ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்த கார் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில், டான்செம் நிறுவன அதிகாரி, அவரது மனைவி, கார் டிரைவர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலுள்ள தமிழ்நாடு அரசு சிமென்ட் நிறுவனத்தில்(டான்செம்) துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன்(57). பி.இ., பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாக அரசு சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ரம்யா என்ற மகளும், ராஜேஷ், தினேஷ் பிரவீன் என்ற மகன்களும் உள்ளனர். ரம்யாவுக்கு திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ராஜேஷ் பி.இ., எம்.பி.ஏ., முடித்து விட்டு துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகன் தினேஷ் பிரவீன் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
துபாயில் பணியாற்றும் ராஜேஷுக்கு, மதுரையில் "அம்மா மெஸ்' என்ற ஓட்டலை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த ரதி என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. செப்., 3ம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். முதல் திருமண பத்திரிகையை சந்திரசேகரன், திருச்சி ரெட்டமலையிலுள்ள குலதெய்வமான கருப்பசாமி கோவிலில் வைத்து, சாமி கும்பிட நேற்று அதிகாலை ஆலங்குளத்திலிருந்து தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு வந்தார்.
டான்செம் நிறுவனத்துக்கு சொந்தமான டி.என்., 05-7070 என்ற எண்ணுள்ள அந்த அரசு காரை, சிவகாசியைச் சேர்ந்த டிரைவர் வேலுச்சாமி ஓட்டினார். மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வந்து பத்திரிகை வைத்து சாமி கும்பிட்டு விட்டு, அங்கேயே மதிய உணவையும் முடித்துக் கொண்டு 2.15 மணிக்கு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். ரெட்டமலை கருப்பசாமி கோவில் அருகே ரயில்வே பாதையை கடந்து தான் மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.
காரில் சந்திரசேகரன் தனது மனைவியுடன் புறப்பட்ட நேரம், திருச்சி ஜங்ஷனில் இருந்து மாயவரத்துக்கு நெல்லை பாசஞ்சர் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெட்டமலை அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை ரயில் நெருங்கிக் கொண்டிருந்த போது, சந்திரசேகரனும், அவரது மனைவியும் வந்த காரை ஓட்டிவந்த டிரைவர் வேலுச்சாமி, "ரயில் வரும் முன் கடந்து விடலாம்' என்ற நினைப்பில் காரை வேகமாக செலுத்தினார். ஆனால், ரயிலும் வேகமாக வந்ததால், ஆளில்லா ரயில்வே பாதையை கடக்க முயன்ற கார் மீது ரயில் இன்ஜினின் முன்பக்கம் பயங்கரமாக மோதியது. ரயில் இன்ஜினால் கார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
காரில் இருந்த சந்திரசேகரனின் மனைவி ராணி மற்றும் டிரைவர் வேலுச்சாமி ஆகியோர், ரயில் தாண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்தனர். காரிலேயே மாட்டிக் கொண்ட சந்திரசேகரனும் உடல் நசுங்கி இறந்தார். சம்பவத்தை கண்டதும் ரயிலை நிறுத்திய டிரைவர், விபத்து குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். ரயில்வே பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஒரு மணிநேரம் போராடி காரை ரயில் இன்ஜினில் இருந்து பிரித்து எடுத்தனர். இறந்து போன டான்செம் டி.ஜி.எம்., சந்திரசேகரன், அவரது மனைவி ராணி, டிரைவர் வேலுச்சாமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
2 comments:
poda naaye....
அஸ்ஸலாமு அலைக்கும் அனானிமஸ் அவர்களுக்கு,
முடி முளைக்க வேண்டிய இடத்தில் புல் முளைத்திருப்பதால் போடா நாயி என்று திட்டுவதற்குள் உங்கள் காலிடுக்கு ஈரமாகிப்போனது தெரிகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே வஸ்ஸலாம்.
Post a Comment