தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தனது இணையதளத்தில் (www.tndte.com) வெளியிட்டுள்ளது. இதில், கல்லூரியில் பெயர், முதல்வர் பெயர், விலாசம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கல்லூரி எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெயர், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் இணையதள வசதி உள்ளதா, நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன, விடுதி வசதி உள்ளதா, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை நிறுவனங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு வளாக நேர்காணலுக்கு வந்துள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அக்கல்லூரியில் பாடப் பிரிவு வாரியாக தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம்: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரமும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (www.tndte.com) வெளியிடப் பட்டுள்ளன. இதில், எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அக்கல்லூரியில் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2007, 08, 09ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில், ஒவ் வொரு கல்லூரியிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும், 2009 - 10ம் கல்வியாண்டில், 2, 4, 6, 8வது செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment