மனிதநீதி பாசறை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு பாறைபட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை தெருக்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது சிலர் கல் மற்றும் செருப்புகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மறியல் உட்பட பல சம்பவங்கள் நடந்ததால் பதட்டம் நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பாறைபட்டி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு கோட்டை குளத்தில் விசர்ஜனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சிலை பாறைபட்டியில் இருந்து ஊர்வலமாக பேகம்பூர் வழியாக வந்த போது, மனித நீதிபாசறை, தமிழ்நாடு முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த 60 பேர் கோஷங்களை எழுப்பியவாறு விநாயகர் சிலையை மறித்தனர்.
இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டி.ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., பாரி ஆகியோர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் மாலை 4 மணிக்கு இந்து முன்னணி சார்பில் 45 விநாயகர் சிலைகள் திருவள்ளூவர் சாலை, ஆர்.எஸ்.ரோடு, சென்ட்ரல் ரோடு, தெற்குரதவீதி வழியாக எடுத்து செல்லப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன், மாநில துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், பா.ஜ., பொது செயலாளர் திருமலைபாலாஜி, ஆடிட்டர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., பாரி, கூடுதல் எஸ்.பி., ஜெயஸ்ரீ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment