இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 04, 2008

பணியிலிருப்பவருக்கான ராணுவ வாய்ப்பு

டெரிடோரியல் ஆர்மி எனப்படும் துணை ராணுவப் பிரிவு பற்றி பலருக்குத் தெரிவதில்லை. சாதாரண குடிமகனாகவும் ராணுவ வீரராகவும் பணியாற்றும் வாய்ப்பை இது தருவதால் சமீப காலமாக இந்த வாய்ப்புக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டும் இந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் இதோ...
தகுதிகள்:
பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2008 அன்று 18 முதல் 42 வயதுக்குள் இருக்கவேண்டும். தற்போது முறையான வேலை ஒன்றில் இருப்பதும் முக்கியம்.
முக்கியக் குறிப்புகள்:
விண்ணப்பிப்பவர்கள் முதனிலை நேர்முகத் தேர்வு போர்ட் ஒன்றினால் சுருக்கப்பட்டு அடுத்தடுத்த கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். இது சர்வீசஸ் செலக்ஷன் போர்ட் மற்றும் மெடிக்கல் போர்ட் ஆகியவற்றால் நடத்தப்படும். இதன் பின் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவருக்கு ஒரு மாத துவக்க பயிற்சி தரப்படும். இதன் பின் ஆண்டுக்கு 2 மாத பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். முதல் 4 ஆண்டுகளுக்குள் கமிஷனுக்குப் பிந்தைய பயிற்சியானது இந்தியன் மிலிடரி அகாடமி, டெகராடூனில் தரப்படும். தொடக்கத்திலேயே லெப்டினன்டாக பணி வாய்ப்பு தரப்படும். லெப்டினன்ட் கர்னல் பணி வரை பதவி உயர்வு பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ரூ.12 அஞ்சல் தலை ஒட்டிய 28க்கு 12 செ.மீ. அளவுள்ள சுய முகவரியிட்ட அஞ்சலுறையையும் ரூ.10க்கான போஸ்டல் ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதோடு முழுத் தகவல்கள் அடங்கிய பயோ டேட்டாவையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் பெறும் முகவரி:
Commander, TA Group Headquarters, Southern Command, Pune 1.
விண்ணப்பத்தை
www.mod.nic.in தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் இது பற்றிய விபரங்களை www.joinindianarmy.nic.in, www.indarmy.nic.in தளங்களிலிருந்தும் அறியலாம்.

No comments: