இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 21, 2010

திருச்சி 28&வது வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம்


தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி 28&வது வார்டுக்கான தேர்தலில் திமுகவும், மனிதநேய மக்கள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. அங்கு மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிபெறும் நிலையில் உள்ளதால், ஆளும் திமுக வினரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.அமைச்சர் நேரு களத்துக்கு நேரடியாக வரக்கூடிய அளவுக்கு நிலை ஏற்பட்டுவிட்டதால், திமுகவினர் வழக்கம்போல் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர். ஜூலை 18 அன்று இரவு சுமார் 200 திமுகவினர், ரவுடிகளின் துணையோடு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வேட்டி, புடவை, பணம் என வினியோகிக்க முயன்றபோது, அப்பகுதி பொது மக்கள் திமுகவினரை ஓட, ஓட விரட்டியுள்ளனர். இதனால் கொதித்துப்போன திமுகவினர், அப்பகுதி முஸ்லிம்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அப்பகுதி ஜமாத்தினரே அரண்டு போகும் அளவுக்கு திமுகவினரின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனிடையே திருச்சி ஏர்போர்ட் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி பகுருதீன் அவர்கள் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, அவரது காரை உடைத்துள்ளனர். படுகாயமடைந்த பகுருதீனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு பிரச்சார களத்தில் இருந்த மாநில த.மு.மு.க துணைச் செயலாளர் கோவை.சாதிக் தலைமையில் த.மு.மு.க, மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ம.ம.கவின் திருச்சி மாவட்ட செயலாளர் பஷீரின் வீட்டுக் கதவையும் திமுகவினர் தட்டி பெண்களை மிரட்டியுள்ளனர். திமுகவினர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்த செய்தி பரவியதால் திருச்சி பதற்றமானது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. உடனடியாக உதவி ஆணையாளரிடம் சென்று மமகவின் சார்பில் முறையிடப்பட்டது. அதை பட்டும்படாமல் கேட்டுக்கொண்டவர், எந்த பதிலும் சொல்லாமல், அமைச்சர் நேருவுக்கு விசுவாசம் காட்டும் விதமாக, விடைபெற்று சென்றிருக்கிறார். பகுருதீனை தாக்கிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை.

ஆனால் மமக மாவட்ட செயலாளர் பஷீர், த.மு.மு.க மாவட்ட செயலாளர் ஃபைஸ், தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்ட 75 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நிலைமையை நேரில் அறிய மமக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது திருச்சிக்கு சென்றார். தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த திமுகவினரை அடையாளம் காட்டியும் கூட அவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

நல்ல தேர்தல்! நல்ல ஜனநாயகம்! நல்ல போலீஸ்!

July 20, 2010

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது. இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது.

இந்நிலையில் பயந்துபோன திமுகவினர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர். இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணியற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ... www.tmmk.in

28-வது வார்டு இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா (அ.தி.மு.க.) இறந்ததை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு இறுதிகட்ட பிரசாரம் களை கட்டி உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட வில்லை. தேமுதிகவும் போட்டியிடவில்லை. எனவே இடைத்தேர்தல் விறுவிறுப்பு இருக்காது என கூறப்பட்டது.

ஆனால் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக த.மு.மு.கவினரும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் கடைசி கட்ட பிரசாரம் களை கட்டியது.

நாளை மறுநாள் (22-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அரியமங்களம் மாநகராட்சி காமராஜர் நடுநிலைப்பள்ளியிலும், எஸ்.ஐ.டி. பள்ளியிலும் 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆண்களுக்கு 3 வாக்குச்சாவடிகளும் பெண்களுக்கு 3 வாக்குச்சாவடியும், 2 பொது வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7095 வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காலை 7மணி முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வைக்கப் படுகிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி த.மு.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவின் போது வன்முறை நடக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே வாக்குச்சாவடிகளில் முக்கிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்படுகிறார்கள். ஓட்டுப்பதிவு ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

July 17, 2010

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.


May 09, 2010

சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

சேலம்,​​ மே 7: சேலத்​தைச் சேர்ந்த ஆசி​ரி​யர் தம்​ப​தி​ய​ரின் மகன் சபீ​ருல்லா ​(30) ​ ஐஏ​எஸ் தேர்​வில் வெற்றி பெற்​றுள்​ளார்.​
÷ஐ​ஏ​எஸ் தேர்வு ​(2009) முடி​வு​கள் வியா​ழக்​கி​ழமை வெளி​யி​டப்​பட்​டன.​ இதில் நாடு முழு​வ​தும் ​ 875 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ இதில் தமி​ழ​கத்​தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்​றுள்​ள​னர்.​ சேலம் அம்​மாப்​பேட்டை வித்யா நக​ரைச் சேர்ந்​த​வர் ஐ.கரா​மத்​துல்லா ​(67).​ கன்​னங்​கு​றிச்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இவ​ரது மனைவி மெஹ​தாப் பேகம் ​(65).​ சேலம் சாரதா கல்​லூ​ரி​யில் வேதி​யி​யல் துறைத் தலை​வ​ராக பணி​யாற்​றி​ய​வர்.​
÷இ​வர்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் மென்​பொ​ருள் பொறி​யா​ள​ரா​கப் பணி​யாற்​றும் இப்​ரா​ஹிம் ​(32),​ பெத்​த​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் ஆசி​ரி​யை​யா​கப் பணி​யாற்​றும் ஆயிஷா ​(33),​ பெங்​க​ளூர் ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யாற்​றும் முக​மது ஒய்.சபீ​ருல்லா ​(29) ஆகிய மூன்று குழந்​தை​கள் உள்​ள​னர்.​
÷ச​பீ​ருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்​ளி​யில் 1998-ல் பள்​ளிப் படிப்பை முடித்​து​விட்டு கோவை பிஎஸ்ஜி கல்​லூ​ரி​யில் பி.இ.​ ​(எலெக்ட்​ரி​கல் மற்​றும் எலெக்ட்​ரா​னிக்ஸ்)​ படித்​துள்​ளார்.​ படிப்பை முடித்த பிறகு டாடா கன்​சல்​டன்ஸி நிறு​வ​னத்​தில் வேலைக்கு சேர்ந்​தார்.​
÷ஆ​னால் அதை ராஜி​நாமா செய்​து​விட்டு எம்.பி.ஏ.​ படிப்​ப​தற்​காக கர்​நா​ட​கத்​தின் மணிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சேர்ந்​துள்​ளார்.​ எம்.பி.ஏ.​ முடித்த இவர் இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் ஐ.பி.எம்.​ கணினி நிறு​வ​னத்​தில் நிதி ஆலோ​ச​க​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷வே​லைக்​குச் சென்று விட்டு வந்து பகுதி நேர​மா​கப் படித்து முதல் முயற்​சி​யி​லேயே ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் நாட்​டில் 55-வது இடம் பிடித்து சபீ​ருல்லா வெற்றி பெற்​றுள்​ளார்.​ சபீ​ருல்​லா​வுக்கு ஆசியா யாஷ்​மின் ​(25) என்​ப​வ​ரு​டன் திரு​ம​ணம் நடை​பெற்​றுள்​ளது.​ பி.இ.,​​ எம்.எஸ்.​ படித்​துள்ள இவர் தனி​யார் கல்​லூ​ரி​யில் விரி​வு​ரை​யா​ள​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷இது குறித்து சபீ​ருல்​லா​வின் தந்தை கரா​மத்​துல்லா கூறும்​போது,​​ டாடா நிறு​வ​னத்​தில் நல்ல வேலை​யில் இருந்த சபீ​ருல்லா மேலும் படிக்க வேண்​டும் என்ற ஆவ​லில் ராஜி​நாமா செய்​து​விட்டு வந்​து​விட்​டார்.​ பின்​னர் எம்.பி.ஏ.​ படித்து ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யில் சேர்ந்​தார்.​
÷தி​ன​மும் வேலை விட்டு வந்​த​தும் அதி​காலை 2 மணி வரை கண்​வி​ழித்து படித்து வந்​தார்.​ இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் இருக்​கும் அவர்,​​ ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் வெற்றி பெற்​றது குறித்து மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார்.​ அவ​ரது வெற்​றிக்கு பெற்​றோ​ரா​கிய நாங்​க​ளும்,​​ அவ​ரது மனை​வி​யின் ஒத்​து​ழைப்​புமே கார​ணம் என்று தெரி​வித்​துள்ள அவர்,​​ மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​

May 02, 2010

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் 24.10.2010 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னும் தலைப்பில் சமூகத்தில் குவிந்து கிடக்கும் அறிவு மற்றும் மதிப்புகளை பரப்பும் விதமாக மாபெரும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் மீராமைதீன் தலைமை வகிக்க, மருத்துவர் தங்கராசு, டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ஹக்கீம் மற்றும் அற்புதரோச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெறியாளர்களாக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முனைவர் ஆபிதின் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் காமரர்சு அவர்கள், மற்றும் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக லெப்பைகுடிக்காடு மாணவரணி செயலாளர் சபீர் அஹமது வரவேற்க்க, இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷh மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் ரசீதுஅகமது, மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் தௌ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோர் உட்பட திரளாக பங்கேற்றனர். மற்றும் மாற்று மத சகோதரர்களும் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

April 26, 2010

உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க விருப்பமா?: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: 'பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து செயல்பட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2010-2011ஆம் ஆண்டில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய ஒன்பது வட்டார வளமையங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் அறிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம், மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுடையோர் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

April 24, 2010

அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம்

வாழ்க்கை முழுவதும் போராடிய குனங்குடி ஹனிபா அவர்களுக்காக அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம் தலைநகர் சென்னையிலே..!


April 06, 2010

பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தனது இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிட்டுள்ளது. இதில், கல்லூரியில் பெயர், முதல்வர் பெயர், விலாசம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கல்லூரி எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெயர், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் இணையதள வசதி உள்ளதா, நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன, விடுதி வசதி உள்ளதா, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை நிறுவனங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு வளாக நேர்காணலுக்கு வந்துள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அக்கல்லூரியில் பாடப் பிரிவு வாரியாக தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம்: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரமும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிடப் பட்டுள்ளன. இதில், எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அக்கல்லூரியில் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2007, 08, 09ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில், ஒவ் வொரு கல்லூரியிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும், 2009 - 10ம் கல்வியாண்டில், 2, 4, 6, 8வது செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.