இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 20, 2010

28-வது வார்டு இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா (அ.தி.மு.க.) இறந்ததை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு இறுதிகட்ட பிரசாரம் களை கட்டி உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட வில்லை. தேமுதிகவும் போட்டியிடவில்லை. எனவே இடைத்தேர்தல் விறுவிறுப்பு இருக்காது என கூறப்பட்டது.

ஆனால் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக த.மு.மு.கவினரும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் கடைசி கட்ட பிரசாரம் களை கட்டியது.

நாளை மறுநாள் (22-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அரியமங்களம் மாநகராட்சி காமராஜர் நடுநிலைப்பள்ளியிலும், எஸ்.ஐ.டி. பள்ளியிலும் 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆண்களுக்கு 3 வாக்குச்சாவடிகளும் பெண்களுக்கு 3 வாக்குச்சாவடியும், 2 பொது வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7095 வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காலை 7மணி முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வைக்கப் படுகிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி த.மு.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவின் போது வன்முறை நடக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே வாக்குச்சாவடிகளில் முக்கிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்படுகிறார்கள். ஓட்டுப்பதிவு ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

No comments: