இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 26, 2008

அஜ்மீர் ரயில்வே பணி வாய்ப்புகள்:

சமீப காலமாக அதிக அளவில் நமது இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பது அடிக்கடி அறிவிக்கப்படும் பல்வேறு ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகளின் பணி வாய்ப்புகள்தான். இந்த வரிசையில் இப்போது அஜ்மீர் ஆர். ஆர்.பி. பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்கள் இதோ..

அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர்:
காலியிட எண்ணிக்கை- 80 வயது- 18 முதல் 33க்குள் தகுதி- பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் டிப்ளமோ தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை. தேர்வு- இதற்கு ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். பின்பு தனியாக ஆப்டிடியூட் தேர்வும் நடத்தப்படும்.

அசிஸ்டன்ட் லோகோ பைலட்:
காலியிட எண்ணிக்கை - 122வயது - 18 முதல் 30க்குள் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல் பிரிவுகளில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் அல்லது டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், மில்ரைட், மெக்கானிக் ரேடியோ "டிவி', எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் டீசல், டர்னர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜரேஷன் மெக்கானிக் இவற்றில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு, ஆப்டிடியூட் தேர்வு நடத்தப்படும்.

ஜூனியர் ஒர்க்ஸ் இன்ஜினியர்:
காலியிட எண்ணிக்கை - 27வயது - 18 முதல் 33க்குள் தகுதி - சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தகுதி. தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

ஜூனியர் இன்ஜினியர் (இன்ஜினியரிங்/டிராயிங்):
காலியிட எண்ணிக்கை - 20வயது - 18 முதல் 33க்குள்தகுதி - சிவில் டிப்ளமோ தேர்ச்சிதேர்வு - ஒரு கட்ட எழுத்துத்தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

சிக்னல் மெயின்டெயினர்:
காலியிட எண்ணிக்கை - 29வயது - 18லிருந்து 30க்குள்தகுதி - பி.எஸ்சி. இயற்பியலில் முதலாமாண்டு முடித்திருக்க வேண்டும்.தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

டெக்னீசியன் 3 (பிட்டர்/சி அண்ட் டபிள்யூ.):
காலியிட எண்ணிக்கை - 66 வயது - 18 முதல் 30க்குள் தகுதி - 10ம் வகுப்பு தகுதி மற்றும் ஐ.டி.ஐ. பிட்டர் தகுதி.தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு.

டெக்னீசியன் 3 (வெல்டர்):
காலியிட எண்ணிக்கை - 56, வயது - 18 முதல் 30க்குள், தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வெல்டிங் ஐ.டி.ஐ. தகுதிதேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு.

டெக்னீசியன் 3 (சிக்னல்):
காலியிட எண்ணிக்கை - 33, வயது 18 முதல் 30க்குள், தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எலக்ட்ரீசியன்/எலக்ட்ரிகல்/பிட்டர்/ஒயர்மேன்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஐ.டி./ டிவி/ ரேடியோ/ கம்ப்யூட்டர் போன்றவற்றில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர வேறு பல பணிகளுக்குமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இவற்றை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் தவறாது பார்த்துக் கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:
முழு விபரங்களையும் படிவத்தையும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஏப்ரல் 19-25 இதழில் பார்த்துக் கொள்ளவும். மேலும் இவற்றை ஆர்.ஆர்.பியின் இன்டர்நெட் தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.rrbajmer.org இன்டர்நெட் தளத்துக்குச் சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்ப செலுத்த வேண்டிய கட்டணத்துடனும் ஆன்லைன் விண்ணப்ப நகலுடனும் பிற சான்றிதழ் நகல்களை இணைத்து சாதாரண தபால் மூலமாக அனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பலாம். இவை "The Assistant Secretary, Railway Recruitment Board, Ajmer" என்ற பெயருக்கு அஜ்மீரில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி:
The Assistant Secretary,
Railway Recruitment Board 2010,
Nehru Marg,
Near Ambedkar Circle,
Ajmer 305028.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் மே 19, 2008.

No comments: