இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை மத்திய துணை ராணுவ போலீஸ் படையான இந்தோ திபெத் போலீஸ் படை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மாநில காலியிடங்களுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 207 காலியிடங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 6000 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
- ஆகஸ்ட் 1, 2008 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
- 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீட்டரும் விரிவடையும் நிலையில் 85 செ.மீட்டரும் இருப்பது முக்கியம்.
- சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல் தகுதித் தேர்வு, உடற் திறனறியும் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப் படுவீர்கள். ஆறரை நிமிடங்களில் 1.6 கி.மீட்டர் ஓடுவது, 3 அடி 6 இன்ச் உயரத்தை 3 வாய்ப்புகளில் தாண்டுவது, 3 வாய்ப்புகளில் 11அடி நீளம் தாண்டுவது ஆகியவை உடற்திறனறியும் தேர்வில் நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு:
பொது அறிவு, அடிப்படைக் கணிதம், ஆங்கில மொழித் திறன் மற்றும் பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். என்.சி.சி., ஸ்கவுட் மற்றும் கைட் ஆகியவற்றில் இருந்திருப்போருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்படும். மருத்ததுவத் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.50. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. இதை டிடியாகவோ போஸ்டல் ஆர்டராகவோ அனுப்ப வேண்டும். தகுதிகள், திறன்கள் போன்ற அனைத்துக்குமான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் 2 சுய முகவரியிட்ட உறைகளை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
DIG, SHQ (L&C), ITB Police, Seema Nagar, POAirport, Chandigarh (UP) Pin-160003.
முழு விபரங்களை http://www.itbpolice.nic.in, http://www.itbp.gov.in இன்டர்நெட் தளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஆகஸ்ட் 14, 2008.
No comments:
Post a Comment