இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label குவைத் மாவீரன் பகத்சிங் நூற்றாண்டு விழா தமுமுக. Show all posts
Showing posts with label குவைத் மாவீரன் பகத்சிங் நூற்றாண்டு விழா தமுமுக. Show all posts

March 23, 2010

January 29, 2008

குவைத்தில் மாவீரன் பகத்சிங் நூற்றாண்டு விழா

மதிப்பிற்குரியவர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்..,

குவைத்தில் கடந்த 25-01-2008 அன்று இரவு 08-30 மணிக்கு மிர்காப் பகுதியிலுள்ள தஞ்சை உணவகத்தில் மாவீரன் பகத்சிங் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. தோழர். அமானுல்லாஹ்-திருச்சி அவர்கள் வரவேற்புரையாற்றி விழாவை தொகுத்து வழங்கினார். அவ்விழா தோழர். ஃபிரான்சிஸ் அவர்களின் புரட்சிப்பாடலோடு துவங்கியது. குள்ளாஞ்சாவடி புதுயுகம் வீதி நாடகக்குழு அமைப்பாளர் தோழர். ஆர். கே. சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் தலைவர் தோழர். கா. ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்புச்சேர்க்க தோழர். சுப்ரமணி மற்றும் தோழர். செந்தில் குமார் இருவரும் புரட்சி மற்றும் சிந்தனையைத்தூண்டும் பாடல்களை பாடினர். சிறப்புரையாக தோழர்.மதியழகன்-பாலைக்குயில் கவிஞர்கள் சங்கம், தோழர். கவிஞர் ஸாதிக்-தலைவர், தமிழோசை கவிஞர் மன்றம், தோழர். பட்டு்க்கோட்டை சத்யா, தோழர். சம்சுத்தீன் மற்றும் கவிநடையில் உரையாற்றிய எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி இருதியாக புரட்சிக் கவிதை வாசித்த தோழர். அமானுல்லாஹ்-தலைவர், தமுமுக-குவைத் மண்டலம் இவர்கள் அனைவரும் இக்காலத்திலுள்ள அரசியல் சூழ்நிலையையும், மாவீரன் பகத்சிங்கின் வீரவரலாற்றையும் மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க எடுத்து வைத்தனர். இரவு மணி பதினொன்றை தாண்டியும் மக்கள் கூட்டம் கட்டுக்களையாமல் அமர்ந்திருந்தது மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பது தெள்ளத்தெளிவாக விளங்கியது. குவைத்திலுள்ள தமிழ், இஸ்லாமிய, கிருஸ்த்தவ சங்கத்தை சேர்ந்தவர்களும், பகத்சிங்கை பற்றி அறிந்திருந்த இலங்கைத்தமிழர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தோழர். பரங்கிப்பேட்டை அ.ப. கலீல்அஹமது பாகவீ-செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்க தேனீர் விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.