இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 09, 2010

சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

சேலம்,​​ மே 7: சேலத்​தைச் சேர்ந்த ஆசி​ரி​யர் தம்​ப​தி​ய​ரின் மகன் சபீ​ருல்லா ​(30) ​ ஐஏ​எஸ் தேர்​வில் வெற்றி பெற்​றுள்​ளார்.​
÷ஐ​ஏ​எஸ் தேர்வு ​(2009) முடி​வு​கள் வியா​ழக்​கி​ழமை வெளி​யி​டப்​பட்​டன.​ இதில் நாடு முழு​வ​தும் ​ 875 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ இதில் தமி​ழ​கத்​தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்​றுள்​ள​னர்.​ சேலம் அம்​மாப்​பேட்டை வித்யா நக​ரைச் சேர்ந்​த​வர் ஐ.கரா​மத்​துல்லா ​(67).​ கன்​னங்​கு​றிச்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இவ​ரது மனைவி மெஹ​தாப் பேகம் ​(65).​ சேலம் சாரதா கல்​லூ​ரி​யில் வேதி​யி​யல் துறைத் தலை​வ​ராக பணி​யாற்​றி​ய​வர்.​
÷இ​வர்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் மென்​பொ​ருள் பொறி​யா​ள​ரா​கப் பணி​யாற்​றும் இப்​ரா​ஹிம் ​(32),​ பெத்​த​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் ஆசி​ரி​யை​யா​கப் பணி​யாற்​றும் ஆயிஷா ​(33),​ பெங்​க​ளூர் ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யாற்​றும் முக​மது ஒய்.சபீ​ருல்லா ​(29) ஆகிய மூன்று குழந்​தை​கள் உள்​ள​னர்.​
÷ச​பீ​ருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்​ளி​யில் 1998-ல் பள்​ளிப் படிப்பை முடித்​து​விட்டு கோவை பிஎஸ்ஜி கல்​லூ​ரி​யில் பி.இ.​ ​(எலெக்ட்​ரி​கல் மற்​றும் எலெக்ட்​ரா​னிக்ஸ்)​ படித்​துள்​ளார்.​ படிப்பை முடித்த பிறகு டாடா கன்​சல்​டன்ஸி நிறு​வ​னத்​தில் வேலைக்கு சேர்ந்​தார்.​
÷ஆ​னால் அதை ராஜி​நாமா செய்​து​விட்டு எம்.பி.ஏ.​ படிப்​ப​தற்​காக கர்​நா​ட​கத்​தின் மணிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சேர்ந்​துள்​ளார்.​ எம்.பி.ஏ.​ முடித்த இவர் இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் ஐ.பி.எம்.​ கணினி நிறு​வ​னத்​தில் நிதி ஆலோ​ச​க​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷வே​லைக்​குச் சென்று விட்டு வந்து பகுதி நேர​மா​கப் படித்து முதல் முயற்​சி​யி​லேயே ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் நாட்​டில் 55-வது இடம் பிடித்து சபீ​ருல்லா வெற்றி பெற்​றுள்​ளார்.​ சபீ​ருல்​லா​வுக்கு ஆசியா யாஷ்​மின் ​(25) என்​ப​வ​ரு​டன் திரு​ம​ணம் நடை​பெற்​றுள்​ளது.​ பி.இ.,​​ எம்.எஸ்.​ படித்​துள்ள இவர் தனி​யார் கல்​லூ​ரி​யில் விரி​வு​ரை​யா​ள​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷இது குறித்து சபீ​ருல்​லா​வின் தந்தை கரா​மத்​துல்லா கூறும்​போது,​​ டாடா நிறு​வ​னத்​தில் நல்ல வேலை​யில் இருந்த சபீ​ருல்லா மேலும் படிக்க வேண்​டும் என்ற ஆவ​லில் ராஜி​நாமா செய்​து​விட்டு வந்​து​விட்​டார்.​ பின்​னர் எம்.பி.ஏ.​ படித்து ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யில் சேர்ந்​தார்.​
÷தி​ன​மும் வேலை விட்டு வந்​த​தும் அதி​காலை 2 மணி வரை கண்​வி​ழித்து படித்து வந்​தார்.​ இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் இருக்​கும் அவர்,​​ ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் வெற்றி பெற்​றது குறித்து மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார்.​ அவ​ரது வெற்​றிக்கு பெற்​றோ​ரா​கிய நாங்​க​ளும்,​​ அவ​ரது மனை​வி​யின் ஒத்​து​ழைப்​புமே கார​ணம் என்று தெரி​வித்​துள்ள அவர்,​​ மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​

May 02, 2010

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் 24.10.2010 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னும் தலைப்பில் சமூகத்தில் குவிந்து கிடக்கும் அறிவு மற்றும் மதிப்புகளை பரப்பும் விதமாக மாபெரும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் மீராமைதீன் தலைமை வகிக்க, மருத்துவர் தங்கராசு, டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ஹக்கீம் மற்றும் அற்புதரோச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெறியாளர்களாக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முனைவர் ஆபிதின் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் காமரர்சு அவர்கள், மற்றும் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக லெப்பைகுடிக்காடு மாணவரணி செயலாளர் சபீர் அஹமது வரவேற்க்க, இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷh மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் ரசீதுஅகமது, மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் தௌ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோர் உட்பட திரளாக பங்கேற்றனர். மற்றும் மாற்று மத சகோதரர்களும் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.