இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label வசூல் ஒற்றுமை TMCA ததஜ தமுமுக குடந்தை. Show all posts
Showing posts with label வசூல் ஒற்றுமை TMCA ததஜ தமுமுக குடந்தை. Show all posts

October 17, 2007

சமுதாயமே சிந்திக்க மாட்டாயா..?

கடந்த 2006 ல் தமுமுகவிடமிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகு தங்களது பலத்தையும் செல்வாக்கையும் எடைபோட்டு பார்க்க குடந்தை பேரணியை நடத்தும் போது மக்களிடம் ஒற்றுமையா இருந்து போராடினால் தான் இடஒதுக்கீடு கிடைக்கும். இடஒதுக்கீட்டுக்காக நடக்கும் போராட்டங்களில் யார் நடத்துகிறார்கள் என்று பார்க்காதீர்கள் அனைவரும் வாருங்கள் என்று வாய் வலிக்க அழைத்தார்கள். அதை நம்பி எங்கள் ஊர்களிலுள்ள முஸ்லிம் லீக், தமுமுக, தப்லீக் அமைப்புகளிடம் பேசி எல்லோரையும் கலந்து கொள்ள செய்தோம். ஆனால் நன்றி கெட்ட பி.ஜே. பேரணி முடிந்ததும் இது ததஜவிற்கு கிடைத்த வெற்றி என்று பேட்டி தருகிறார்.

அதே தினத்தில் தமுமுக சார்பாக சிறைவாசிகளுக்காக இரண்டு மாவட்ட மாநாடுகள் நடத்தினார்கள். அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டதை சமுதாயமே நீங்கள் பார்த்து கொண்டு தான் இருந்தீர்கள். எல்லா அடிவருடிகளும் ஒரே கேள்வியை தான் கேட்டார்கள். அதாவது ''சிறைவாசி பிரச்சனை-இடஒதுக்கீடு பிரச்சனை இரண்டுமே முக்கியம் தான் ஆனால் 6 மாதமாக ஏற்பாடு செய்து நாங்கள் பேரணி நடத்தும் அதே தினத்தில் தான் இவர்களும் மாநாடுகள் நடத்த வேண்டுமா? இவர்கள் தான் சமுதாயத்தை ஒன்று படுத்தப்போகிறார்களா? நேர்வழி படுத்தப்போகிறார்களா?" என்று திட்டித் தீர்த்தனர்.

ஆனால் என்றுமே முன்னுக்குப்பின் முரணாக பேசவும் எழுதவும் செயல்படவும் ததஜவுக்கு நிகர் ததஜவினரே. அதனால் தான் குடந்தை பேரணி குறித்து அவ்வாறு பேசியவர்கள் இன்று குவைத்தில் 12 ஆண்டுகளாக சாதனை புரிந்து வரும் (TMCA) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நமக்கும் குவைத்தில் இருக்கும் சக மதத்தினருக்கும் இணக்கம் ஏற்படும் வகையிலும் இந்திய தூதரகத்தில் தமிழர்களுக்கான தனி முத்திரையைப் பதிக்கவும் இந்திய தூதரை கௌரவிக்கவும் வருடந்தோரும் TMCA நடத்துகின்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. அந்த ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் முகமாக குவைத்தில் அதே நாளில் அதே நேரத்தில் ''இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இவ்வுலகில் அழிந்து போகும் செல்வாக்கையும் பலத்தை சோதித்துப்பார்க்கவும் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தவும் குழப்பம் உண்டாக்கவும் இதுபோன்ற சதி வேலைகளை தலைமை முதல் கடைநிலை தொண்டன் வரை இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.

பேரணி தினத்தன்று தமுமுகவே தவறு செய்துவிட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதே தவறை இன்று நீங்களே செய்திருக்கிறீர்களே… நீங்களெல்லாம் என்ன யோக்கியார்கள். உங்கள் பின்னால் சுற்றுபவர் களெல்லாம் முட்டாள்கள் என்பதாலா இல்லை? என்ன செய்தாலும் ஏன்? எதற்கு என்ற கேள்வியே வராது என்பதாலா..? இதே நிகழ்ச்சியை முந்திய வாரம் வைத்திருக்கலாம் இல்லை மறு வாரம் வைக்கலாம். நேரத்தையாவது மாற்றி வைத்திருக்கலாம். அட.. இஸ்லாமியர்கள் மார்க்கத்தை தெரிந்து கொள்ள பல வழிகள் பள்ளிவாயில்கள் இருக்கிறது. மாற்று மதத்தினருக்காக நிகழ்ச்சியை மட்டுமாவது வைத்திருக்கலாம். முடியாது உங்களால் ஏனென்றால் TMCA என்ன செய்திருக்கிறது என்ன செய்கிறது இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கவே இது போல் செய்கிறீர்கள். கூட்டத்தில திருடியவனே 'திருடன்" 'திருடன்" என்று கத்திக்கொண்டே ஓடினானாம். அது போல பிரிவினைக்கான எல்லா வேலைகளையும் செய்து விட்டு ஒற்றுமை ஒற்றுமை என வேடம் போடுவதால் தான் எல்லா பள்ளிவாயில் களிலிருந்தும் விரட்டப்படுகிறீர்கள்.

புரோகிதத்தை ஒழிப்போம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு ததஜ புரோகிதர்கள் இல்லாமல் எந்த காரியமும் இவர்கள் நடத்துவதில்லை. குர்ஆனையும் ஹதீஸ்களையும் யார் வேண்டுமானாலும் விளங்கிக் கொள்ளலாம் பழங்கால உலமாக்கள் பயம் காட்டி மறைத்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்து வந்தவர்கள் இன்று 'மையத்தை குளிப்பாட்டுவது எப்படி" என்ற தலைப்பில் நான்கு வாரங்களுக்கு டிவியில் வந்து பேசுகிறார். ஒரு வாரத்திற்கு 3.5 இலட்சங்கள் அரைமணிக்கு செலவாகிறது (3.5 x 4 வாரம் = 14 இலட்சங்கள்). மக்களிடம் வசூல் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். பிறகு அதே தலைப்பில் புத்தகம் கேஸட் சீடி விற்பனை இதனுடைய இலாபமெல்லாம் கமருன்னிஸாவின் கஜானாவிலே. 25 வருடமாக தவ்ஹீதை எடுத்து சொன்னார்களாம் இருந்தும் 60 வயது முண்டாசு கட்டிய முதியவருக்கு ஜகாத்தில் சந்தேகம். இவர்களின் சூது தெரியாமல் பின்னால் சுற்றுபவர்கள் திருந்துவதற்கு பிரார்த்திக்கின்றோம்.