ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல் படும் இந்நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும் 220 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "குவெஸ்ட் நெட்'டிற்கு ஈரோடு, சேலம், மதுரையில் கிளை அலுவலகம் உள்ளது. வரும் 22ம் தேதி 10வது ஆண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கட்டும் பணத்திற்கு தங்க காசு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா, உடற்பயிற்சி சாதனங்கள் என ஐம்பது விதமான பொருட்கள் தரப்படுகின்றன. உதாரணமாக, தங்க காசு திட்டத்தில் சேருபவர்கள் முதலில் ரூ.31 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். அவருக்கு "தலைவர்களின் உருவம்' பதித்த ஆறு கிராம் தங்க நாணயம் கொடுக்கப்படும். அவர் இரண்டு பேரை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அந்த இரண்டு பேரும், ஆளுக்கு இரண்டு பேரை சேர்க்க வேண்டும். இப்படி சங்கிலித் தொடராக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
அந்நிறுவனம் நடத்திய வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்து சென்று மூளை சலவை செய்ததில் மயங்கிய தினேஷ்குமார் 2006ம் ஆண்டு ரூ.62ஆயிரம் கட்டினார். அப்பணத்திற்கு, ஆறு கிராம் தங்க நாணயம் இரண்டு தந்தனர். தான் கட்டிய பணத்திற்கு வெறும் ஆறு கிராம் தங்கமா என அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், பணத்தை திரும்ப கேட்டு மேற்படி நிறுவனத்திற்கு நடையாய் நடந்தார்.
"உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள், இருதினங்களுக்குள் பணம் வீடு தேடி வரும்' என குவெஸ்ட் நெட் நிர்வாக இயக்குனர் புஷ்பம் கூறினார். அன்று மாலை தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த இருவர், "பணத்தை கேட்டு எங்கள் நிறுவனத்திற்கு வந்தால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டிவிட்டு சென்றனர். இதில், மிரண்ட தினேஷ்குமார் நேற்று முன்தினம் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். - இது சமீபத்திய பரபரப்பான செய்தி
இதுபோல் இன்னும் எத்தனை பேர் புகார் கொடுக்க அலைய போகிறார்களோ..? குவைத்தில் கூட நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை மையமாக வைத்து பல மாதங்களாக ஆள் பிடி வேலைகள் நடந்து. இதற்கு ததஜ சகோதரர்களும் பலிகடா ஆனார்கள். ஆனால், தக்க சமயத்தில் சமுதாயத்தை காக்கும் தமுமுக அந்நேரத்தில் துண்டு பிரசுரம் வெளியிட்டு மக்களை இறைவனின் திருவசனத்தை கொண்டு அச்சமூட்டி எச்சரித்தது. குருக்க வழியில் பொருளீட்டி பணக்காரர்களாக எண்ணியவர்களோ வயிற்றெரிச்சலில் ஆதாரம் கேட்டு அலைந்தார்கள். திருகுர்ஆனைவிட இவர்களுக்கு வேறென்ன வேண்டும்.
''நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது உங்கள் உழைப்பின் மூலம் உண்பதாகும்''
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்: திர்மிதி, நஸயீ, அபூதாவூத்)
''அன்றியும் உங்களில் ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.'' (2:188)
குறிப்பு: தமுமுக-குவைத் மண்டலம் வெளியிட்ட நோட்டிஸ் தேவைப்படுவோர் tmmkkwt@gmail.com க்கு மின்னஞ்சல் செய்தால் JPEG பைலாக அனுப்பிவைக்கப்படும்.
No comments:
Post a Comment