இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 15, 2008

கைதிக்கு அனுமதி :-

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட கோவை குண்டுவெடிப்பு கைதி, வீட்டில் தங்கி சிகிச்சை பெற 90 நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் அபுதாகிர். கோவை, தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவர், ஏற்கனவே மதுரை ஜெயில் வார்டன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி கடந்த மார்ச் 8ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும், அடிக்கடி வயிறு வீக்கம் ஏற்படுவதால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, அனுமதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு விசாரிக்கப்பட்டு, அபுதாகிருக்கு 90 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், இவருக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பும் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இவர், ஒரு சில நாட்களில் தனியார் மருத்துவமனையில் இருந்து தெற்கு உக்கடத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சிகிச்சைக்கு பின், விடுமுறையை முடித்துக் கொண்டு ஆக., 13ம் தேதி மீண்டும் சிறையில் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதுபோல் நல்லவர்களின் துஆ என்றும் கைவிடப்படமாட்டாது.

" (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்-07:55 )

No comments: