இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 13, 2008

டிரைவிங் அறிந்தவருக்கு ராணுவத்தில் பணி

நமக்குத் தெரிந்தவர் பலர் நல்ல திறமை உடையவர்களாகவும் போதிய படிப்பு இல்லாதவராகவும் இருப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். சிறப்புத் திறன்களைப் பெற்றிருக்கும் சிலருக்கு கல்வித் தகுதி இல்லாத காரணத்தினாலேயே நல்ல வேலை வாய்ப்புகள் இல்லாமலிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்குமான வேலைகள் இருக்கத் தான் செய்கின்றன. இவற்றை அறிந்து தக்க சமயத்தில் விண்ணப்பிப்பதன் மூலமாக நல்ல வேலை வாய்ப்புகளை நாம் பெற முடியும். இது போன்ற ஒரு வாய்ப்பை ராணுவ துணைப் பிரிவான சஸாஸ்டிர சீமா பெல் அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்கள்.பணியின் பெயர்: கான்ஸ்டபிள் (டிரைவர்)

காலியிட எண்ணிக்கை:

221வேலை வாய்ப்பு முறை: நேரடி சேர்க்கை
விளம்பர எண்: BE/FTRL/RECTT/082

தகுதிகள்:

*10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டும் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.*உயரம் குறைந்தது 170 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு 80 செ.மீ. இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ.விரிவடைவதாக இருப்பதும் முக்கியம்.*சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். *தட்டையான பாதம், கிட்டப்பார்வை, மாறுகண், நிறக்குருடு, தட்டும் முட்டி போன்றவற்றைப் பெற்றிருப்போர் இப் பணிகளுக்கு தகுதியில்லை. *ஆகஸ்ட் 1, 2008 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
*ஆறரை நிமிடங்களில் 1.6 கி.மீ. தூரம் ஓடுவது, 11 அடி நீளம் தாண்டுவது மற்றும் 3.6 அடி உயரம் தாண்டுவது போன்றவற்றில் தகுதி பெற வேண்டும்.*இதில் தகுதி பெறுபவருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.*நேரடியாக சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்படிச் செல்லும் போது விண்ணப்பத்தைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும்.*நேரில் செல்லும் போது கல்வித் தகுதிகள், வயது, பிறந்த தேதி, கனரக வாகன ஓட்டும் உரிமம், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.*தேர்வுக்கு தங்களது சொந்த செலவிலேயே சென்று வர வேண்டும். தேர்வு முறைக்குச் செல்ல வேண்டிய முகவரி:.

விண்ணப்பிக்கும் முகவரி:

Distt. Police Line Mau (UP)or 5th Bn., (SSB) Majra Farm,Lakhimpur Kheri District, Lakhimpur Kheri (UP).
தேர்வுகள் தொடங்கப்படும் நாள் ஏப்ரல் 15, 2008. முடியும் நாள் ஏப்ரல் 23, 2008. முழு விபரங்களறிய இன்டர்நெட் முகவரி:
http://www.ssb.nic.in/

No comments: