இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 22, 2008

அறியாமையிலிருக்கும் அபுநூரா அவர்களுக்கு..,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு நண்பர் அபுநூரா அவர்களுக்கு, தங்களது கற்பனை மிக்க தமாசாக இருந்தது. இன்னும் ஏதும் அதுபோல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அன்றைய பொழுது தமாசாக கழிந்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பீஜெ வழுக்கி விழுந்தாலும் தமுமுக, ஒன்னுக்கு மஞ்சளா போனாலும் தமுமுக, தாடி வெளுத்தா தமுமுக, தொப்பி கழண்டாலும் தமுமுக....
அடப்போங்கயா...ஏதாவது தவ்ஹீத் சொல்லுவீங்கன்னு பாத்தா தமாசு பண்ணிகிட்டு இருக்கிறீங்களே.
நண்பரே... உண்மையிலேயே TNTJவை விட்டு வெளியே வந்தவர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் குவைத்திலும் இருக்கின்றார்கள். இது உண்மை. நீங்கள் கனவு கண்டு கொண்டிருப்பதைப்போல் பீஜெ உங்களுக்கு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். கண் திறந்து பாருங்கள் சிறிதேனும் ஆராய்ந்து பாருங்கள்.
பெருந்தலைவர் பிஜேயில ஆரம்புச்சு கடைக்குட்டி கடையநல்லூர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி வரைக்கும் பாலியல் புகார்கள் இருந்தாலும், அதுக்கு வலுவான ஆதாரம் இருந்தாலும் உங்கள மாதிரி ஆளுங்க திருந்தாததற்கு காரணம் வெளியில இருந்து ஒரே ஒரு உண்மையான தவ்ஹீதுவாதி உங்களோட நிர்வாகத்துக்குள்ள இருந்திருந்தா இந்நேரம் உங்களோட அத்தன ஊழல்களும் அடிச்ச கொள்ளையும் வெளிய வந்திருக்கும் என்பதை விளங்கியவர்கள் வெளியேறியிருக்கிறார்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் தனது அருள்மறையிலே கூறுகின்றான்
"ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும் அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்." (23:63)
என்பதாக மேலும் கூறுகின்றான்.
"பிறகு நிச்சயமாக உம் இறைவன் - எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (16:119) - என்பதாக. பின்னரும்...
"முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்." (49:6)
நீங்கள் கைசேதப்படாமல் இருக்க தீர விசாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவசரப்பட்டு தமுமுக மீது பழி சுமத்தி அனுப்பிய மின்னஞ்சல்களை உங்களால் திரும்ப பெற முடியுமா. அந்த நோட்டீஸ் வெளியிட்டவர்கள் பின்னர் வந்து நின்றால் உங்களால் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க முடியுமா. எத்தனை பேரிடம் கேட்க முடியும். அதில் எத்தனை பேர் உங்களை மன்னிப்பார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியது போல மனிதர்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் - என்பது மறந்து விட்டதா. இருந்தாலும் அல்லாஹ் அவனது மறைவேதத்தில் கூறியது போல
"அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்(சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக, அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக, தவிர சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான் " (3:159)
எனவே நாங்கள் இறைவனுக்கு நேசமானதையே நாங்கள் செய்து விடுகின்றோம்.
வஸ்ஸலாம்
தேழமையுடன்
தமுமுக - குவைத் மண்டலம்

No comments: