இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 13, 2008

மத்திய அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் பணியிடங்கள்

மத்திய பொதுத் துறை நிறுவனமான புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியாவில் காலியாகவுள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு ஐ.எஸ்.ஓ. 90012000 சான்றிதழ் நிறுவனம். டிசைன் இன்ஜினியரிங் மற்றும் கன்சல்டன்சி நிறுவனமான இது 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெரிய உரத் தொழிற்சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள், வீட்டு வசதி மற்றும் டவுன்சிப் போன்றவற்றை உருவாக்கும் பணியில் இது ஈடுபட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு அடிப்படை கட்டுமான வசதி உருவாக்க நிறுவனமாகும். இதன் நொய்டா, பரோடா, சிந்திரி, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் கோல்கட்டா பணிகளுக்குத் தேவைப்படும் மேனேஜ்மென்ட் டிரெய்னிகளுக்கான அறிவிப்பை இது இப்போது வெளியிட்டுள்ளது. எந்த பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன?*சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ருமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவருக்கான காலியிடங்கள் உள்ளன.

மார்க்கெட்டிங், சேல்ஸ் பிரிவுகளில் பி.எஸ்சி./எம்.எஸ்சி. முடித்து அதன் பின் எம்.பி.ஏ./பி.ஜி.டி.பி.எம். தகுதி பெற்றிருப்போருக்கான காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்தத் தகுதி தரும் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பட்ட மேற்படிப்பு முடித்திருப்போர் அதிக பட்சம்õக 25 வயது இருக்கலாம். ஏப்ரல் 30, 2008தேதியை அடிப்படையாக வைத்து இது கணக்கிடப்படும். தற்போது இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.


முக்கியக் குறிப்புகள்:


எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. இதை புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடட் என்ற பெயரில் நொய்டா/டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முழு விபரங்களும் படிவமும் நிறுவனத்தின் இன்டர்நெட் தளமான http://www.pdilin.com தரப்பட்டுள்ளது. பார்த்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்கும் முகவரி:


Dy. General Manager (HR), PDIL, PDIL Bhawan, A14, Sector1, Noida 201301.


விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்:

ஏப்ரல் 21, 2008.


No comments: