இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 13, 2008

தமுமுகவின் ஆம்புலன்ஸ் தேவைக்கு..!

சமுதாயம் காத்த தமுமுக..!
சமயத்தில் உங்கள் உயிரையும் காக்கும்..!!
இன்ஷா அல்லாஹ்..!!!

August 11, 2008

அரசின் அலட்சியமும் - மக்களின் அவசரமும்

ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்த கார் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில், டான்செம் நிறுவன அதிகாரி, அவரது மனைவி, கார் டிரைவர் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலுள்ள தமிழ்நாடு அரசு சிமென்ட் நிறுவனத்தில்(டான்செம்) துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன்(57). பி.இ., பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாக அரசு சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ரம்யா என்ற மகளும், ராஜேஷ், தினேஷ் பிரவீன் என்ற மகன்களும் உள்ளனர். ரம்யாவுக்கு திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ராஜேஷ் பி.இ., எம்.பி.ஏ., முடித்து விட்டு துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகன் தினேஷ் பிரவீன் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
துபாயில் பணியாற்றும் ராஜேஷுக்கு, மதுரையில் "அம்மா மெஸ்' என்ற ஓட்டலை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த ரதி என்ற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. செப்., 3ம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். முதல் திருமண பத்திரிகையை சந்திரசேகரன், திருச்சி ரெட்டமலையிலுள்ள குலதெய்வமான கருப்பசாமி கோவிலில் வைத்து, சாமி கும்பிட நேற்று அதிகாலை ஆலங்குளத்திலிருந்து தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு வந்தார்.
டான்செம் நிறுவனத்துக்கு சொந்தமான டி.என்., 05-7070 என்ற எண்ணுள்ள அந்த அரசு காரை, சிவகாசியைச் சேர்ந்த டிரைவர் வேலுச்சாமி ஓட்டினார். மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வந்து பத்திரிகை வைத்து சாமி கும்பிட்டு விட்டு, அங்கேயே மதிய உணவையும் முடித்துக் கொண்டு 2.15 மணிக்கு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். ரெட்டமலை கருப்பசாமி கோவில் அருகே ரயில்வே பாதையை கடந்து தான் மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.
காரில் சந்திரசேகரன் தனது மனைவியுடன் புறப்பட்ட நேரம், திருச்சி ஜங்ஷனில் இருந்து மாயவரத்துக்கு நெல்லை பாசஞ்சர் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெட்டமலை அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை ரயில் நெருங்கிக் கொண்டிருந்த போது, சந்திரசேகரனும், அவரது மனைவியும் வந்த காரை ஓட்டிவந்த டிரைவர் வேலுச்சாமி, "ரயில் வரும் முன் கடந்து விடலாம்' என்ற நினைப்பில் காரை வேகமாக செலுத்தினார். ஆனால், ரயிலும் வேகமாக வந்ததால், ஆளில்லா ரயில்வே பாதையை கடக்க முயன்ற கார் மீது ரயில் இன்ஜினின் முன்பக்கம் பயங்கரமாக மோதியது. ரயில் இன்ஜினால் கார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
காரில் இருந்த சந்திரசேகரனின் மனைவி ராணி மற்றும் டிரைவர் வேலுச்சாமி ஆகியோர், ரயில் தாண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்தனர். காரிலேயே மாட்டிக் கொண்ட சந்திரசேகரனும் உடல் நசுங்கி இறந்தார். சம்பவத்தை கண்டதும் ரயிலை நிறுத்திய டிரைவர், விபத்து குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். ரயில்வே பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஒரு மணிநேரம் போராடி காரை ரயில் இன்ஜினில் இருந்து பிரித்து எடுத்தனர். இறந்து போன டான்செம் டி.ஜி.எம்., சந்திரசேகரன், அவரது மனைவி ராணி, டிரைவர் வேலுச்சாமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

விமானப்படை பணி - சில தகவல்கள்

விமானப்படையில் ஏர்மென் பணி என்பது இன்று பல இளைஞர்களின் கனவாக இருப்பதை அறிவோம். இதற்காக பல தேர்வு முறைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் இவை நடத்தப்படுகின்றன. ஏர்மென் பணிவாய்ப்பு பற்றிய தகவல்கள் நாளிதழ்களிலும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வார இதழிலும் வெளியிடப்படுகின்றன.
விளம்பரங்களில் குறிப்பிடப்படும் நாளில் தவறாது நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும். இப்படிச் செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்களை தவறாது எடுத்துச் செல்ல வேண்டும். இவை பரிசீலிக்கப்படுகின்றன. அடுத்ததாக எழுத்துத் தேர்வு இடம் பெறுகிறது. குரூப் எக்ஸ் எனப்படும் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவு களிலிருந்து கேள்விகள் இடம் பெறுகின்றன.
குரூப் ஒய் பிரிவு ஏர்மென் பணிப் பிரிவுக்கு பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் ரீசனிங் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. குரூப் ஒய் மெடிக்கல் அசிஸ்டண்ட் பிரிவு ஏர்மென் பணிக்கு ஆங்கிலம், வேதியியல், உயிரியல் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை அப்ஜக்டிவ் கேள்விகளே. கல்வி பயிற்சியாளர் மற்றும் இசைப் பிரிவு ஏர்மென் பணிகளுக்கு அவர்களின் குறிப்பிட்ட பிரிவுத் திறனறியும் கேள்விகள் இடம் பெறுகின்றன.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு பிசிகல் பிட்னஸ் டெஸ்ட் எனப்படும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 6 முதல் 8 நிமிடங்களுக்குள் ஓடும் 1.6 கி.மீ. ஓட்டம் இதில் இடம் பெறுகிறது.
எழுத்துத் தேர்விலும் உடற்தகுதித் தேர்விலும் வெற்றி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் இறுதியில் பரிந்துரைக்கப்படுபவர்கள் மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். குரூப் எக்ஸ் பிரிவில் டெக்னிகல் ஏர்மென் பணிக்கு பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருப்பதுடன் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ருமெண்டேசன் டெக்னாலஜி/ ஐ.டி. போன்றவற்றில் ஒன்றில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். 17 முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதன் எஜூகேஷனல் பிரிவுக்கு பி.ஏ./பி.காம்/பி.எஸ்சி. இவற்றில் ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.எட். தகுதியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம்/இயற்பியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ. இவற்றில் ஒரு தகுதியுடன் பி.எட். தகுதி மற்றும் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் முதல் பிரிவுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அடுத்த பிரிவுக்கு 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குரூப் ஒய் மற்றும் குரூப் இசட் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒய் பிரிவுக்கு 17 முதல் 22 வயதுக்குள்ளும் இசட் பிரிவுக்கு 17 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பொதுவாக இந்தப் பணிகளுக்கு 152.5 செமீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையைப் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்தது 5 செ.மீ. விரிவடைவதாக இருக்க வேண்டும். சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
உங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யவும் முழு விபரங்களறியவும் பார்வையிட வேண்டிய இணைய முகவரி: http://indianairforce.nic.in

August 10, 2008

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக..!

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பொந்தம்புளி கிராமம். நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை. ரோடு வசதி இல்லாததால் மழை காலங்களில் வெளியூர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப முடியாமல் நாள்முழுக்க காத்திருக்கும் அவலநிலை உள்ளது.அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சரின் தனிபிரிவுக்கு இவர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய பின்பும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆக.15 ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்க கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவதோடு ரேஷன் கார்டுகளை முதுகுளத்தூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்போவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கிராம துணை தலைவர் தங்கமுத்து கூறுகையில், "அதிகாரிகளின் கவனத்தை கவரவேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.

கம்பெனி செகரட்டரி ஆக விருப்பமா?

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு இந்தியாவில் தற்போது பெரும்பாலானோரால் விரும்பி தேர்வு செய்யப்படும்படிப்பாக மாறி வருகிறது. கம்பெனி சட்ட விதிமுறைகளின்படி, ரூ.2 கோடி முதலீடு செய்து துவக்கப்பட்ட கம்பெனிகள் அனைத்தும் கம்பெனி செகரட்டரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. நல்ல சம்பளத்துடன் கவுரவமான முறையில் நியமிக்கப்படும் இந்த பணியில் சேர இளைஞர்களிடையே இன்று நல்ல வரவேற்பு உள்ளது. பார்லிமென்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், சென்னை, கோல்கட்டா மற்றும் மும்பையில் 45 அலுவலகங்களையும் 24 துணை மையங்கள் மற்றும் 66 தேர்வு மையங்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் நடத்தும் தேர்வுகள் வழியாக மட்டுமே கம்பெனி செகரட்டரியாக முடியும். நிர்வாகத்தின் முக்கிய நிலைகளில் பணியாற்றும் பொறுப்பு உள்ளதால் இந்த பதவியில் திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளங்களை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இந்த நிறுவனம் மூன்று நிலைகளில் தேர்வுகளையும் இரு நிலைகளில் உறுப்பினர் அந்தஸ்தையும் வழங்குகிறது. பவுணடேஷன் தேர்வில் 4 பாடங்கள், எக்சிகியூடிவ் தேர்வில் 6 பாடங்கள், புரபஷனல் தேர்வில் 8 பாடங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் தேர்வான பின்னரே இன்னொரு நிலைக்கு உரிய தேர்வை எழுத முடியும்.

பிரீ மெம்பர்ஷிப்/மேனேஜ்மென்ட் டிரெய்னிங் 16 மாதங்களும் பயில வேண்டும். பவுண்டேஷன் தேர்வுக்கு - பிளஸ் 2 தேறியவர்கள் ரூ.3,600 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30க்குள் பதிவு செய்தால் அடுத்த ஆண்டு ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம்.
எக்சிகியூடிவ் தேர்வுக்கு - கம்பெனி செகரட்டரி பவுண்டேஷன் தேறியவர்கள் அல்லது நுண்கலை தவிர்த்த இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.சி.டபிள்யூ.ஏ., அல்லது சி.ஏ., இறுதி தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.6,500 முதல் ரூ.7,750 வரை ஒவ்வொருவரின் தகுதியைப் பொறுத்து பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். இருபிரிவுகளாக தேர்வு நடக்கிறது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், மே 31க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் டிசம்பரில் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், நவம்பர் 30க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம்.
புரபஷனல் தேர்வு - எக்சிகியூடிவ் தேர்வு முடித்தவர்கள் மட்டுமே இத்தேர்வு எழுத முடியும். பதிவுக்கட்டணம் ரூ.7,500. ஜூன் மற்றும் டிசம்பரில் நான்கு பிரிவுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டடு தேர்வு நடைபெறும். பிரீமெம்பர்ஷிப் பயிற்சியை எக்சிகியூட்டிவ் தேர்வு எழுதியபின்னர் எழுத தொடங்கலாம். இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:
The Institute of Company of Secretaries of India,
C37, Sector 62,
NOIDA 201 309 (U.P)
Ph.: 0120 423 999398
Email : dss@icsi.edu/ ss_fond@icsi.edu.
HEADQUARTERS ICSI House,
22, Institutional Area,
Lodi Road,
New Delhi 110 003
இந்த எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - 01141504444, 2461732124 Fax :24626727
Email : info@icsi.edu
Website : www.icsi.edu
SOUTHERN INDIA REGIONAL COUNCIL, CHAPTERS AND SATELITE CHAPTERS, ICSISIRC House,
No.9 Wheat Crofts Road,
Nungambakkam,
Chennai 600 034.
Phones: 28279898, 28222212,
Fax : 28268685
EMail : siro@icsi.edu;icsisirc@md3.vsnl.net.in.
MADURAI CHAPTER OF ICSI,
C3, Third Floor, AR Plaza, 16/17,
North Veli Street,
Madurai 625 001.
Ph:0452 2340797, Mobile :98431 55753
Chapters:
Bangalore:22286574, 22287158, Coimbatore : 2452006, 4385766, Hyderabad : 23399541, 23396494, Kochi:2392950, Mangalore :2216482, Mysore:2516065, Puducherry:2205017, Thiruvananthapuram: 2451915, Tiruchirapalli:2416337, Visakhapatnam:2533516,
Satellite Chapters :
Calicut:2762239, 2762338, Palakkad:2524548, Salem:2442072, Thrissur:2383960.

August 06, 2008

மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறு வனங்கள் முஸ்லிம் அமைப்புகளையும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்கு வதையும், கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக்கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும், ஒளிபரப்புவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்லவியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொண்டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த மீடியாக்கள் மறுபுறம் கேட்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் என்ன கூறப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும், மதத்தையும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆனால் எழுதுவதற்கு முன்னால் தங்கள் மூளையிலும், பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்களையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.
தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ் நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியை கொண்டு தமிழகத்தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊடகத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

நன்றி: தமுமுக இணையதளம்

August 04, 2008

பணியிலிருப்பவருக்கான ராணுவ வாய்ப்பு

டெரிடோரியல் ஆர்மி எனப்படும் துணை ராணுவப் பிரிவு பற்றி பலருக்குத் தெரிவதில்லை. சாதாரண குடிமகனாகவும் ராணுவ வீரராகவும் பணியாற்றும் வாய்ப்பை இது தருவதால் சமீப காலமாக இந்த வாய்ப்புக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டும் இந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் இதோ...
தகுதிகள்:
பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2008 அன்று 18 முதல் 42 வயதுக்குள் இருக்கவேண்டும். தற்போது முறையான வேலை ஒன்றில் இருப்பதும் முக்கியம்.
முக்கியக் குறிப்புகள்:
விண்ணப்பிப்பவர்கள் முதனிலை நேர்முகத் தேர்வு போர்ட் ஒன்றினால் சுருக்கப்பட்டு அடுத்தடுத்த கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். இது சர்வீசஸ் செலக்ஷன் போர்ட் மற்றும் மெடிக்கல் போர்ட் ஆகியவற்றால் நடத்தப்படும். இதன் பின் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவருக்கு ஒரு மாத துவக்க பயிற்சி தரப்படும். இதன் பின் ஆண்டுக்கு 2 மாத பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். முதல் 4 ஆண்டுகளுக்குள் கமிஷனுக்குப் பிந்தைய பயிற்சியானது இந்தியன் மிலிடரி அகாடமி, டெகராடூனில் தரப்படும். தொடக்கத்திலேயே லெப்டினன்டாக பணி வாய்ப்பு தரப்படும். லெப்டினன்ட் கர்னல் பணி வரை பதவி உயர்வு பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ரூ.12 அஞ்சல் தலை ஒட்டிய 28க்கு 12 செ.மீ. அளவுள்ள சுய முகவரியிட்ட அஞ்சலுறையையும் ரூ.10க்கான போஸ்டல் ஆர்டரையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதோடு முழுத் தகவல்கள் அடங்கிய பயோ டேட்டாவையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் பெறும் முகவரி:
Commander, TA Group Headquarters, Southern Command, Pune 1.
விண்ணப்பத்தை
www.mod.nic.in தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் இது பற்றிய விபரங்களை www.joinindianarmy.nic.in, www.indarmy.nic.in தளங்களிலிருந்தும் அறியலாம்.