இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 06, 2008

கழகத்தின் மாநில செயற்குழு.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக்கூட்டம் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஹெச். பேலசில் ஜுலை 4 அன்று நடைபெற்றது.

செயற்குழுவில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலளார் ரிபாயி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் 150 பேர் பங்குக் கொண்டார்கள்.
தமுமுகவின் கொள்கை விளக்கப்பாடலான தமுமுக தலைமையிலே என்ற ஒலிநாடா கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சைய்யது நிசார் அஹ்மது வெளியிட்டார்.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) புதிய அரசியல் கட்சி (மக்கள் முன்னேற்றக் கழகம்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்குவதென்றும் இது தொடர்பாக மாநில தழுவிய மாநாட்டை நடத்தி புதிய கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் அறிவிப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது. இதற்கு மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் பெயரிடப்படுகிறது.

2) முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவிற்கு இரங்கல்.
3) அமெரிக்காவுடன் அணு உடன்பாடு வேண்டாம்.
4) உடனடியாக மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பதவிகளில் முதல் கட்டமாக 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளிக்க வேண்டும்.
5) எட்டாண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் இருக்கும் ஆயுள்கால முஸ்லிம் சிறைவாசிகளை, அண்ணா பிறந்தநாளையொட்டி, மற்ற கைதிகளை விடுதலை செய்வதுபோல, விடுதலை செய்ய வேண்டும்.
6) விசாரணைக் கைதியாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும்.
7) முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டில் நிலவிய ரோஸ்டர் குழப்ப முறையை தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிவர்த்தி செய்த தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு இச்செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

8) தமுமுகவின் சமூக சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு இரண்டு ஆம்புலென்ஸ்களை தனது சொந்த செலவில் வழங்குவதாக அறிவித்து, அறிவித்தபடியே வழங்கியற்காக இச்செயற்குழு தனது நன்றியை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

9) புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் ஆளுக்கட்சி காங்கிரஸ் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.எதிர்வரும் புதுவை சட்டமன்ற தேர்தலில் புதிய நிலைபாட்டை எடுக்கவும் தமுமுக தயங்காது.

10) வேலூர் கோட்டை பள்ளிவாசலை தொழுகைக்காக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11) தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளித்துள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் சில மேல்நிலைப் பள்ளிகளும் உயர்கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றன. தமிழக அரசு இத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.
12) கடுமையான விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13) தமிழக அரசு இக்கல்வி நிறுவனங்களில் உள்ள 50 சதவிகித இடங்களை கவுன்சிலிங் மூலம் அந்தந்த சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
14) 2007 ஆகஸ்ட் 14 அன்று தென்காசியில் நடந்த ஆறு படுகொலை நடந்த பிறகு தென்காசியில் அப்பாவிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
15) தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் நல்வாழ்வு சங்கத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்த சங்கத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு இணையாக அரசும் நிதி அளிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது தமிழக அரசு இச்சங்கத்திற்கு பொதுமக்களுக்கு எவ்வளவு நன்கொடை அளித்த போதினும் தமிழக அரசின் பங்களிப்பு ரு5 லட்சத்திற்கு மேல் அளிக்கப்பட மாட்டாது என்று வரம்பு அமைத்திருப்பது வருந்தத்தக்கது.முன்பு போல் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைக்கு இணையாக தொகை அளிக்கப்பட வேண்டும்.

16) பல பள்ளிக்கூட முதல்வர்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவி தொகை விண்ணப்பத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதற்கே மறுத்து வருகிறார்கள். தமிழக பள்ளிக்கல்வி துறை இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
17) தமுமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாக பொறுப்பாளர்கள் கட்டாயம் மக்கள் உரிமையின் நேரடி சந்தாதரர்களாக இருக்க வேண்டும் என்று இச்செயற்குழு தீர்மரணிக்கிறது.

18) நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் போது முஸ்லிம்கள் மீது பழிப்போடும் போக்கு தொடருகின்றது. பல அப்பாவி முஸ்லிம்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். ஆனாலும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில் இந்து தற்கொலை படை அமைக்கப்பட வேண்டும் என்று குண்டு வெடிப்புகள் நடத்த வேண்டும் என்று பயங்கரவாதத்தை துண்டியுள்ள பால் தாக்கரேவை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுச் செய்வதுடன் ஜெய்பூர் உள்ளிட்ட வெடிகுண்டு வழக்குகள் குறித்து இவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
19) மதுவினால் நிகழ்ந்துவரும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் பூரண மதுவிலக்கை செயல்படுத்தி மதுவில்லாத தமிழகம் என்ற பெருமையை உருவாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
20) கடந்த 10.12.2000 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் கிரஸண்ட் நகர் பள்ளிவாசலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட புனியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை பல முறை தமிழக அரசுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி கோரிக்கை என்றும், இக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், விரைவில் நெல்லை மாவட்டத்தில் தமுமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இச்செயற்குழு எச்சரிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://tmmk.in/news/999791.htm

No comments: