இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 26, 2010

உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க விருப்பமா?: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: 'பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து செயல்பட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2010-2011ஆம் ஆண்டில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய ஒன்பது வட்டார வளமையங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் அறிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம், மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments: