இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

October 17, 2007

தனக்கு தனக்குன்னா...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் நாட்டில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் இதுவரை மடமையில் மூழ்கியிருந்ததாகவும் அல்டாபு வந்தபிறகு தான் தவ்ஹீதில் எழுச்சி ஏற்பட்டதாகவும் திருடிய பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தியை பார்த்து வேதனையடைந்தோம். இந்தக் கேடு கெட்டதுகள் தங்கள் தனிமனித வாழ்க்கையில் இறைமறுப்புக்கு இட்டுச் செல்லும் காரியங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டு மக்கள் மத்தியில் தவ்ஹீது வேடம் போடுகிறார்கள்.
எழுதுகிறவன் தான் தன் இஷ்டத்திற்கு எழுதுகிறான் என்றால் படிக்கிறவர்களுக்காவது அறிவு இருக்க வேண்டாம். (இவர்களது பத்திரிக்கையை படிக்க அறிவு வேற வேண்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது) இருந்தாலும் விழிப்புணர்வு கொடுப்பது எங்கள் கடமை. விளங்கிக் கொள்ளுங்கள் 4+5+4x20=260+100 பேர் அளவுக்கு நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்தவர்கள். (அதாவது 4 இருக்கைகள் 20 வரிசை பக்கத்தில் 5இருக்கைகள் 20 வரிசை கடைசியாக 4இருக்கைகள் 20 வரிசை ஆக 4+5+4x20=260 நின்றுகொண்டும் நடந்து கொண்டும் 100 பேர் அளவுக்கு இருந்தார்கள்) ஆறாம் வகுப்பு கூட பாஸ் பண்ண முடியாத கூமுட்டை தலைவருக்கு தெரியுமா ஒரு சதுர மீட்டர் அளவில் எத்தனை நபர்கள் நிற்கவும் உட்காரவும் முடியுமென்று இல்லை மருத்துவத்திற்கு படித்திருந்தும் ததஜவின் முட்டாள்களுக்குப் பின் குடை தூக்கிக் கொண்டு செல்பவருக்குத்தான் தெரியுமா?
தலைவனின் புத்தியே இந்த தொண்டர்களுக்கும். வாய் கூசாமல் ரமலான் என்றும் பாராமல் அதுவும் கண்ணியமிக்க இரவை தேடும் இறுதிப்பத்து என்ற நினைவு கூட இல்லாமல் 700 பேர்கள் என்று அண்டப்புழுகும் ஆகாசப்புழுகும் சேர்த்து எழுதிய செய்தித்தாளைப் படிக்க வேண்டுமென்றால் அது தமுமுகவிடமிருந்து இவர்களால் களவாடப்பட்ட உணர்வு ஒன்றில் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாம் ஆம் இஸ்லாமியச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டோரின் ஈனக்குரல்.
புதுசா திருமணம் முடித்தவரை முழுதாகக் கூட வாழ விடாமல் பாதியிலேயே குவைத்துக்கு இழுத்து வந்து தலைவரின் துதி பாட வைத்தார்கள். புது மனைவின் நினைவிலேயே சென்ற இடமெல்லாமே உளறல்... உளறல்... புதுமாப்பிள்ளையின் உளறலைத்தவிர வேறில்லை. கொஞ்ச நஞ்ச ததஜ அபிமானிகளின் வெறுப்பையும் சம்பாதித்தது தான் மிச்சம். மனைவியை பிரிந்து வந்த அல்டாபு காய்ச்சலிலேயே 4 நாட்களாக படுத்து விட்டார். ஆனாலும் ததஜ எடுபிடிகளோ இன்னைக்கி அங்க மீட்டிங்கு நாளைக்கி இங்க மீட்டிங்கு என்று புரளி கிளப்பி விட்டு கொண்டே இருந்தார்கள். தன்னுடைய அழைப்பில் வந்த கூட்டத்தை கணக்கு காட்டியிருந்தால் பெருமைபட்டுக் கொள்ளட்டும். கூட்டமாக இருந்த இடத்தில் இவர்கள் நின்று கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டு அதை எனக்கு வந்தது என்றால்... பாவம் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பான்சர் செய்த தொழிலதிபர்களோ இவர்கள் அடித்த கூத்தில் ஏற்பட்ட அவமானத்தால் அவர்கள் நிறுவனத்தின் விளம்பர பேனரை கூட கட்ட மறுத்து விட்டனர். பொருளாதார உதவி செய்த சில பெருந்தனக்காரர்களின் முகத்தில் ஈயாடவில்லை. பகலில் இலங்கை பள்ளிவாசலில் நடந்த சண்டையால் மாலை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த மற்ற இயக்கங்களைச் சார்ந்த பொதுஜனம் பாதிபேர். இதில் இலங்கையைச் சார்ந்தவர்களும் அடங்குவர். மீதிப்பாதியில் எந்த இயக்கத்தையும் சாராமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுபவர்கள் பாதி பேர். மீதிக்கால்வாசி பேர்தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ததஜவினர். இவர்களின் கணக்குப்படியே 700 /4 =175 பேர்தான். அதே மேடையில் ததஜ பொருப்பாளரும் கூட கணக்கிட்டு சொன்னதும் இதே எண்ணிக்கையை தான். இப்போது சொல்லுங்கள் இவர்கள் கூட்டத்தை கூட்டி எழுச்சி ஏற்படுத்தினார்களா..? அல்லது கூட்டமாக இருந்த இடத்தில் நின்று கொண்டு எழுச்சி என்கிறார்களா..?
தமுமுக ஒரு இடத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்தியது அது வெற்றி பெற்றது என்ற காரணத்தினால் அதே ஒத்துழைப்பு அந்த மக்கள் தமக்கும் தருவார்கள் என்று மனப்பால் குடித்துவிட்டு மறுவாரம் வீம்புக்கு அல்டாபையும் அழைத்துச் சென்றனர். ஆனால் நடந்தது என்ன அந்த பகுதியினர் அல்டாபை உள்ளேயே விடவில்லை. கண்ணியமாக நோன்பு திறந்து விட்டு சென்றுவிடுங்கள் என்று சொன்ன போதும் மீறி தனது உரையை ஆரம்பித்தார் அல்டாபு விளைவு பாதியிலேயே அந்தப்பள்ளியிலிருந்தும் விரட்டப்பட்டார்.
அடுத்தாக பெரிய பள்ளியில் (மஸ்ஜித் கபீர்) பேச்சு என்று ஒரு புரளி. சென்று பார்த்தால் இவர்கள் இத்தனை நாட்களாக செய்திருந்த சண்டை சச்சரவை கவனத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உள்ளேயே விடவில்லை. மார்க்கத்தைப் பற்றிய பேச்சு என்பதால் பள்ளிக்கு வெளியிலிருந்து மட்டும் சத்தம் போடாமல் இருந்து விட்டு செல்லுங்கள் என்று தடுத்து விட்டது நிர்வாகம். அவமானம் தாங்காமல் பள்ளிக்கு பின்பகுதியில் நோன்பு திறப்பதற்காக போடப்பட்ட கூடாரத்தில் தனியாக அமர்ந்து அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி பேசிவிட்டு கலைந்தனர். அதே பள்ளியில் முன்பகுதியில் மலையாளிகளும் இடப்பக்கத்தில் பங்காளிகளும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
இவ்வாறாக புண்ணியம் தேடும் ரமலான் மாதத்தில் இவர்களின் சுயகௌரவத்தை நிலைநாட்ட குவைத்திற்குள் புழுதியையும் புரளியையும் கிளப்பிவிட்டு பல நடுநிலை தவ்ஹீதுவாதிகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டு சமுதாயத்துக்குள் குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது தான் இவர்கள் இம்மாதத்தில் சம்பாதித்தது. இவர்களால் ஒன்று செய்ய முடியுமானால் அது குழப்பத்தைத் தவிர வேறில்லை. அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தைத் தந்து நேர்வழியில் இட்டுச்செல்ல பிரார்த்திக்கின்றோம்.
நன்றி: வசைபாடும் வாலிபர் சங்கம்-குவைத்

No comments: