இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 04, 2008

பயன்தரும் படிப்புகள்:

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான நவீன இன்ஜினியரிங் படிப்பு மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். இன்டர்நெட் மூலம் இயந்திரங்களை இயக்குவது, தானியங்கி முறையில் ரோபோக்கள், இன்ஜின்களை கட்டுபடுத்தி நிர்வகிப்பது போன்ற பாடங்களை கொண்ட புதுமையான துறை இது. இதற்கான இயந்திரங்களை வடிவமைத்து, இயக்கும் திறன் மிக்க இன்ஜினியர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. சிக்கனமான, நம்பிக்கையான, நவீன தொழில் நுட்பங்களை வடிவமைக்க உதவும் இந்த புதிய படிப்பு, தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
"மெக்கட்ரானிக்ஸ்' என்ற வார்த்தையை முதன்முதலில் "யஸ்காவா' என்ற ஜப்பானிய நிறுவனத்தின் முதுநிலை இன்ஜினியர் டெட்சுரோ மோரி என்பவர் பயன்படுத்தினார். மெக்கட்ரானிக்ஸ், "எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ்', "கன்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
மெக்கட்ரானிக்ஸ் பாடத்திட்டத்தில் கணிதம், இயந்திரவியல், இயந்திர உதிரிபாகங்களின் வடிவமைப்பு, இயந்திரங்களின் வடிவமைப்பு, தகவல்தொடர்பு, தெர்மோடைனமிக்ஸ், சர்க்யூட்ஸ் அண்டு சிஸ்டம்ஸ், கன்ட்ரோல் தியரி, டிஜிட்டல் சிக்னல் புராசசிங், பவர் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
பி.இ., மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை தமிழகத்தில் கீழ்க்கண்ட கல்லூரிகள் வழங்குகின்றன:

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி- கோவை
கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி - பெருந்துறை, ஈரோடு
ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி- கோவை
கே.எஸ்.ஆர்., தொழில்நுட்ப கல்லூரி- திருச்செங்கோடும
காராஜா இன்ஜினியரிங் கல்லூரி - அவினாசி


நேவல் ஆர்க்கிடெக்சர்:
நேவல் ஆர்க்கிடெக்சர் கப்பல் வடிவமைப்பு, கப்பல் கட்டுதல், அவற்றை பழுதுபார்த்தல் தொடர்பான இன்ஜினியரிங் படிப்பு. இது நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிபுணர்கள், கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தில் திறமைமிக்கவர்களுடன் இணைந்து செயல்படும் கூட்டுமுயற்சியாகும். விமானம், கார், விண்கலங்கள் வடிவமைப்பு தொடர்பான கருவிகளும், நிபுணர்கள் அதிக அளவில் உள்ளனர். கப்பல் பயணம், கடல் அலைகளையும், காற்றின் திசையையும் சார்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிடைப்பது கடினம் என்பதால் நேவல் ஆர்க்கிடெக்சர் ஆராய்ச்சிகள் சந்திக்கும் சிக்கல்கள் மற்ற துறைகளை விட அதிகம்.
நேவல் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,
ஆந்திர பல்கலைக்கழகம், விசாகப்பட்டிணம்.


பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்:
பெட்ரோலியம் டெக்னாலஜி பரந்து விரிந்த ஒரு துறை. இதில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்கள் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டறிகின்றனர். இதற்கு நிலஅமைப்பியல் தொடர்பான திறனும் அவசியம். இந்த துறை நிபுணர்களை ஜியாலஜிக்கல் பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட் என்று அழைக்கின்றனர். கச்சா எண்ணெய்யை வெவ்வேறு நிலைகளில் பிரித்து சுத்திகரிக்கும் பணியில் ஈடுபவர் லேபாரட்டரி பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட். எண்ணெய் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. விற்பனை பிரிவிலும், மறுசுத்திகரிப்பு பிரிவிலும் கூட இவர்கள் பணியாற்றலாம். இந்த துறை வல்லுனர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு குறைவு.

No comments: