இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label முத்துப்பேட்டையில் வன்முறை: திருவாரூர். Show all posts
Showing posts with label முத்துப்பேட்டையில் வன்முறை: திருவாரூர். Show all posts

January 31, 2010

முத்துப்பேட்டையில் வன்முறை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது பேட்டை.இந்த பகுதியைசேர்ந்தவர் பேட்டை சிவா(35). இவர் மாவட்ட பா.ஜனதா செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டில் இருந்து காரில் முத்துப்பேட்டைக்கு சென்றார். அப்போது இருட்டில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று அவரது கார்மீது கற்களைவீசியது.

இந்த சம்பவம் குறித்துபேட்டை சிவா முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சமரசம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் அங்கு இருபிரிவினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.இருபிரிவினரும் அடிதடி மோதலில் இறங்கினர்.

இந்த மோதல் தொடர்பாக பழையபஸ் நிலையம் அருகில்உள்ள ஒருகாய்கறி கடைக்கும் ஒரு மெக்கானிக் கடைக்கும் பைபாஸ் அருகே டூவிலர் ஒர்க்ஷாப்புக்கும் தீவைக்கப்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை வந்த அரசு பஸ்,மற்றும் மினிடோர் ஆட்டோ,ஆட்டோவை ஆகியவற்றைஅடித்து உடைத்தனர்.

மோதலில் நடராஜன் என்பவருக்கு மண்டை உடைக்கப்பட்டது. தங்கராஜிக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது.அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து முத்துபேட்டையில் பதட்டம் ஏற்பட்டது. கடைகளுக்கு தீவைத்தல், பஸ் உடைப்பு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக முத்துப்பேட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் (42,), சாகுல் அமீது(28) திராஜீதீன் (32), சேக் தாவூது (20) வாசிம்கான்(17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டையில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள் ளதால் அங்கு திருச்சி டி.ஐ.ஜி ராமசுப்பிரமணியன், தஞ்சை எஸ்.பி. செந்தில்வேலன், திருவாரூர் எஸ். பி. பிரவின் குமார் அவி நவ், அரியலூர் எஸ். பி. நஜ்மல்ஹோடா, ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாக திருவாரூர் எஸ்.பி. பிரவின்குமார் அவிநவ் கூறியதாவது:-

முத்துப்பேட்டையில் நடந்த கலவரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அஞ்சவேண்டாம் என்றார்.