டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதல் நிலை தேர்வு, சென்ற ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நடந்தது. இதில், 85ஆயிரத்து 913 பேர் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள், 25ம் தேதி(நேற்று) டி.என்.பி. எஸ்.சி., இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள், இணைய தளத்தின் மூலம் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். இதில், ஆயிரத்து 796 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பிரிவு: 210 மதிப்பெண் (பெண்கள் 195 மதிப்பெண்),
பி.சி: 201 மதிப்பெண் (பெண்கள் 187.50 மதிப்பெண்),
எம்.பி.சி மற்றும் டி.சி: 196.50 மதிப்பெண் (பெண்கள் 180 மதிப்பெண்),
எஸ்.சி: 195 மதிப்பெண் (மகளிர் 178.50 மதிப் பெண்),
எஸ்.டி: 156 மதிப்பெண் பெற்றவர்கள் (கட்-ஆப் மதிப் பெண் கள்) முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மை எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்ட்
16ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுஅறிவு முதல் தாளும்,
17ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுஅறிவு 2ம் தாளும் நடைபெறும்.
முதன்மை எழுத்து தேர்வு, சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment