இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 20, 2008

மத்திய போலீஸ் பிரிவில் உதவி கமாண்டன்ட் பணி

மத்திய போலீஸ் பிரிவுகளான எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத் போலீஸ் பிரிவு, சகஸ்ட்ர சீமா பால் ஆகியவற்றில் காலியாகவுள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வழக்கமாக கடுமையான போட்டியை உள்ளடக்கியுள்ள பணியிடங்கள் இவை. பெருமை தருவதாகவும் சாகசங்கள் நிறைந்ததாகவும் உள்ள மத்திய துணை ராணுவப் பிரிவு பணியான இதற்கு சிறப்பான உடற்தகுதியும் தேவை.
தகுதிகள்: ஆகஸ்ட் 1, 2008 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும். பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பான உடற் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனினும் பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி. போன்ற பிரிவுகளில் உள்ள பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இதற்கான முதற்கட்டத் தேர்வை யு.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வாக நடத்தும். எழுத்துத் தேர்வில் ஜெனரல் எபிலிடி மற்றும் இன்டலிஜென்ஸ் பகுதியும் விரிவாக விடையளிக்கும் கட்டுரை வரைதல், சுருக்கி வரைதல் மற்றும் காம்ப்ரிஹென்சன் ஆகிய பகுதிகள் இடம் பெறும். தமிழ்நாட்டில் மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறுவோருக்கு உடற் திறனறியும் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தும். இதில் ஆண்களுக்கு பின்வரும் தேர்வு முறைகள் நடத்தப்படும். 16 செகண்டுகளில் 100 மீட்டர் ஓட்டம், 3 நிமிடங்களில் 800 மீட்டர் ஓட்டம், 3 வாய்ப்புகளில் 3.5 மீட்டர் நீளம் தாண்டுதல், 3 வாய்ப்புகளில் 1.05 மீட்டர் உயரம் தாண்டுதல், 7.26 கிலோ எடையுள்ள சாட்புட்டை 4.5 மீட்டர் தூரம் எறிதல்பெண்களுக்கு இவை 100 மீ.தூரம் ஓடுவது 18 செகண்டுகளுக்கும், 800 மீட்டர் ஓட்டம் 4 நிமிடங்களுக்கும், நீளம் தாண்டுவது 3 மீட்டருக்கும், உயரம் தாண்டுவது 0.9மீட்டருக்கும் நடத்தப்படும். குண்டு எறிதல் கிடையாது. இதன் பின் நடத்தப்படும் ஆளுமைத் திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை யு.பி.எஸ்.சி. நடத்தும்.
விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிட்ட தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் யு.பி.எஸ்.சியின் உதவி கமாண்டன்ட் பணிக்கான விண்ணப்பத்தைப் பெற்று நிரப்பி அனுப்ப வேண்டும். இதன் விலை ரூ.20 மட்டுமே. விண்ணப்பத்தில் தபால் அலுவலகம் ஒன்றில் ரூ.100க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீ ஸ்டாம்பைப் பெற்று அதை கேன்சலிங் என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. விண்ணப்பத்துடன் எந்த சான்றிதழ் நகலையும் இணைக்கக் கூடாது. விண்ணப்பத்தை சாதாரண தபால்/விரைவுத் தபால்/கூரியர் ஆகியவை மூலமாக அனுப்பலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி: Secretary, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi – 110 069.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூன் 9, 2008
முழு விபரங்களறிய இன்டர்நெட் முகவரி: http://upsc.gov.in/exams

No comments: