறைவேற்ற இந்திய அரசியல் சாசனத்தில் வழியுள்ளது. முதலில், இது போன்ற ஒப்பந்தங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்து, பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் என்று அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதில் நமது கருத்தை உறுதியாக வெளிப்படுத்த, நாம் ஒவ்வொரு வரும் ஓட்டளிக்கும் நடைமுறை வேண்டும். இதுவே நமது அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும். (விஷயமே என்ன வென்று சொல்லாமல் கருத்துக் கணிப்பை நடத்தி தொலைக்காட்சி அலைவரிசைகள், இதழ்கள் தங்களுக்கு வசதியான முடிவை பிரபலப்படுத்துகிறார்கள்.) இந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சத்துக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதே உரிமை இந்தியா நாடாளுமன்றத்துக்கு இல்லை. அப்படியானால், இது அடிமை ஒப்பந்தம் இல்லாமல் வேறு என்ன? ஓர் அடிமையே, 'என்னை உங்கள் அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நன்கு உழைப்பேன்' என்று கையெழுத்திட்டு ஒப்படைத்துக் கொண்டது போல் இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் நமது இயற்கை வளம், அறிவு, குறைந்த கூலியில் உழைப்பு ஆகியவை அமெரிக்க முதலாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பொருளாதார மேதைகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே விற்க ஒப்பந்தம் இட்டுள்ளனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வெள்ளையர்களை வெளியேற்றி நாடு விடுதலையடைந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய காலனி ஆதிக்கத்துக்கு மத்திய அரசே வரவேற்று வழியமைத்துக் கொடுத்துள்ளது.

(இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய அருணாராய், மேதா பட்கர், சந்தீப் பாண்டே அறிக்கை)

January 22, 2008

வலைமனை சாதனையாளர்கள் குழு (NAF)

அல்லாஹ்வின்திருப்பெயரால்..,
அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

இந்த இனிய செய்தியை NAF (Net Achievers Forum) யிலிருந்து தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்க்காக தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக இஸ்லாமிய மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். அவர்களது எதிர்காலம் மேம்பட வேண்டும் அத்துடன் இஸ்லாமிய ஒழுக்கவிழுமியங்களை பேணி நடக்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையின் விளைவாத்தான் NAF தான் தனது பணிகளை செய்து வருகின்றது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் வலைமனை மேலான்மையியலில் இந்தியா, குவைத், துபாய், சவூதி... போன்ற நாடுகளில் பணிபுரிய சிறந்த வல்லுநர்களைக்கொண்டு திறம் பட செயலாற்றி வருகிறது NAF. ஒவ்வொருவரும் தங்களது தனித்தன்மையையும், தொழில் திறமையையும் வளர்த்துக்கொள்ளவும், தமிழ் இஸ்லாமியச் சமூகத்திற்க்காக தங்களால் இயன்ற தகவல் தொழில் நுட்பத்துறை மூலமாக சேவைகளைச் செய்யவும் NAFஐ நாடுவது நலம்.
இத்துறையில் புதிதாக தடம் பதித்தவர்களையும், தயாராக இருக்கும் மாணவர்களையும் ஊக்குவித்தும், அவர்களுக்கு தனித்தனியே பயிற்சியளித்தும் மேன்மேலும் மெருகூட்டி இத்துறையில் சாதனைபடைக்க அனுப்பிவைக்கிறது NAF.
தற்போது புதிய திட்டமாக சிஸ்கோ மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களின் புதிய பாடத்திட்டங்களுக்கான பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி இரண்டாம் தேதியிலிருந்து துவங்க இருக்கும் இம்முகாம் அறுபது நாட்களுக்கு இன்ஷா அல்லாஹ் நடக்க உள்ளது. இச்செய்தியை வாசிக்கும் தமிழகத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் யாவரும் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து அதன் மூலம் நம் சமூகத்திற்கும் பயன் தரவேண்டும் என்று இத்தருணத்தில் அறிவுருத்துகின்றோம்.

பாடத்திட்டம் : CCNA / MCSA Combo Package
பயிற்சிக் காலம் : இரண்டு மாதங்கள் (60 நாட்கள்)
பயிற்சித் துவக்கம் : 2ஆம் தேதி பிப்ரவரி
பயிற்சிக்கூடம் : அசோக்நகர் - சென்னை - இந்தியா
பயிற்சிக்காக விண்ணப்பிக்க : சகோ. முஹம்மது ரஃபி - 0091-9894307261
சகோ. ஸையது அன்ஸாரி - 0091-9283255170
மின்னஞ்சல்கள் : n_rafi_tvl@yahoo.com மற்றும் syedansari_86@yahoo.co.in
வேண்டுகோள் – குறைவான இடங்களே இருப்பதால் சகோதரர்கள் விரைந்து பதிவு செய்துகொள்ளவும். பாடத்திட்டம் குறித்த விரிவான தகவல்களுக்கு தங்களது சுயவிவரங்களுடன் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். – வஸ்ஸலாம்(br)
வலைமனை சாதனையாளர்கள் குழுமத்திற்காக – தமுமுக குவைத் மண்டலம்

January 21, 2008

திருச்சியில் ராணுவத்துக்கு ஆள்தேர்வு முகாம்

ராணுவ பணிக்கான ஆள்தெரிவு முகாம் திருச்சியில் ஜனவ 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலக ஏ.ஆர்.ஓ., ஹக்மிசந்த் வெளியிட்ட அறிக்கை: திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் மூலம் ராணுவத்தில் தொழில்நுட்பம், நர்சிங் உதவியாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் மத்திய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள கருடா லைன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த பெரம்பலுõர், அரியலுõர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துõத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலை சேர்ந்த தகுதியுடையோர் பங்கேற்கலாம். படைவீரர் (தொழில்நுட்பம்) பணியில் சேர விரும்புவோர் ப்ளஸ்2 வில் இயற்பியல், வேதியியல், கணிதவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது ஆறு மாதத்தில் இருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜனவரி 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 24, 25 தேதிகளில் உடல் தகுதி தேர்வும் நடக்கும்.படைவீரர் (நர்சிங் உதவியாளர்) பணியில் சேர விரும்புவோர் பத்தாம் மற்றும் ப்ளஸ் 2 வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலம், உயிரியல், விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்ணும், சராசரியாக 40 சத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் 17 வயது ஆறு மாதத்தில் இருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்2 வில் தொழிற்கல்வி படித்தவர்கள் பங்கு பெற முடியாது. 18 வயதுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஃபோட்டோ ஒட்டி பெற்றோரின் ஒப்புதல் கையெழுத்து மற்றும் ரப்பர் ஸ்டாம்பு பெற வேண்டும். 21 வயதுக்குள் திருமணமானவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவராவர்."அனைத்து சான்றிதழ்களிலும் உரிய அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் ராணுவ தேர்வுக்கு வழங்கப்படுகிறது' என எழுதி கையெழுத்து பெற்று கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ஏற்கப்பட மாட்டாது. பங்கேற்போர் காலை 5.30 மணிக்குள் தேர்வு நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். தாமதமாக வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து விண்ணப்பதாரரும் சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் இரண்டு சான்றொப்பம் பெற்ற நகல்களுடன் வர வேண்டும்.ராணுவத்தில் சேரும் தேர்வுக்கு இடைத்தரகர்களுக்கோ, மற்றவர்களுக்கோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். போலி சான்றிதழ் கொடுப்பதும், தவறான தகவல் கூறுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். என்று அவர் தெரிவித்தார்.

January 06, 2008

சி. ஐ. டி. ஊதிய சங்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை தங்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள் இருப்பதைப்போல் குவைத்தில் மூன்றுவிதமான ததஜ-வினர் இருக்கின்றனர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. அதுதான் உண்மை. ஆம், காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்து கதைகளையும் கற்பனைகளையும் எழுத எங்ளிடம் கம்ப்யூட்டர் ஆலிம்சாக்கள் யாரும் இல்லை. விஷயத்திற்கு வருவோம்.
சில வருடங்களுக்கு முன் குவைத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைக்குழு என்று ஒன்று துவங்கப்பட்டது. அது பிறகு இஸ்லாத்தை வழிகாட்ட வேண்டி மாற்றப்பட்டது. ஆனால் அவர்கள் காட்டிய வழி பிஜெயிஸமாக இருந்தது. அவர்களோடு ஆர்வக்கோளாறு என்று அனைவராலும் அழைக்கப்படும் அபுஸாலிஹ் என்பவர் தலைமையில் ஒரு குழு இணைந்தது. தவ்ஹீத் + தவ்ஹீத் வருமானங்களும் வாசகர்களும் பெருக ஆரம்பித்தனர். கேமரா என்னுடையது, வி.சி.ஆர் உன்னடையது என்று ஒரு கூடாரத்திற்குள்ளேயே பிரிவினைகள் உருவானது. இருதியில் ஆர்வக்கோளாறு தலைமையில் அந்தக்குழுவினர் பிளாட்பாரத்திற்கு விரட்டப்பட்டனர். வழக்கம் போல் வழிகாட்டுபவர்களை பற்றிய அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் ஆர்வக்கோளாறு குழுவினரால் கணிசமாக பரப்பப்பட்டது. பிறகு தான் உணர்வில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பின் மூலமும், அதன் பிறகு நடந்து வந்த சம்பவங்களும் ததஜ கூட்டத்தாரிடமிருந்து மீண்டும் ஒரு குழு தனியே பிரிந்தது. ஆனால் அனைவருடைய வருமானங்களும் பிஜேவிற்கே சென்றது. சமுதாய அப்பாவி மக்களின் உழைப்பு ஒரு குற்றவாளி கையில் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரது பித்ரா வசூலை பொய்ப்படு்த்தி இருவருமே நோட்டீஸ் வெளியிட்டுக்கொண்டும் நாங்கள் தான் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று இருவருமே மார்தட்டிக்கெண்டு வந்தனர். இந்த நேரத்தில் தான் வின்டிவி வியாபாரத்திற்காக பாக்கர் அவர்கள் குவைத்திற்கு வந்து இருவரையும் அழைத்து ஒருங்கிணைக்க முயற்சித்தார். ஆனால், அது பயனில்லாமல் போய்விட்டது. இருதியில் ஆர்வக்கோளாறு குழுவினரின் எதிர்தரப்பை அங்கீகரித்து அண்னணிடமிருந்து கடிதம் வந்தது. அதை குவைத் முழுவதும் ஒட்டி வைத்தனர். இருந்தும் ஆர்வக்கோளாறு ததஜவினர் அங்கீகரித்தால் தான் ததஜவா என்று எதிர்தரப்பை கேட்டு விட்டு நீ அங்கீகரிக்கப்பட்ட ததஜ என்றால் நான் அங்கீகரிக்கப்படாத ததஜ என்று வசூலில் இறங்கினார்கள். வசூல் நேரத்தில் நடுரோட்டிலேயே முட்டிக்கொண்டார்கள். அந்த சம்பவத் திற்குபின் பணத்திற்காக இவ்வளவு கேவலாமாகவும் இறங்கிவிட்டீர்களே என்று வருத்தப்பட்டு சிலபேர் ஆர்வக்கோளாறு குழுவினருடன் இணைந்தனர். ஆனால், ஆர்வக்கோளாறு மட்டும் தனது குழுவினரை கழட்டி விட்டு ததஜ வோடு இணைந்து கொண்டது. இந்த சம்பவங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமுதாயம் எதிர்த்து கேள்வி கேட்கவும் இல்லை, திருந்தவும் இல்லை. இதன் பிறகு இஸ்லாமிய வழிகாட்டியவர்களுக்கு ஜும்ஆ குத்பாவிற்கு பள்ளி கிடைக்கிறது. அவர்களது பிஜெ கடைகளை அங்கே பரப்பி வியாபாரம் செய்து கொள்கிறார்கள். ததஜவினரும் செய்தார்கள். கூட்டம் அதிகமாக ததஜவினருக்கு சேருகின்றது. பள்ளி வியாபாரம் தடைசெய்யப்படுகிறது. ஆனால், ததஜவினர் மட்டும் வியாபாரத்தை நிறுத்தாமல் நேற்று வரை தொடர்ந்து வந்தார்கள். நேற்று தான் அந்தச்சம்பவம் நடந்தது.
ஆம், குவைத் அரசாங்க உளவுத்துறையால் வேவு பார்க்கப்பட்டு இவர்கள் வியாபாரம் செய்வது உறுதி செய்யப்பட்டவுடன் இவர்களது டேபிளில் (மட்டுமே) வந்து என்ன இது என்றார் உளவுதுறை. தஃவா என்றார் ததஜ, எந்த லஜ்னா என்கிறார் உளவுதுறை. டிஎன்டிஜெ என்கிறார் ததஜ, சிவில் ஐடி காட்டு என்கிறது உளவுதுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விட்டான் சவாரி பிடித்தான் ஓட்டம் அந்த ததஜ சூரப்புலி. உடனே அருகில் இருந்த மற்றொறுவரின் சட்டையை கோர்த்து பிடித்து கொண்டு உன் சிவில் ஐடி எங்கே என்கிறது உளவுத்துறை அவர் தயங்கி தயங்கி காட்டுகிறார். அந்த சிவில் ஐடியை வாங்கி வைத்துக் கொண்டு உளவுத்துறை சொல்கிறது, ஓடிப்போனவனை கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு உனது சிவில் ஐடியை வாங்கிப்போ என்று சொல்லிவிட்டு மொத்தக்கடையையும் அள்ளிக்கொண்டு வண்டியில் வைத்துவிட்டு திரும்பி வந்து எச்சரித்து விட்டு சென்றுவிட்டது. இனி திருந்துவார்களா ததஜ. பொருத்திருந்து பார்ப்போம்.
- வஸ்ஸலாம்.

January 02, 2008

நாகரீகம் என்னும் பெயரால் அநாகரீகம்

சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடந்தன. சென்னை நகர் முழுவதும் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் எழுச்சியோடு நடந்தன.

நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்திவிட்டு ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்து நடனமாடினார்கள். சில ஓட்டல்களில் டிஸ்கோ நடனம் களை கட்டியிருந்தது. சில ஓட்டல்களில் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் குத்தாட்டம் போட்டு, கும்மாளம் போட்டார்கள்.சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஓட்டலிலும் புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் ஆண்களும், பெண்களும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டு, மது அருந்தி ஆட்டம் போட்டார்கள்.

50 பேர் ஆடக்கூடிய நடன மேடையில், ஒரே நேரத்தில் 150 ஆண்களும், பெண்களும் உல்லாச ஆட்டம் போட்டனர். இதனால் நடனமேடை அமைக்கப் பட்டிருந்த பலகை உடைந்து, நடனமேடை அப்படியே சரிந்தது
உற்சாக மது மயக்கத்தில் ஆட்டம் போட்ட 20 ஆண்களும், பெண்களும் நடன மேடை உடைந்த இடத்தில், நீச்சல்குளத்தில் உள்ள தண்ணீருக்குள் விழுந்தனர். இரவு 11.20 மணிக்கு இந்த (துயர..?) சம்பவம் நிகழ்ந்தது.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில்....

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தற்போது புதிய முறை ஜனவரி 1-ந்தேதி முதல் அமலாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த புதிய முறையை திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த புதிய திட்டத்தின்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவரது விண்ணப்பம், அவர் இணைத்து அனுப்பும் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்படும். கிளார்க் நிலையில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்த பின்னர் விண்ணப்பதாரர் பணம் கட்டவேண்டும். ஆனால் அவரிடம் உடனே அதற்கான ரசீது வழங்கப்படமாட்டாது. விண்ணப்பமும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணமும் ஸ்கேன் செய்யப்பட்டு அப்படியே அதற்காக நியமிக்கப்பட்டுள்ள 2 அதிகாரிகளின் பார்வைக்கு செல்லும். அவர்கள் விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து அவரது முன்னிலையிலேயே விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள்.

விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் அதிகாரி அந்த இடத்திலேயே பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை வழங்குவதாக எழுதிவிடுவார். போலீஸ் விசாரணை அறிக்கை வந்ததும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். எனவே அவர் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியது இல்லை, பாஸ்போர்ட் தனக்கு வீடு தேடி வந்துவிடும் என்ற முழு திருப்தியுடன் திரும்பி செல்லலாம்.
அதே நேரத்தில் விண்ணப்ப படிவத்தில் ஏதாவது தவறு அல்லது எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே விண்ணப்பதாரர் முன்னிலையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சரி செய்ய முடியாத தவறுகள் அல்லது ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிலுவையில் வைத்து விசாரிக்கும் பிரிவிற்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டு விடும்.

இதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு என்று ஒன்றும் தனியாக தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பிரிவில் உள்ள ஊழியர்கள் இதனை முழு அளவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த திட்டம் குறித்து திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது:- இந்த புதிய திட்டத்தின்படி விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு 45 நிமிடத்தில் வெளியே வந்து விடலாம். அதன்பின்னர் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியதே இல்லை. அவர் வெளியே செல்லும்போது உரிய அதிகாரி கையினால் பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கி கொண்டு நிம்மதியாக செல்லலாம். இதன்மூலம் விசாரணைக்காக பலமுறை அலைவது தவிர்க்கப்படும்.

காலத்தின் மீது சத்தியமாக...