
சுதந்திர தினத்தை கருப்பு தினமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பொந்தம்புளி கிராமம். நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை. ரோடு வசதி இல்லாததால் மழை காலங்களில் வெளியூர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப முடியாமல் நாள்முழுக்க காத்திருக்கும் அவலநிலை உள்ளது.அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சரின் தனிபிரிவுக்கு இவர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய பின்பும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆக.15 ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்க கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவதோடு ரேஷன் கார்டுகளை முதுகுளத்தூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்போவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கிராம துணை தலைவர் தங்கமுத்து கூறுகையில்,
"அதிகாரிகளின் கவனத்தை கவரவேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment