இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 06, 2008

வாழ்த்துக்களும்..! பிரார்த்தனைகளும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
திருநாகேஸ்வரம் அருகே முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் திடீர் என பிள்ளையார் சிலை மற்றும் காவி கொடி கம்பங்களை மர்ம மனிதர்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஆர்.வி. நகரில் முஸ்லிம் ஜமாத்தார் அப்துல் அஜீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்ட முடிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். நேற்று முன்தினம் சுத்தம் செய்யும் பணி முடிந்ததும், நேற்று காலை அவ்விடத்தில் பணிகள் தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகளை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதன்படி நேற்று காலை ஜமாத்தார் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் அவ்விடத்திற்கு வந்தனர்.
அப்போது அந்த இடத்தில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு, மூங்கில் கம்புகள் சுற்றிலும் நடப்பட்டு அவற்றில் காவி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. யாரோ மர்ம மனிதர்கள் இரவோடு இரவாக சிலை மற்றும் கொடிக்கம்பங்களை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இது பற்றி போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, முஸ்லிம் ஜமாத்தாரிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் தனபால், வீரையன் ஆகியோர் மூலம் பெற்ற ஆவணங்களை தாசில்தார் சரிபார்த்தார். இதன்படி சுமார் 20 ஆண்டுகளாக அந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து கும்பகோணம் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் மர்ம மனிதர்களால் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, மற்றும் கொடி கம்பங்களை அகற்றி, அவற்றை கும்பகோணம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலுள்ளது தினத்தந்தி(http://dailythanthi.com/article.asp?NewsID=410948&disdate=5/6/2008) யின் இன்றைய (06-05-2008) செய்தி.

நேற்றிரவு சற்று நேரம் விண்டிவி பார்க்க நேர்ந்தது. அப்போது நீதியின் குரல் நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்தார்கள். வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாயில் தொழுகை நடத்துவது பற்றிய தலைப்பில் விவாதம் நடந்தது. உலகம் முழுவதும் மக்கள் காணக்கூடிய நிகழ்ச்சியில் தகவல்களை தரமான முறையில் தரவேண்டும். இந்துக்கள் மட்டும் தான் இந்தியாவில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்களாம். பிறகெதற்கு வர்ணங்களை உறுவாக்கினார்கள். இவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் ஒரு இந்திய குடிமகன் சாப்பிட்ட தட்டில் இவர்கள் உணவு உண்ணத்தயாரா..? தண்ணீர் குடித்த டம்ளர் தண்ணீர் குடிக்க தயாரா..? திருமணம் முடிக்க தயாரா..?

தம்மம்பட்டி பற்றிய செய்தி ஒன்று சொன்னார் தற்போது இவர்கள் நடத்தி முடித்த விநாயகர் சதுர்த்திக்கு பள்ளிவாயில் முன்பாகவே சிலையை வைத்து தொந்தரவு செய்தனர். இதுதான் இவர்கள் கொண்ட சகிப்புத்தன்மையா..? 45வருடமாக விட்டுக்கொடுத்ததன் விளைவு இன்று பாபர் மஸ்ஜிதை இழந்து நிற்கின்றோம். அந்த நடந்த கொடூரங்களை எப்படியாவது தமிழகத்தில் அரங்கேற்ற பாஸிச சக்தி்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. நமது பிரார்த்தனைகளாலும், இறைவனின் மாபெரும் கிருபையாலும் இவர்களின் சதிகளை முறியடித்து இறையில்லத்தை மீட்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

09-05-2008 வெள்ளிக்கிழமை அன்று இன்ஷா அல்லாஹ் தமுமுக நடத்த இருக்கும் இந்த வாழ்வுரிமைப் போரில் தமிழக இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும், பெருமானார் காட்டிய வழியும், ஈமானில் முதல் தரமுமான கையால் தடுக்க ஒன்று சேருங்கள். இறைவன் உதவி செய்வான். பலகீனமான ஈமானாக இருப்பவர்கள் குறைந்த பட்சம் துஆ செய்யுங்கள். கண்ணைவிற்று ஓவியம் வாங்குவது போல் பள்ளிவாயில்களை இழந்தப்பின் எழுச்சி எற்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இருக்கும் போது குறைசொல்லிவிட்டு தொலைந்தப்பின் தேடுவதில் அர்த்தமில்லை.

இந்த இறையில்ல மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்வோரை வாழ்த்தி வரவேற்கின்றோம். வெற்றியுடன் திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
தமுமுக-குவைத் மண்டலம்.

No comments: