இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 09, 2010

சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

சேலம்,​​ மே 7: சேலத்​தைச் சேர்ந்த ஆசி​ரி​யர் தம்​ப​தி​ய​ரின் மகன் சபீ​ருல்லா ​(30) ​ ஐஏ​எஸ் தேர்​வில் வெற்றி பெற்​றுள்​ளார்.​
÷ஐ​ஏ​எஸ் தேர்வு ​(2009) முடி​வு​கள் வியா​ழக்​கி​ழமை வெளி​யி​டப்​பட்​டன.​ இதில் நாடு முழு​வ​தும் ​ 875 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ இதில் தமி​ழ​கத்​தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்​றுள்​ள​னர்.​ சேலம் அம்​மாப்​பேட்டை வித்யா நக​ரைச் சேர்ந்​த​வர் ஐ.கரா​மத்​துல்லா ​(67).​ கன்​னங்​கு​றிச்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இவ​ரது மனைவி மெஹ​தாப் பேகம் ​(65).​ சேலம் சாரதா கல்​லூ​ரி​யில் வேதி​யி​யல் துறைத் தலை​வ​ராக பணி​யாற்​றி​ய​வர்.​
÷இ​வர்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் மென்​பொ​ருள் பொறி​யா​ள​ரா​கப் பணி​யாற்​றும் இப்​ரா​ஹிம் ​(32),​ பெத்​த​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் ஆசி​ரி​யை​யா​கப் பணி​யாற்​றும் ஆயிஷா ​(33),​ பெங்​க​ளூர் ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யாற்​றும் முக​மது ஒய்.சபீ​ருல்லா ​(29) ஆகிய மூன்று குழந்​தை​கள் உள்​ள​னர்.​
÷ச​பீ​ருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்​ளி​யில் 1998-ல் பள்​ளிப் படிப்பை முடித்​து​விட்டு கோவை பிஎஸ்ஜி கல்​லூ​ரி​யில் பி.இ.​ ​(எலெக்ட்​ரி​கல் மற்​றும் எலெக்ட்​ரா​னிக்ஸ்)​ படித்​துள்​ளார்.​ படிப்பை முடித்த பிறகு டாடா கன்​சல்​டன்ஸி நிறு​வ​னத்​தில் வேலைக்கு சேர்ந்​தார்.​
÷ஆ​னால் அதை ராஜி​நாமா செய்​து​விட்டு எம்.பி.ஏ.​ படிப்​ப​தற்​காக கர்​நா​ட​கத்​தின் மணிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சேர்ந்​துள்​ளார்.​ எம்.பி.ஏ.​ முடித்த இவர் இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் ஐ.பி.எம்.​ கணினி நிறு​வ​னத்​தில் நிதி ஆலோ​ச​க​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷வே​லைக்​குச் சென்று விட்டு வந்து பகுதி நேர​மா​கப் படித்து முதல் முயற்​சி​யி​லேயே ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் நாட்​டில் 55-வது இடம் பிடித்து சபீ​ருல்லா வெற்றி பெற்​றுள்​ளார்.​ சபீ​ருல்​லா​வுக்கு ஆசியா யாஷ்​மின் ​(25) என்​ப​வ​ரு​டன் திரு​ம​ணம் நடை​பெற்​றுள்​ளது.​ பி.இ.,​​ எம்.எஸ்.​ படித்​துள்ள இவர் தனி​யார் கல்​லூ​ரி​யில் விரி​வு​ரை​யா​ள​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷இது குறித்து சபீ​ருல்​லா​வின் தந்தை கரா​மத்​துல்லா கூறும்​போது,​​ டாடா நிறு​வ​னத்​தில் நல்ல வேலை​யில் இருந்த சபீ​ருல்லா மேலும் படிக்க வேண்​டும் என்ற ஆவ​லில் ராஜி​நாமா செய்​து​விட்டு வந்​து​விட்​டார்.​ பின்​னர் எம்.பி.ஏ.​ படித்து ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யில் சேர்ந்​தார்.​
÷தி​ன​மும் வேலை விட்டு வந்​த​தும் அதி​காலை 2 மணி வரை கண்​வி​ழித்து படித்து வந்​தார்.​ இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் இருக்​கும் அவர்,​​ ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் வெற்றி பெற்​றது குறித்து மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார்.​ அவ​ரது வெற்​றிக்கு பெற்​றோ​ரா​கிய நாங்​க​ளும்,​​ அவ​ரது மனை​வி​யின் ஒத்​து​ழைப்​புமே கார​ணம் என்று தெரி​வித்​துள்ள அவர்,​​ மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​

May 02, 2010

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் 24.10.2010 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னும் தலைப்பில் சமூகத்தில் குவிந்து கிடக்கும் அறிவு மற்றும் மதிப்புகளை பரப்பும் விதமாக மாபெரும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் மீராமைதீன் தலைமை வகிக்க, மருத்துவர் தங்கராசு, டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ஹக்கீம் மற்றும் அற்புதரோச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெறியாளர்களாக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முனைவர் ஆபிதின் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் காமரர்சு அவர்கள், மற்றும் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக லெப்பைகுடிக்காடு மாணவரணி செயலாளர் சபீர் அஹமது வரவேற்க்க, இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷh மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் ரசீதுஅகமது, மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் தௌ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோர் உட்பட திரளாக பங்கேற்றனர். மற்றும் மாற்று மத சகோதரர்களும் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

April 26, 2010

உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க விருப்பமா?: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: 'பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து செயல்பட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2010-2011ஆம் ஆண்டில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய ஒன்பது வட்டார வளமையங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் அறிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம், மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுடையோர் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

April 24, 2010

அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம்

வாழ்க்கை முழுவதும் போராடிய குனங்குடி ஹனிபா அவர்களுக்காக அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம் தலைநகர் சென்னையிலே..!


April 06, 2010

பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தனது இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிட்டுள்ளது. இதில், கல்லூரியில் பெயர், முதல்வர் பெயர், விலாசம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கல்லூரி எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெயர், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் இணையதள வசதி உள்ளதா, நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன, விடுதி வசதி உள்ளதா, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை நிறுவனங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு வளாக நேர்காணலுக்கு வந்துள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அக்கல்லூரியில் பாடப் பிரிவு வாரியாக தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம்: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரமும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிடப் பட்டுள்ளன. இதில், எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அக்கல்லூரியில் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2007, 08, 09ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில், ஒவ் வொரு கல்லூரியிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும், 2009 - 10ம் கல்வியாண்டில், 2, 4, 6, 8வது செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

March 25, 2010

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்


காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம். காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” (நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும் இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது. பெற்றோரும் சேர்ந்துகொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

March 23, 2010