இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 30, 2008

விண்டோஸ் எக்ஸ்பிக்கு அளிக்கும் சப்போர்ட்

புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியவுடன் பழைய தொகுப்புகளுக்கு அளித்துவரும் உதவிக் குறிப்புகளை நிறுத்திவிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வாடிக்கை. அதாவது அது குறித்த புதிய பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வுகளையும் மைக்ரோசாப்ட் எடுக்காது என்பது முடிவு. ஆனால் இணைய தளத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் சிஸ்டத்துடன் வந்துள்ள உதவிக் குறிப்புகள் அப்படியே தான் இருக்கும். தொகுப்பைப் பயன்படுத்துவதற்கான லைசன்ஸ் புதுப்பிக்கப்பட மாட்டாது. நீங்கள் புதிய தொகுப்பிற்குத்தான் அப்கிரேட் செய்திட வேண்டும். இனி பிரச்னைக்கு வருவோம். இரண்டு வாரங்களுக்கு முன் வரும் ஜூன் 2008 உடன் விண்டோஸ் எக்ஸ்பிக்கான ஆதரவை நிறுத்தப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஆனால் ஏப்ரல் 3 அன்று இன்னொரு அறிவிப்பினை வெளியிட்டது. இன்னும் சிறிது காலத்திற்கு எக்ஸ்பி தொகுப்பிற்கான உதவியை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 30, 2010 வரை இதற்கான உரிமத்தை புதுப்பிக்கலாம். ஆனால் இதிலும் ஒரு சிறு கண்டிஷனை மைக்ரோசாப்ட் விதித்துள்ளது. மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலைக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என அறிவித்துள்ளது. எனவே நீங்கள் எக்ஸ்பி கட்டாயம் லைசன்ஸுடன் வேண்டும் என்றால் குறைந்த விலைக் கம்ப்யூட்டரையே வாங்குங்கள். மைக்ரோசாப்ட் இன்னொரு அறிவிப்பினையும் தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியினை வரும் ஏப்ரல் 2009 வரை தரும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் நீட்டிப்பு காலம் வரை தேவை என ஒத்துக் கொண்டிருந்தால் இந்த உதவி ஏப்ரல் 2014 வரை கிடைக்குமாம். எனவே கவலைப்படாமல் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துங்கள்.

1 comment:

g said...

சரிங்க. அறிவுரைக்கு நன்றி