இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

October 31, 2007

திருச்சியில் நடைபெற்ற தி.க. பொதுக் கூட்டத்தில் "ராமர் வாழ்க'' கோஷம்:

திருச்சி மாநகர திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. சத்திரம் பஸ் நிலையம் ரகுநாத் ஒட்டல் அருகே நடந்த கூட்டத்துக்கு மாநகர தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் சேதுசமுத்திர திட்டம், அதன்பயன்கள் குறித்து விளக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென "ராமர் வாழ்க'' "சேது சமுத்திர திட்டம் ஒழிக'' என கோஷம் எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே திராவிட கழக நிர்வாகிகள் அந்த வாலிபரை அப்புறபடுத்தினர். இதனால் அந்த வாலிபருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் யார்ப எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

October 29, 2007

தமிழகத்திற்கு இராமன் வந்தாரா....?

ஜோத்பூர்: ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது. கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர். ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர். உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர். அதன் பின்னும், கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது. கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார். ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.

நன்றி: தினமலர் 29ஆம் தேதிய இணையதளச்செய்தி

இந்த தினமலரின் செய்திப்படி இராவணனுக்கு வடமாநிலத்தில் தான் கோவில் உள்ளது. தமிழகத்தில் எந்த கோவிலும் இல்லை. இராமன் தமிழகத்தின் பக்கம் வரவேயில்லை. அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தை உலுக்கிப்பார்க்கவே இவர்களின் இராமர்பால நாடகம் என்பதை தினமலர் நாளிதழே ஏற்றுக்கொள்கிறது.

October 28, 2007

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால், சேலம் கிச்சிப்பாளையத்தில் நேற்று இரவு பதட்டமான சூழல் நிலவியது.

கிச்சிப்பாளையத்தில் கடம்பூர் முனியப்பன் கோயில் உள்ளது. ஐநூறுக்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதியில், பத்து முஸ்லிம் குடும்பத்தினரும் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் இங்குள்ள முஸ்லிம் குடும்பத்தினர் சேர்ந்து மதரஸா பள்ளியெழுச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். ரம்ஜான் முதல் அதை மசூதியாக மாற்றம் செய்தனர். அதனால் வெவ்வேறு இடத்தில் இருந்தும் முஸ்லிம் மக்கள் அங்கு வந்து செல்ல துவங்கினர். அதற்கு, அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை பற்றி இரு தரப்பினரும், நேற்று இரவு கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர். பேச்சு நடந்த வந்த முஸ்லிம்கள், "அந்த இடம், மதரஸா பள்ளியெழுச்சியாகவே செயல்படும்' என்று உறுதியளித்து சென்றனர். இப்பிரச்னையால், நேற்று இரவு கிச்சிப்பாளையத்தில் பதட்டமான சூழல் நிலவியது.
செய்தி:தினமலர்

October 23, 2007

பெரம்பலூரில் ஈகைத்திருநாள் கொண்டாட்டம்

கடைத்தெருவில் உள்ள பெரியபள்ளிவாசல்

இமாம் அவர்களின் குத்பா


தமுமுகவின் பேனர் வரவேற்கிறது

படங்கள் & செய்தி:

லியாக்கத் அலி & அபுத்தாஹிர்

- குவைத் வாழ் பெரம்பலூர் நகர தமுமுக

குவைத் மண்டலம்

October 17, 2007

தனக்கு தனக்குன்னா...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் நாட்டில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் இதுவரை மடமையில் மூழ்கியிருந்ததாகவும் அல்டாபு வந்தபிறகு தான் தவ்ஹீதில் எழுச்சி ஏற்பட்டதாகவும் திருடிய பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தியை பார்த்து வேதனையடைந்தோம். இந்தக் கேடு கெட்டதுகள் தங்கள் தனிமனித வாழ்க்கையில் இறைமறுப்புக்கு இட்டுச் செல்லும் காரியங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டு மக்கள் மத்தியில் தவ்ஹீது வேடம் போடுகிறார்கள்.
எழுதுகிறவன் தான் தன் இஷ்டத்திற்கு எழுதுகிறான் என்றால் படிக்கிறவர்களுக்காவது அறிவு இருக்க வேண்டாம். (இவர்களது பத்திரிக்கையை படிக்க அறிவு வேற வேண்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது) இருந்தாலும் விழிப்புணர்வு கொடுப்பது எங்கள் கடமை. விளங்கிக் கொள்ளுங்கள் 4+5+4x20=260+100 பேர் அளவுக்கு நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்தவர்கள். (அதாவது 4 இருக்கைகள் 20 வரிசை பக்கத்தில் 5இருக்கைகள் 20 வரிசை கடைசியாக 4இருக்கைகள் 20 வரிசை ஆக 4+5+4x20=260 நின்றுகொண்டும் நடந்து கொண்டும் 100 பேர் அளவுக்கு இருந்தார்கள்) ஆறாம் வகுப்பு கூட பாஸ் பண்ண முடியாத கூமுட்டை தலைவருக்கு தெரியுமா ஒரு சதுர மீட்டர் அளவில் எத்தனை நபர்கள் நிற்கவும் உட்காரவும் முடியுமென்று இல்லை மருத்துவத்திற்கு படித்திருந்தும் ததஜவின் முட்டாள்களுக்குப் பின் குடை தூக்கிக் கொண்டு செல்பவருக்குத்தான் தெரியுமா?
தலைவனின் புத்தியே இந்த தொண்டர்களுக்கும். வாய் கூசாமல் ரமலான் என்றும் பாராமல் அதுவும் கண்ணியமிக்க இரவை தேடும் இறுதிப்பத்து என்ற நினைவு கூட இல்லாமல் 700 பேர்கள் என்று அண்டப்புழுகும் ஆகாசப்புழுகும் சேர்த்து எழுதிய செய்தித்தாளைப் படிக்க வேண்டுமென்றால் அது தமுமுகவிடமிருந்து இவர்களால் களவாடப்பட்ட உணர்வு ஒன்றில் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாம் ஆம் இஸ்லாமியச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டோரின் ஈனக்குரல்.
புதுசா திருமணம் முடித்தவரை முழுதாகக் கூட வாழ விடாமல் பாதியிலேயே குவைத்துக்கு இழுத்து வந்து தலைவரின் துதி பாட வைத்தார்கள். புது மனைவின் நினைவிலேயே சென்ற இடமெல்லாமே உளறல்... உளறல்... புதுமாப்பிள்ளையின் உளறலைத்தவிர வேறில்லை. கொஞ்ச நஞ்ச ததஜ அபிமானிகளின் வெறுப்பையும் சம்பாதித்தது தான் மிச்சம். மனைவியை பிரிந்து வந்த அல்டாபு காய்ச்சலிலேயே 4 நாட்களாக படுத்து விட்டார். ஆனாலும் ததஜ எடுபிடிகளோ இன்னைக்கி அங்க மீட்டிங்கு நாளைக்கி இங்க மீட்டிங்கு என்று புரளி கிளப்பி விட்டு கொண்டே இருந்தார்கள். தன்னுடைய அழைப்பில் வந்த கூட்டத்தை கணக்கு காட்டியிருந்தால் பெருமைபட்டுக் கொள்ளட்டும். கூட்டமாக இருந்த இடத்தில் இவர்கள் நின்று கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டு அதை எனக்கு வந்தது என்றால்... பாவம் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பான்சர் செய்த தொழிலதிபர்களோ இவர்கள் அடித்த கூத்தில் ஏற்பட்ட அவமானத்தால் அவர்கள் நிறுவனத்தின் விளம்பர பேனரை கூட கட்ட மறுத்து விட்டனர். பொருளாதார உதவி செய்த சில பெருந்தனக்காரர்களின் முகத்தில் ஈயாடவில்லை. பகலில் இலங்கை பள்ளிவாசலில் நடந்த சண்டையால் மாலை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த மற்ற இயக்கங்களைச் சார்ந்த பொதுஜனம் பாதிபேர். இதில் இலங்கையைச் சார்ந்தவர்களும் அடங்குவர். மீதிப்பாதியில் எந்த இயக்கத்தையும் சாராமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுபவர்கள் பாதி பேர். மீதிக்கால்வாசி பேர்தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ததஜவினர். இவர்களின் கணக்குப்படியே 700 /4 =175 பேர்தான். அதே மேடையில் ததஜ பொருப்பாளரும் கூட கணக்கிட்டு சொன்னதும் இதே எண்ணிக்கையை தான். இப்போது சொல்லுங்கள் இவர்கள் கூட்டத்தை கூட்டி எழுச்சி ஏற்படுத்தினார்களா..? அல்லது கூட்டமாக இருந்த இடத்தில் நின்று கொண்டு எழுச்சி என்கிறார்களா..?
தமுமுக ஒரு இடத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்தியது அது வெற்றி பெற்றது என்ற காரணத்தினால் அதே ஒத்துழைப்பு அந்த மக்கள் தமக்கும் தருவார்கள் என்று மனப்பால் குடித்துவிட்டு மறுவாரம் வீம்புக்கு அல்டாபையும் அழைத்துச் சென்றனர். ஆனால் நடந்தது என்ன அந்த பகுதியினர் அல்டாபை உள்ளேயே விடவில்லை. கண்ணியமாக நோன்பு திறந்து விட்டு சென்றுவிடுங்கள் என்று சொன்ன போதும் மீறி தனது உரையை ஆரம்பித்தார் அல்டாபு விளைவு பாதியிலேயே அந்தப்பள்ளியிலிருந்தும் விரட்டப்பட்டார்.
அடுத்தாக பெரிய பள்ளியில் (மஸ்ஜித் கபீர்) பேச்சு என்று ஒரு புரளி. சென்று பார்த்தால் இவர்கள் இத்தனை நாட்களாக செய்திருந்த சண்டை சச்சரவை கவனத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உள்ளேயே விடவில்லை. மார்க்கத்தைப் பற்றிய பேச்சு என்பதால் பள்ளிக்கு வெளியிலிருந்து மட்டும் சத்தம் போடாமல் இருந்து விட்டு செல்லுங்கள் என்று தடுத்து விட்டது நிர்வாகம். அவமானம் தாங்காமல் பள்ளிக்கு பின்பகுதியில் நோன்பு திறப்பதற்காக போடப்பட்ட கூடாரத்தில் தனியாக அமர்ந்து அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி பேசிவிட்டு கலைந்தனர். அதே பள்ளியில் முன்பகுதியில் மலையாளிகளும் இடப்பக்கத்தில் பங்காளிகளும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
இவ்வாறாக புண்ணியம் தேடும் ரமலான் மாதத்தில் இவர்களின் சுயகௌரவத்தை நிலைநாட்ட குவைத்திற்குள் புழுதியையும் புரளியையும் கிளப்பிவிட்டு பல நடுநிலை தவ்ஹீதுவாதிகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டு சமுதாயத்துக்குள் குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது தான் இவர்கள் இம்மாதத்தில் சம்பாதித்தது. இவர்களால் ஒன்று செய்ய முடியுமானால் அது குழப்பத்தைத் தவிர வேறில்லை. அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தைத் தந்து நேர்வழியில் இட்டுச்செல்ல பிரார்த்திக்கின்றோம்.
நன்றி: வசைபாடும் வாலிபர் சங்கம்-குவைத்

சமுதாயமே சிந்திக்க மாட்டாயா..?

கடந்த 2006 ல் தமுமுகவிடமிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகு தங்களது பலத்தையும் செல்வாக்கையும் எடைபோட்டு பார்க்க குடந்தை பேரணியை நடத்தும் போது மக்களிடம் ஒற்றுமையா இருந்து போராடினால் தான் இடஒதுக்கீடு கிடைக்கும். இடஒதுக்கீட்டுக்காக நடக்கும் போராட்டங்களில் யார் நடத்துகிறார்கள் என்று பார்க்காதீர்கள் அனைவரும் வாருங்கள் என்று வாய் வலிக்க அழைத்தார்கள். அதை நம்பி எங்கள் ஊர்களிலுள்ள முஸ்லிம் லீக், தமுமுக, தப்லீக் அமைப்புகளிடம் பேசி எல்லோரையும் கலந்து கொள்ள செய்தோம். ஆனால் நன்றி கெட்ட பி.ஜே. பேரணி முடிந்ததும் இது ததஜவிற்கு கிடைத்த வெற்றி என்று பேட்டி தருகிறார்.

அதே தினத்தில் தமுமுக சார்பாக சிறைவாசிகளுக்காக இரண்டு மாவட்ட மாநாடுகள் நடத்தினார்கள். அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டதை சமுதாயமே நீங்கள் பார்த்து கொண்டு தான் இருந்தீர்கள். எல்லா அடிவருடிகளும் ஒரே கேள்வியை தான் கேட்டார்கள். அதாவது ''சிறைவாசி பிரச்சனை-இடஒதுக்கீடு பிரச்சனை இரண்டுமே முக்கியம் தான் ஆனால் 6 மாதமாக ஏற்பாடு செய்து நாங்கள் பேரணி நடத்தும் அதே தினத்தில் தான் இவர்களும் மாநாடுகள் நடத்த வேண்டுமா? இவர்கள் தான் சமுதாயத்தை ஒன்று படுத்தப்போகிறார்களா? நேர்வழி படுத்தப்போகிறார்களா?" என்று திட்டித் தீர்த்தனர்.

ஆனால் என்றுமே முன்னுக்குப்பின் முரணாக பேசவும் எழுதவும் செயல்படவும் ததஜவுக்கு நிகர் ததஜவினரே. அதனால் தான் குடந்தை பேரணி குறித்து அவ்வாறு பேசியவர்கள் இன்று குவைத்தில் 12 ஆண்டுகளாக சாதனை புரிந்து வரும் (TMCA) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நமக்கும் குவைத்தில் இருக்கும் சக மதத்தினருக்கும் இணக்கம் ஏற்படும் வகையிலும் இந்திய தூதரகத்தில் தமிழர்களுக்கான தனி முத்திரையைப் பதிக்கவும் இந்திய தூதரை கௌரவிக்கவும் வருடந்தோரும் TMCA நடத்துகின்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. அந்த ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் முகமாக குவைத்தில் அதே நாளில் அதே நேரத்தில் ''இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இவ்வுலகில் அழிந்து போகும் செல்வாக்கையும் பலத்தை சோதித்துப்பார்க்கவும் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தவும் குழப்பம் உண்டாக்கவும் இதுபோன்ற சதி வேலைகளை தலைமை முதல் கடைநிலை தொண்டன் வரை இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.

பேரணி தினத்தன்று தமுமுகவே தவறு செய்துவிட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதே தவறை இன்று நீங்களே செய்திருக்கிறீர்களே… நீங்களெல்லாம் என்ன யோக்கியார்கள். உங்கள் பின்னால் சுற்றுபவர் களெல்லாம் முட்டாள்கள் என்பதாலா இல்லை? என்ன செய்தாலும் ஏன்? எதற்கு என்ற கேள்வியே வராது என்பதாலா..? இதே நிகழ்ச்சியை முந்திய வாரம் வைத்திருக்கலாம் இல்லை மறு வாரம் வைக்கலாம். நேரத்தையாவது மாற்றி வைத்திருக்கலாம். அட.. இஸ்லாமியர்கள் மார்க்கத்தை தெரிந்து கொள்ள பல வழிகள் பள்ளிவாயில்கள் இருக்கிறது. மாற்று மதத்தினருக்காக நிகழ்ச்சியை மட்டுமாவது வைத்திருக்கலாம். முடியாது உங்களால் ஏனென்றால் TMCA என்ன செய்திருக்கிறது என்ன செய்கிறது இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கவே இது போல் செய்கிறீர்கள். கூட்டத்தில திருடியவனே 'திருடன்" 'திருடன்" என்று கத்திக்கொண்டே ஓடினானாம். அது போல பிரிவினைக்கான எல்லா வேலைகளையும் செய்து விட்டு ஒற்றுமை ஒற்றுமை என வேடம் போடுவதால் தான் எல்லா பள்ளிவாயில் களிலிருந்தும் விரட்டப்படுகிறீர்கள்.

புரோகிதத்தை ஒழிப்போம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு ததஜ புரோகிதர்கள் இல்லாமல் எந்த காரியமும் இவர்கள் நடத்துவதில்லை. குர்ஆனையும் ஹதீஸ்களையும் யார் வேண்டுமானாலும் விளங்கிக் கொள்ளலாம் பழங்கால உலமாக்கள் பயம் காட்டி மறைத்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்து வந்தவர்கள் இன்று 'மையத்தை குளிப்பாட்டுவது எப்படி" என்ற தலைப்பில் நான்கு வாரங்களுக்கு டிவியில் வந்து பேசுகிறார். ஒரு வாரத்திற்கு 3.5 இலட்சங்கள் அரைமணிக்கு செலவாகிறது (3.5 x 4 வாரம் = 14 இலட்சங்கள்). மக்களிடம் வசூல் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். பிறகு அதே தலைப்பில் புத்தகம் கேஸட் சீடி விற்பனை இதனுடைய இலாபமெல்லாம் கமருன்னிஸாவின் கஜானாவிலே. 25 வருடமாக தவ்ஹீதை எடுத்து சொன்னார்களாம் இருந்தும் 60 வயது முண்டாசு கட்டிய முதியவருக்கு ஜகாத்தில் சந்தேகம். இவர்களின் சூது தெரியாமல் பின்னால் சுற்றுபவர்கள் திருந்துவதற்கு பிரார்த்திக்கின்றோம்.

October 07, 2007

தமுமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சி

குவைத் இஸ்லாமிய நிலையத்துடன் தமுமுக அம்காரா கிளையும் இணைந்து அம்காரா லேபர் கேம்ப்பில் கடந்த சனிக்கிழமை இப்தார் நிகழ்ச்சியை நடத்தியது. நூற்றுக்கணக்கான மாற்று மத நண்பர்களுடன் நமது இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமுமுக மண்டலத்தலைவர் அமானுல்லா மற்றும் தாயகத்திலிருந்து வருகைதந்திருக்கும் தொண்டி சகோ. நிளாமுத்தீன் அஷ்ரபி அவர்களும் கலந்து கொண்டனர். இப்தாருக்கு முன் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மஃரிப் தொழுகையோடு நிகழச்சி இனிதே நிறைவு பெற்றது.

மானத்தை பறக்கவிட்ட ததஜவினர்

அன்புச்சகோதரர்களே.., அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏகத்துவத்தை பரப்ப ஏரோப்ளைன் ஏறி வந்து தலைமையின் மானம், மண்டலத்தின் மானம், ததஜவில் சேராத தூய தவ்ஹீதுவாதிகளின் எல்லாத்தையும் குவைத்தின் பாலைவனக்காற்றில் பறக்க விட்டார் அல்டாபு அல்டாபி. என்ன செய்ய எந்த குணம் போனாலும் நாயின் சொந்த குணம் போகுமா - அதைப்போல பிழைக்க வந்த இடத்தில் மார்க்க பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தான் கெட்டதில்லாமல் வாய்ப்பு கொடுத்தவரின் பிழைப்பையும் சேர்த்து கெடுப்பது ததஜ பாசறையில் பயின்றவர்களால் மட்டுமே முடியும்.

ஒற்றுமை எனும் தலைப்பில் பேச ஆரம்பித்து பேச்சை முடிக்கும் போது பள்ளிவாயிலுக்கள்ளேயே சண்டை போட்டு கொண்டு இலங்கை - தமிழக இஸ்லாமியர்கள் ததஜவினர் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றனர்.

புகைப்படத்துடன் விவரங்கள் அடுத்த பதிவில்.
வஸ்ஸலாம்.