இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 31, 2008

குறைகள் நிவர்த்தி: தமுமுக நன்றி

தமிழ்நாடு முஸலி்ம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள், மாநாடுகள் மூலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரி வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு தமிழக அரசு 15.9.2007 அன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக 3.5 சதவீத ஒதுக்கீடு முழுமையாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்காத நிலையை அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்பாக தமிழக முதல்வரை நேரிலும் சந்தித்து எடுத்துரைத்ததைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் களையப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இன்று அதற்கான அரசாணை வெளியிட்டமைக்கு தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(செ. ஹைதர் அலி)
பொதுச்செயலாளர்
தமுமுக

ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்துங்கள்..!

ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும்வகையில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒரு மைல் தூரத்தை "ஆறு நிமிடம் ஓடுதல்' ஓட்டப்போட்டி திருச்சியில் நடத்தப்படுகிறது. "ஒரு மைல் தூரத்தை சராசரி ஆறு நிமிடத்தில் கடக்க வேண்டும்' என்பது ராணுவத்தில் தேர்வு செய்யும் விதிமுறையாகும். ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, "ஆறு நிமிடம் ஓடுதல்' என்ற பெயரில் ஒரு மைல் தூரத்துக்கான ஓட்டப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சியில் நடத்துகிறது.

ஒரு மைல் தூரத்தை ஆறு நிமிடத்தில் கடக்கும் நபர்களை ஊக்கப்படுத்தி ராணுவத்தில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்கள் தினமும் முறையான பயிற்சி செய்தால், ஒரு மைல் தூரத்தை ஆறு நிமிடத்தில் முடித்தால் ராணுவத்தில் சேரலாம் என்பது இப்போட்டின் நோக்கமாகும். ஒரு மைல் தூர ஓட்டப்போட்டி ஜூன் மூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த ஆண்கள் போட்டியில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், அண்ணாவிளையாட்டு அரங்கம் திருச்சி, தொலைபேசி எண் 2420685 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வுகள் ஞாபகம் இருக்கிறதா...?

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் பி.ஓ. தேர்வு - ஜூன் 1
யு.பி.எஸ்.சி. இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு - ஜூன் 7
எஸ்.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் கம்பைலர் பணித்தேர்வு - ஜூன் 15
யு.பி.எஸ்.சி. வனச் சேவைத் தேர்வு - ஜூலை 12
எஸ்.எஸ்.சி. கம்பைண்ட் கிராஜூவேட் லெவல் தேர்வு - ஜூலை 27
யு.பி.எஸ்.சி. என்.டி.எ. மற்றும் நேவல் அகாடமி தேர்வு(2) -ஆகஸ்ட் 17

May 29, 2008

மானங்கெட்ட மாப்பிள்ளைகளே..!

""திருச்சி கோட்டை கடைவீதியில் அனைத்து பொருட்களும் விற்கப்படும் பிரபல கடையில் நேற்று ஒரு இளம்பெண் ஒரு கிரெடிட் கார்டை கொடுத்து நகை வாங்கினார். கிரெடிட் கார்டை வாங்கி பரிசோதித்த கடை ஊழியர்கள் அதில் பணம் இல்லாததை கண்டுப்பிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அது திருட்டு கிரெடிட் கார்டு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண் கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அந்த பெண் பெயர் காயத்ரி ரம்யா (வயது 19). புள்ளம்பாடியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் என்று தெரிய வந்தது. குடும்பம் வறுமையில் வாடியதால் சிறுவயதிலேயே காயத்ரி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். சென்னையில் வேலைபார்த்து உள்ளார்.

இந்த நிலையில் 19 வயதான காயத்ரி தனது திருமணத்திற்கு மாப்பிள்ளைக்கு சீர்வரிசை கொடுக்க வேண்டியது இருக்குமே என்று யோசித்தார். இதனால் கிரெடிட் கார்டை திருடி கோட்டை கடைவீதியில் உள்ள பிரபல கடையில் கட்டில், டி.வி, பீரோ, பிரிட்ஜ் ஆகியவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளார்.

இதற்கிடையில் கிரெடிட் கார்டு காணாமல் போனதும் அதன் உரிமையாளர் வங்கியில் கூறி அந்த கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கி வைத்துள்ளார். இதை அறியாத காயத்ரி நேற்று மீண்டும் அதே கடைக்கு நகை வாங்குவதற்கு வந்தார். அப்போது தான் போலீசில் பிடிபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து டி.வி உள்பட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மகளின் நிலையை பார்த்து அவரது பெற்றோர் கண் கலங்கியது பார்ப்போரை நெகிழவைத்தது.""இது செய்தி. வர்ணபேதங்களை வகுத்தவர்கள். ராமர்பாலத்தை தேசிய சின்னமாக ஆக்கவேண்டும் என்றவர்கள் இந்தக் கொடுமைக்கெல்லாம் வாயை பொத்தி்க்கொள்வார்களே..!

அல்லாஹ்வோ தனது அருள்மறையில்:
"...பெண்களை தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல் அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்." (அல்குர்ஆன் - 4:24)

பத்தாம் வகுப்பு ரிசல்ட் - முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
இந்தச்செய்தி குவைத்திலிருப்பவர்களுக்கு மட்டும்:
தாயகத்தி்ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாவதை முன்னிட்டு குவைத்தில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தில் தேர்வு எழுதியுள்ளவர்களின் மதிப்பெண் விவரங்களை அறிய 7493869 என்ற மொபைல் எண்ணிற்கு தேர்வு எண்ணை மட்டும் மெஸேஜ் செய்தால் உடனடியாக மதிப்பெண் பட்டியல் உங்கள் மொபைலுக்கு மெஸேஜ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமுமக - குவைத்

குவைத் தமுமுக வீடியோக்கள்

தமுமுக குவைத் மண்டலம் நடத்தும் நிகழ்ச்சிகளின் விழி(வீடியோ)ப் பதிவுகளை கீழ்கண்ட தொடுப்பில் காணலாம்


விமர்சனங்களையும் பதியலாம்..!

May 27, 2008

ரேண்டம் நம்பர் என்றால் என்ன?

என்ஜினியரிங், மருத்துவம் விண்ணப்பித்தவருக்கு, 'ரேண்டம் நம்பர்' என்று ஒரு எண் ஒதுக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் மூலம் உத்தேசமாக ஒதுக்கப்படும் அந்த எண், 6 அல்லது 7 இலக்கம் கொண்டவையாகும். ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கட்-ஆப் மார்க் சமமாக வரும் பட்சத்தில் முதலில், மாணவர்களின் கணித மதிப்பெண்களின் கணித மதிப்பெண் (மருத்துவ படிப்பாக இருந்தால் உயிரியல்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும், ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலும் இந்த நிலையிலேயே முடிவு தெரிந்துவிடும்.
ஒருவேளை, வேதியியல் மதிப்பெண்ணும் சமமாக இருந்துவிட்டால், மாணவர்களின் பிறந்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வயதில் மூத்தவருக்கு அதுவும், சமமாக இருந்து விட்டால் கடைசியாக முன்பு ஒதுக்கபட்ட ரேண்டம் நம்பரை பார்ப்பார்கள். யாருடைய நம்பர் குறைந்த மதிப்பில் உள்ளதோ (உதாரணத்துக்கு 1,00000, 2,00000 என்று இருந்தால் அதில் 1,000000 எண் உள்ள மாணவருக்கு சீட் அளிக்கப்படும்) இதுவே ரேண்டம் எண் எனப்படுகிறது.
நன்றி: தமுமுக இணையதளம்

May 26, 2008

தினகரனின் செய்தி

சத்திரமனை சம்பவம் தொடர்பாக தினகரனில் வந்துள்ள செய்தி:
மத்திய மந்திரி ராஜாவைப்பற்றியோ அவரது அண்ணனை பற்றியோ குறிப்பிடவில்லை

May 25, 2008

சங்பரிவார சதியில் சத்திரமனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாநில செயலாளர் சகோ.ஹைதர்அலி அவர்களுக்கு தமுமுக - குவைத் மண்டலத்திலிருந்து எழுதுவது பெரம்பலூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ளது சத்திரமனை என்ற சிற்றூர். மக்கள்தொகையில் பகுதிக்கு மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரே ஒரு பள்ளிவாயில் உள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒரு சுப்ஹ் நேர தொழுகை முடிந்து மக்கள் வெளிவ ரும் போது இந்துக்கள் அனைவரும் பள்ளிவாயிலை சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். என்னஏதென்று ஜமாஅத்தார்கள் விசாரிக்கும் போது (இது கொசுறுச்செய்தி:பள்ளியின் பின்புறத்தில் இடப்பக்கமாக இந்துக்கள் வழிபட கோவில் ஒன்று இருக்கின்றார்கள். அக்கோயிலுக்கு செல்லும் வழியாக பள்ளிவாயிலின் இடப்பக்கசுற்றுச்சுவருக்கும் அருகிலுள்ள விவசாய நிலத்திற்கும் இடையிலுள்ள 25அடி பாதையை தான் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். எந்தப்பிரச்சனையும் இல்லை.) ஆனால், தற்போது அந்தப்பாதை போதவில்லை அதனால் பள்ளிவாயிலின் சுற்றுச்சுவரை ஒரு 10அடி உள்பக்கம் தள்ளிவைத்து கொண்டால் வசதியாக இருக்கும் என முற்றுகையிட்ட இந்துக்கள் கூறியுள்ளார்கள். அதற்கு ஜமாஅத்தார்கள் மறுக்கவே சுற்றுச்சுவரை இடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு ஆர்.டி.ஓ. மற்றும் ஆர்.ஐ க்கு கம்ப்ளைண்ட் கொடுத்து அவர்கள் வந்து அளந்து பார்க்கையில் பொதுப்பாதையாக இன்றுவரை பயன்படுத்தி வந்த அந்த இடமும் பள்ளிக்குத்தான் சொந்தம். ஆதாரப்படி கோவிலுக்கென்று ஆரம்பகாலத்திலிருந்தே தனியாக ஒரு பாதையே இருக்கின்றது. வீண்வம்பு செய்யாதீர்கள் என சமரசம் செய்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டார்கள். இந்த பிரச்சனைக்கு பின்னால் மத்திய மந்திரி அ. ராசாவும் அவரது அண்ணனும் இந்துக்களை துண்டிவிட்டு கொண்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க 23-5-2008 அன்றிலிருந்து திருவிழா செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்த விடுமுறையில் சென்றிருந்த தமுமுக சகோதரர்கள் மறுநாள் சனிக்கிழமை சாமி ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வைக்க வேண்டும் என்று இந்துக்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து காவல்துறை மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் தந்து அவர்களை அதிகாலையிலேயே வரவழைத்திருந்தார்கள். திட்டப்படி அனைவரும் வந்து சேர இந்துக்களோ சாமி சிலையை எடுத்துக்கொண்டு பள்ளிவாசல் இடத்தின் வழியாக செல்ல முற்படுகையில் முஸ்லிம்கள் தடுத்திருக்கின்றனர். பிரச்சனை ஆகவும் காவல் துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து விட்டு கோவிலுக்கு செல்வதற்கான உரிய வழியை பயன்படுத்துங்கள் இந்த வழி இஸ்லாமியர்களுடையது என தடுத்து அந்த பாதையிலேயே காவல்ர்கள் தடுத்து பாதுகாத்திருக்கிறார்கள். ஆனால்,
இந்துக்களோ காவல்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பிறகு கூட்டத்தை கலைக்க காவலர்களும் லத்திசார்ஜ் செய்துள்ளார்கள். பிறகு சாமிசிலையை பாதியிலேயே இறக்கிவிட்டு இந்துக்கள் மத்திய மந்திரி ராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொல்லவும் அவரோ மாவட்ட கலெக்டர் அனில் மேஷராம் அவர்களுக்கு சொல்லி கலெக்டரே வந்துவிட்டார். பிறகு கலெக்டர் வந்த பிறகு காவல்துறை உண்மையை எடுத்து சொன்னபோது கலெக்டர் மீண்டும் ராஜாவை தொடர்பு கொண்டுவிட்டு அவரது தலைமையிலேயே தடையை மீறி பள்ளிவாசலின் பாதையிலேயே ஊர்வலத்தை நடத்தி சாமி சிலையை கோவிலுக்கு வைத்து விட்டு இஸ்லாமியர்களிடம் வந்து இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை அரசு செலவிலேயே கட்டித்தருகிறோம். ஏதாவது பிரச்னை பண்ணீங்க எல்லாத்தையும் தூக்கி உள்ள வச்சிருவேன் என்பது போல மிரட்டிவிட்டு 144 தடைஉத்தரவை அமல் படுத்தி சென்று விட்டார். காவல்துறையினரிடம் ஏன் உண்மை சொல்லி தடுக்கவில்லை என்று மக்கள் கேட்ட போது நாங்கள் என்ன செய்யமுடியும் கலெக்டரே முன்னின்று இதை செய்வாரு என்று யாருக்கு தெரியும் என்று கையை விரித்து விட்டார்கள். வழக்கம் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராஜா பெரம்பலூருக்கு வருவது வழக்கும். அவ்வாறு நேற்றும் வந்திருந்த போது சத்திரமனையிலுள்ள திமுக ஒன்றிய பொருப்பிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் சென்று சந்தித்த போது அவர்களுக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா நான் பாத்துகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். இதற்கிடையில் பா.ஜ.கவிலிருந்து 20 பேர் பெரம்பலூரிலிருந்து வந்து இந்துக்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்களைப்பார்த்து தகாத வார்த்தைகளிலில் ஏசிவிட்டும் சென்றார்கள். இப்படியாக இருக்கிறது நிலைமை.
நான் ரிபாய் அவர்களுக்கும் போன் செய்து சொல்லியிருந்தேன். தாங்கள் உடனடியாக நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வஸ்ஸலாம்
தமுமுக - குவைத்

May 24, 2008

குவைத்தில் பொதுக்கழுக்கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,
தமுமுக குவைத் மண்டலத்தில் கடந்த 23-5-2008 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் குவைத் - மிர்காப் (சிட்டி) பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானா பள்ளிவாசலில் 2007-2008க்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தலும், கலந்தாய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தை துணைத்தலைவர் அப்துல் கரீம் பாபு முஹம்மதுபந்தர்(தஞ்சை) அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அல்கிரைன் கிளை பொருளாளர் ஜாபர்கான்-கீவளுர் வரவேற்றார். தலைமையுரைக்குப்பின் மண்டலப்பொருளாளர் ஃபஜ்லுர்ரஹ்மான்-(கிராப்பட்டி)திருச்சி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்து வரவு-செலவு கணக்குகளை உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கும், அப்பாவி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கும் கண்டனம் தெரிவித்து கால்திய்யா கிளைச்செயலாளர் ஜாபர்ஸாதிக்-திருவாடானை அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இஷா தொழுகைக்குப்பின் நிறைவடைந்தது. இனி வரும் வாரங்களில் இன்ஷா அல்லாஹ் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இதே ரவுண்டானா பள்ளிவாயிலி்ல் தமுமுகவிற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மஃரிப் முதல் இஷா வரை தமுமுக நிர்வாகிகளை சந்திக்கலாம் வேண்டிய தகவல்களை பெற்றச் செல்லலாம் என்றும் அறிவுருத்தப்பட்டது.

May 20, 2008

மத்திய போலீஸ் பிரிவில் உதவி கமாண்டன்ட் பணி

மத்திய போலீஸ் பிரிவுகளான எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத் போலீஸ் பிரிவு, சகஸ்ட்ர சீமா பால் ஆகியவற்றில் காலியாகவுள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வழக்கமாக கடுமையான போட்டியை உள்ளடக்கியுள்ள பணியிடங்கள் இவை. பெருமை தருவதாகவும் சாகசங்கள் நிறைந்ததாகவும் உள்ள மத்திய துணை ராணுவப் பிரிவு பணியான இதற்கு சிறப்பான உடற்தகுதியும் தேவை.
தகுதிகள்: ஆகஸ்ட் 1, 2008 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும். பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பான உடற் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனினும் பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி. போன்ற பிரிவுகளில் உள்ள பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இதற்கான முதற்கட்டத் தேர்வை யு.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வாக நடத்தும். எழுத்துத் தேர்வில் ஜெனரல் எபிலிடி மற்றும் இன்டலிஜென்ஸ் பகுதியும் விரிவாக விடையளிக்கும் கட்டுரை வரைதல், சுருக்கி வரைதல் மற்றும் காம்ப்ரிஹென்சன் ஆகிய பகுதிகள் இடம் பெறும். தமிழ்நாட்டில் மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறுவோருக்கு உடற் திறனறியும் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தும். இதில் ஆண்களுக்கு பின்வரும் தேர்வு முறைகள் நடத்தப்படும். 16 செகண்டுகளில் 100 மீட்டர் ஓட்டம், 3 நிமிடங்களில் 800 மீட்டர் ஓட்டம், 3 வாய்ப்புகளில் 3.5 மீட்டர் நீளம் தாண்டுதல், 3 வாய்ப்புகளில் 1.05 மீட்டர் உயரம் தாண்டுதல், 7.26 கிலோ எடையுள்ள சாட்புட்டை 4.5 மீட்டர் தூரம் எறிதல்பெண்களுக்கு இவை 100 மீ.தூரம் ஓடுவது 18 செகண்டுகளுக்கும், 800 மீட்டர் ஓட்டம் 4 நிமிடங்களுக்கும், நீளம் தாண்டுவது 3 மீட்டருக்கும், உயரம் தாண்டுவது 0.9மீட்டருக்கும் நடத்தப்படும். குண்டு எறிதல் கிடையாது. இதன் பின் நடத்தப்படும் ஆளுமைத் திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை யு.பி.எஸ்.சி. நடத்தும்.
விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிட்ட தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் யு.பி.எஸ்.சியின் உதவி கமாண்டன்ட் பணிக்கான விண்ணப்பத்தைப் பெற்று நிரப்பி அனுப்ப வேண்டும். இதன் விலை ரூ.20 மட்டுமே. விண்ணப்பத்தில் தபால் அலுவலகம் ஒன்றில் ரூ.100க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீ ஸ்டாம்பைப் பெற்று அதை கேன்சலிங் என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. விண்ணப்பத்துடன் எந்த சான்றிதழ் நகலையும் இணைக்கக் கூடாது. விண்ணப்பத்தை சாதாரண தபால்/விரைவுத் தபால்/கூரியர் ஆகியவை மூலமாக அனுப்பலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி: Secretary, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi – 110 069.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூன் 9, 2008
முழு விபரங்களறிய இன்டர்நெட் முகவரி: http://upsc.gov.in/exams

எதிலும் முன்னோடி - தமுமுக

குருதிக்கொடை...,
கொடுப்பதில் மட்டுமல்ல கொடுத்ததை காப்பதிலும்
முன்னோடி
தமுமுக.
வீடியோவைக்கண்டு வாழ்த்துங்கள்
வஸ்ஸலாம்.

May 19, 2008

குவைத்தில்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
குவைத்தில் பிரபல சர்வதேச நிறுவனத்திற்கு ஆண் தட்டச்சர் (டைப்பிஸ்ட்) தேவை: -

Article No.: 18 (Try to 20)
சரளமாக ஆங்கிலத்திலும் சுமாராக அரபியிலும் தட்டச்சு பணி புரிய.
இஸ்லாமிய மார்க்கத்தினராக இருப்பது அவசியம்.
நிறைவான சம்பளம், சர்வதேச பணி நேரம் மற்றும் பல...,
திறமைக்கேற்ப பணி நிரந்தரம்.
குவைத்திலிருப்பவர்கள் மாத்திரம் உடனே தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 6023457 - 7493869
மின்னஞ்சல்: akareem_74@yahoo.com மற்றும் aman_kwt@yahoo.com
வஸ்ஸலாம்.

May 18, 2008

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி மரியம் பர்சானா

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற தமிழக பெண்களில் சென்னையைச் சேர்ந்த பர்சானா முதலிடம் பெற்றுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக்-பாத்திமா சாதிக் தம்பதியரின் மகள் மரியம் பர்சானா சாதிக் (வயது 25). இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் இவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ராயபுரம் கெவின்ஸ் பள்ளியில் ஆரம்ப படிப்பையும், ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். பட்டமும், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் எம்.காம். பட்டமும் பெற்றார்.

அவரது ஆசைக்கு தந்தை சாதிக் தூண்டுகோலாக இருந்தார். பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் தங்கையின் கனவை நனவாக்க பக்கபலமாக இருந்தார்.

அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார். அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதி தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தனது சாதனை குறித்து பர்சானா கூறியதாவது:- கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும் மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காக டி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம். இவ்வாறு பர்சானா கூறினார்..

பர்சானாவின் தந்தை சாதிக்கின் இயற்பெயர் சக்திவேல் நாடார். பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். இதனால், தனது பெயரை சாதிக் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், பல்லவி என்ற தனது பெயரை மரியம் பர்சானா சாதிக் என்று பர்சானா மாற்றிக் கொண்டார்.

இந்த வெற்றியை, இஸ்லாம் இவர்களுக்கு கொடுத்திருக்கின்றது..!

வேலூர் கிளர்ச்சி....! விழிப்பதிவு

May 17, 2008

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே...!

பெருமையடித்து, திரிந்து கொண்டிருக்கும் சிலர்களுக்காக அல்லாஹ்வின் வசனத்திலிருந்து சில எச்சரிக்கைகள் : -

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்) கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்-57:23 )

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். (அல்குர்ஆன்-7:133)

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: 'நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!' (அல்குர்ஆன்-7:48)

பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்-8:47)

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அறிவான் (ஆணவங்கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்-16:23)

'ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்' (என்றும் மலக்குகள் கூறுவார்கள் ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல்குர்ஆன்-16:29)

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்கள் வியாழக்கிழமை விண்டிவியில் பினாத்தியவர்களுக்கு உள்ளச்சத்தை ஏற்படுத்தவும், அல்லாஹ் அவர்களுக்கு உண்மை தவ்ஹீதை விளங்க வைக்கவுமே.
வேலிக்கு ஓணாண் சாட்சி என்று சொல்வழக்கு ஒன்று உள்ளது. அதுபோல இருந்தது தொங்கு மீசை வைத்தவரின் வாக்குமூலம்.
குவைத்தில் கூனிமேட்டார்களின் விலகலும், கடையநல்லூரார்களின் கடிதமும் உண்மை எழுச்சியை பயாஸ்கோப் வைத்து காட்டியது.

2:9 (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள், ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.


2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

நுகர்வோர் பாதுகாப்புத்துறை

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

http://www.consumer.tn.gov.in

குடும்ப அட்டை மற்றும் நியாயவிலைக்கடைகளின் குறைகள் தேவைகளை பதிவு செய்யும் இணைய தளம்.

+2 உடனடி தேர்வு விண்ணப்பங்கள்

பிளஸ் 2 தேர்வில் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் ஏராளமானோர், உடனடித் தேர்வு எழுத நேற்று விண்ணப்பம் செய்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவில், 91 ஆயிரத்து 498 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடனடித் தேர்வுக்கு நேற்று முதல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் நேற்று விண்ணப்பம் செய்தனர்.

எனவே, அன்பிற்குரிய தோழர்களே தங்கள் உறவினர்கள் நண்பர்களில் யாரேனும் +2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் (Improvement) மீண்டும் தேர்வெழுதி வெற்றியடைய வேண்டுகின்றோம். இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விரைந்து செயல்படவேண்டியது அவசியம்.

May 15, 2008

கைதிக்கு அனுமதி :-

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட கோவை குண்டுவெடிப்பு கைதி, வீட்டில் தங்கி சிகிச்சை பெற 90 நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் அபுதாகிர். கோவை, தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவர், ஏற்கனவே மதுரை ஜெயில் வார்டன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி கடந்த மார்ச் 8ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும், அடிக்கடி வயிறு வீக்கம் ஏற்படுவதால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, அனுமதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு விசாரிக்கப்பட்டு, அபுதாகிருக்கு 90 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், இவருக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பும் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இவர், ஒரு சில நாட்களில் தனியார் மருத்துவமனையில் இருந்து தெற்கு உக்கடத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சிகிச்சைக்கு பின், விடுமுறையை முடித்துக் கொண்டு ஆக., 13ம் தேதி மீண்டும் சிறையில் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதுபோல் நல்லவர்களின் துஆ என்றும் கைவிடப்படமாட்டாது.

" (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்-07:55 )

May 14, 2008

குவைத் அமீர் மரணம். (இன்னா லில்லாஹி..,)

KUWAIT, May 13 (KUNA) -- His Highness the Father Amir of Kuwait Sheikh Saad Al-Abdullah Al-Salem Al-Sabah passed away Tuesday, the Amir Diwan said.'The Amiri Diwan mourns His Highness the Father Amir Sheikh Saad Al-Abdullah Al-Salem Al-Sabah who passed away tonight,' the Amiri Diwan said in a statement.
-- The statement highlighted that Sheikh Saad had 'faithfully served his country ... and made sacrificies for it (Kuwait) and was thus beloved and occupied a special place in hearts of all citizens.' Sheikh Saad Al-Sabah will be laid to his final resting place at 9:30 a.m. Wednesday, it said.
அமீர் ஷேஹ் ஸாத் அல்-அப்துல்லாஹ் அல்-ஸலாம் அல்-ஸபாஃ அவர்கள் செய்த நற்காரியங்கள் அவரை மறுமையில் வெற்றி பெற துஆ செய்கின்றோம்.

May 11, 2008

தமிழ்நாடு காவல்துறை

தமிழறிவோம்

திருத்தங்களும் பொருத்தங்களும்
படத்தை பெரிதாக்கி பார்த்து கொள்ளவும்

எதார்த்தமாக ஒரு ஒப்பிடல்

மக்கள் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) - 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)
பஸ்கள் (அனைத்து வகை) - 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)
சுமோ வகை கார்கள் - 78
ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் - 40
அம்பாசடர் கார்கள் - 79
மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் - 264
மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை.

இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்....

சென்டிமென்டாக டச்....

இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார். பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும்

அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் "இது பொழுது போக்கிற்காக" நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார். தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை.

நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.


இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? ....

எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

செய்தி தொடரும்...

May 06, 2008

வாழ்த்துக்களும்..! பிரார்த்தனைகளும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
திருநாகேஸ்வரம் அருகே முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் திடீர் என பிள்ளையார் சிலை மற்றும் காவி கொடி கம்பங்களை மர்ம மனிதர்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஆர்.வி. நகரில் முஸ்லிம் ஜமாத்தார் அப்துல் அஜீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்ட முடிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். நேற்று முன்தினம் சுத்தம் செய்யும் பணி முடிந்ததும், நேற்று காலை அவ்விடத்தில் பணிகள் தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகளை நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதன்படி நேற்று காலை ஜமாத்தார் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் அவ்விடத்திற்கு வந்தனர்.
அப்போது அந்த இடத்தில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு, மூங்கில் கம்புகள் சுற்றிலும் நடப்பட்டு அவற்றில் காவி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. யாரோ மர்ம மனிதர்கள் இரவோடு இரவாக சிலை மற்றும் கொடிக்கம்பங்களை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இது பற்றி போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, முஸ்லிம் ஜமாத்தாரிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் தனபால், வீரையன் ஆகியோர் மூலம் பெற்ற ஆவணங்களை தாசில்தார் சரிபார்த்தார். இதன்படி சுமார் 20 ஆண்டுகளாக அந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து கும்பகோணம் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் மர்ம மனிதர்களால் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, மற்றும் கொடி கம்பங்களை அகற்றி, அவற்றை கும்பகோணம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலுள்ளது தினத்தந்தி(http://dailythanthi.com/article.asp?NewsID=410948&disdate=5/6/2008) யின் இன்றைய (06-05-2008) செய்தி.

நேற்றிரவு சற்று நேரம் விண்டிவி பார்க்க நேர்ந்தது. அப்போது நீதியின் குரல் நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்தார்கள். வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாயில் தொழுகை நடத்துவது பற்றிய தலைப்பில் விவாதம் நடந்தது. உலகம் முழுவதும் மக்கள் காணக்கூடிய நிகழ்ச்சியில் தகவல்களை தரமான முறையில் தரவேண்டும். இந்துக்கள் மட்டும் தான் இந்தியாவில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்களாம். பிறகெதற்கு வர்ணங்களை உறுவாக்கினார்கள். இவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் ஒரு இந்திய குடிமகன் சாப்பிட்ட தட்டில் இவர்கள் உணவு உண்ணத்தயாரா..? தண்ணீர் குடித்த டம்ளர் தண்ணீர் குடிக்க தயாரா..? திருமணம் முடிக்க தயாரா..?

தம்மம்பட்டி பற்றிய செய்தி ஒன்று சொன்னார் தற்போது இவர்கள் நடத்தி முடித்த விநாயகர் சதுர்த்திக்கு பள்ளிவாயில் முன்பாகவே சிலையை வைத்து தொந்தரவு செய்தனர். இதுதான் இவர்கள் கொண்ட சகிப்புத்தன்மையா..? 45வருடமாக விட்டுக்கொடுத்ததன் விளைவு இன்று பாபர் மஸ்ஜிதை இழந்து நிற்கின்றோம். அந்த நடந்த கொடூரங்களை எப்படியாவது தமிழகத்தில் அரங்கேற்ற பாஸிச சக்தி்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. நமது பிரார்த்தனைகளாலும், இறைவனின் மாபெரும் கிருபையாலும் இவர்களின் சதிகளை முறியடித்து இறையில்லத்தை மீட்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

09-05-2008 வெள்ளிக்கிழமை அன்று இன்ஷா அல்லாஹ் தமுமுக நடத்த இருக்கும் இந்த வாழ்வுரிமைப் போரில் தமிழக இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும், பெருமானார் காட்டிய வழியும், ஈமானில் முதல் தரமுமான கையால் தடுக்க ஒன்று சேருங்கள். இறைவன் உதவி செய்வான். பலகீனமான ஈமானாக இருப்பவர்கள் குறைந்த பட்சம் துஆ செய்யுங்கள். கண்ணைவிற்று ஓவியம் வாங்குவது போல் பள்ளிவாயில்களை இழந்தப்பின் எழுச்சி எற்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இருக்கும் போது குறைசொல்லிவிட்டு தொலைந்தப்பின் தேடுவதில் அர்த்தமில்லை.

இந்த இறையில்ல மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்வோரை வாழ்த்தி வரவேற்கின்றோம். வெற்றியுடன் திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
தமுமுக-குவைத் மண்டலம்.

May 04, 2008

குவைத்திலும் வலம் வந்த "குவெஸ்ட் நெட்"

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல் படும் இந்நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும் 220 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "குவெஸ்ட் நெட்'டிற்கு ஈரோடு, சேலம், மதுரையில் கிளை அலுவலகம் உள்ளது. வரும் 22ம் தேதி 10வது ஆண்டு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கட்டும் பணத்திற்கு தங்க காசு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா, உடற்பயிற்சி சாதனங்கள் என ஐம்பது விதமான பொருட்கள் தரப்படுகின்றன. உதாரணமாக, தங்க காசு திட்டத்தில் சேருபவர்கள் முதலில் ரூ.31 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். அவருக்கு "தலைவர்களின் உருவம்' பதித்த ஆறு கிராம் தங்க நாணயம் கொடுக்கப்படும். அவர் இரண்டு பேரை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அந்த இரண்டு பேரும், ஆளுக்கு இரண்டு பேரை சேர்க்க வேண்டும். இப்படி சங்கிலித் தொடராக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

அந்நிறுவனம் நடத்திய வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைத்து சென்று மூளை சலவை செய்ததில் மயங்கிய தினேஷ்குமார் 2006ம் ஆண்டு ரூ.62ஆயிரம் கட்டினார். அப்பணத்திற்கு, ஆறு கிராம் தங்க நாணயம் இரண்டு தந்தனர். தான் கட்டிய பணத்திற்கு வெறும் ஆறு கிராம் தங்கமா என அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், பணத்தை திரும்ப கேட்டு மேற்படி நிறுவனத்திற்கு நடையாய் நடந்தார்.

"உங்கள் வீட்டு முகவரியை கொடுங்கள், இருதினங்களுக்குள் பணம் வீடு தேடி வரும்' என குவெஸ்ட் நெட் நிர்வாக இயக்குனர் புஷ்பம் கூறினார். அன்று மாலை தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த இருவர், "பணத்தை கேட்டு எங்கள் நிறுவனத்திற்கு வந்தால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டிவிட்டு சென்றனர். இதில், மிரண்ட தினேஷ்குமார் நேற்று முன்தினம் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். - இது சமீபத்திய பரபரப்பான செய்தி

இதுபோல் இன்னும் எத்தனை பேர் புகார் கொடுக்க அலைய போகிறார்களோ..? குவைத்தில் கூட நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை மையமாக வைத்து பல மாதங்களாக ஆள் பிடி வேலைகள் நடந்து. இதற்கு ததஜ சகோதரர்களும் பலிகடா ஆனார்கள். ஆனால், தக்க சமயத்தில் சமுதாயத்தை காக்கும் தமுமுக அந்நேரத்தில் துண்டு பிரசுரம் வெளியிட்டு மக்களை இறைவனின் திருவசனத்தை கொண்டு அச்சமூட்டி எச்சரித்தது. குருக்க வழியில் பொருளீட்டி பணக்காரர்களாக எண்ணியவர்களோ வயிற்றெரிச்சலில் ஆதாரம் கேட்டு அலைந்தார்கள். திருகுர்ஆனைவிட இவர்களுக்கு வேறென்ன வேண்டும்.

''நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது உங்கள் உழைப்பின் மூலம் உண்பதாகும்''

என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்: திர்மிதி, நஸயீ, அபூதாவூத்)
''அன்றியும் உங்களில் ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.'' (2:188)

குறிப்பு: தமுமுக-குவைத் மண்டலம் வெளியிட்ட நோட்டிஸ் தேவைப்படுவோர் tmmkkwt@gmail.com க்கு மின்னஞ்சல் செய்தால் JPEG பைலாக அனுப்பிவைக்கப்படும்.

தீயில் எரியப்பட்ட தலித் சிறுமி:

மதுரா : உயர் ஜாதிக்காரர் வீட்டை தாண்டி சென்றதால், ஆறு வயது தலித் பெண், தீயில் தூக்கி வீசப்பட்டாள் இப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். உ.பி. மாநிலம் மதுராவில் இந்த கொடூரம் நடந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒருகிராமத்தில், உயர்ஜாதியை சேர்ந்த ஒருவரின் வீட்டை தாண்டி சென்று விட்டாள் ஆறு வயது தலித் சிறுமி. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீட்டை சேர்ந்த18 வயது வாலிபன், அந்த சிறுமியை, எரியும் நெருப்பில் போட்டுவிட்டான். அலறித்துடித்த அந்த சிறுமியை, அவளின் பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு போய் சேர்த்தனர். அந்த சிறுமிக்கு , உடலில் 50 சதவீத தீக்காயம் உள்ளது. அதனால், அவர் பிழைப்பதற்கு சில சதவீதம் தான் நம்பிக்கை உள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமையை செய்த வாலிபனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவன் மீது, கொலை முயற்சி மற்றும் பெண் குழந்தை சித்ரவதை உட்பட கடும் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்," ஜாதிக்கொடுமை இன்னமும் கூட கிராமங்களில் உள்ளது. தலித் இனத்தவரை உயர் ஜாதியினர் கொடுமைப் படுத்துவதை தடுக்க சட்டம் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாலிபருக்கு அளிக்கப்படும் தண்டனை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். அந்த வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில், ஜாதிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் தான் அங்கு அடிக்கடி வன்முறைகள் நடக்கின்றன.

நன்றி: தினமலர்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிகள்:

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு அதிகாரி நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம்:

பணியின் பெயர்:
இன்ஜினியர்/ஆபிசர்ஸ்/எச்.ஆர். அதிகாரிகள்/கிராஜூவேட் அப்ரென்டிஸ் இன்ஜினியர்கள்.

காலியிட எண்ணிக்கை: 400

பணிப் பிரிவுகள்:
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., மெடலர்ஜி, பயர் இன்ஜினியரிங், பாய்லர் ஆபரேசன்ஸ், எச்.ஆர். மற்றும் பைனான்ஸ்.

தகுதிகள்:
மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ./பி.டெக். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.ஆர். பணிக்கு அந்தப் பிரிவில் சிறப்புப் படிப்புடன் எம்.பி.ஏவை 60%உடன் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எச்.ஆர். அல்லது பர்சானல் மேனேஜ்மெண்ட் பி.ஜி. டிப்ளமோவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 26 வயதுக்குள் இருக்க வேண்டும். வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் இதற்கும் தரப்படும்.

தேர்வு முறை:
ஜூலை 6 அன்று இதற்கான போட்டித் தேர்வு நடத்தப்படும். இதில் ஜெனரல் ஆப்டிடியூட் மற்றும் டிசிப்ளின் நாலெட்ஜ் ஆகியவற்றில் அப்ஜக்டிவ் கேள்விகள் இடம் பெறும். குழு விவாதமும் குழுத் திறனறியும் பகுதியும் நேர்முகத் தேர்வும் எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவருக்கு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான கட்டணம் ரூ.300. இது டிடியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மே 3ந்தேதி முதல் இப்படி விண்ணப்பிக்கலாம். மே 20 வரை விண்ணப்பிக்கலாம். இப்படி ஆன்லைனில் பதிவு செய்தபின் கிடைக்கும் தாளை பிரிண்ட் எடுத்து கையெழுத்திட்டு ஜாதிச் சான்றிதழின் நகலோடு இணைத்து டிடியுடன் அனுப்ப வேண்டும். சாதாரணதபாலில் மட்டுமே இதை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:
Advertiser,
Post Box No.3098,
Lodhi Road Head Post Office,
New Delhi-110 003.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் மே 26, 2008.

முழு விபரங்களறிய இன்டர்நெட் தள முகவரி:
www.iocl.com/PeopleCareers/Careers.aspx

விமான பைலட் ஆவது எப்படி?

இந்தியாவின் ஏவியேசன் துறை 2 பிரிவுகளாகக் கருதப்படுகிறது. கமர்சியல் எனப்படும் நாம் பயன்படுத்தும் விமான போக்குவரத்துப்பிரிவு மற்றும் ராணுவ விமானப் பிரிவு என அவற்றைக் கூறலாம். நாம் பயன்படுத்தும் போக்குவரத்து பயணிகளுக்கான மற்றும் சரக்குப் போக்குவரத்து என 2 பிரிவுகளாக உள்ளது. இதையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து என மேலும் பிரிக்கலாம். ராணுவ விமானப்பிரிவு என்பது இந்திய விமானப்படையின் செயல்பாடுகள், தரைப்படை மற்றும் கப்பற்படையின் விமான செயல்பாடுகள் என விரிந்து செயல்படுகிறது.


கமர்சியல் பிரிவு எனப்படும் சிவிலியன்களுக்கான விமானத் துறையில் ஏர்லைன்ஸ் ஆபரேசன்ஸ், பராமரிப்பு, மார்க்கெட்டிங், நிதிப்பிரிவுகள் உள்ளன.இவற்றில் பைலட் பணியானது ஆபரேசன்ஸ் பிரிவில் வருகிறது. பைலட்டுகள் குறுகிய மற்றும் நீண்ட தூர விமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு பயணம் தொடங்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பிரீ-பிளைட் செக்கப் எனப்படும் பயண திட்டத்தை அவர்கள் சரி பார்த்து உறுதி செய்து கொள்கிறார்கள். எந்த வழியில் பயணிக்கப் போகிறோம், என்ன உயரத்தில் பறக்கவிருக்கிறோம், நிலவுகின்றன வானிலை மற்றும் தட்பவெப்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றை பைலட்டுகள் மனதில் கொள்கிறார்கள். விமானத்தின் டேக் ஆப் மற்றும் லேண்டிங் ஆகியவை ஒரு பைலட்டிற்கு உண்மையில் சவாலான பணிகள். இது தவிர விமானத்தின் உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் இவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள். விமானத்தின் எரிபொருள் போதுமானதாக இருக்கிறதா இல்லையா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். விமானத்தின் இந்த அம்சங்களை கேபினின் பிற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். பயணத்தின் போது பாசஞ்சர்களோடு அவ்வப்போது பேசி பயண நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கிறார்கள்.


கோ பைலட் எனப்படும் சக பைலட் ஒருவரோடு இணைந்து பயணத்தைவழிநடத்துகிறார்கள். இந்தப் பணிக்கு நன்னடத்தை, பொறுப்புணர்வு, காலம் தவறாமை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அடிப்படை குணாதிசயங்களைப் பெற்றிருப்பது முக்கியம். கடும் உழைப்பு, நல்ல உடற்தகுதி, விழிப்புணர்வு, அனுசரித்துப்போகும் தன்மை, அவசரச் சூழலில் யோசித்து முடிவெடுக்கும் தன்மை ஆகியவையும் அடிப்படை அம்சங்களாக தேவைப்படுகிறது. பைலட் லைசென்ஸ் என்பது 3 நிலைகளைக் கொண்டது. ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ், பிரைவேட் பைலட் லைசென்ஸ் மற்றும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் என இவற்றைக் கூறுகிறார்கள். இது தவிர ஹெலிகாப்டர் பைலட் லைசென்ஸ் தனியாக இருக்கிறது.

ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ்:
இதை பைலட் கிளப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்துகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 16 வயது நிரம்பியவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ரூ.10 ஆயிரத்துக்கான பாங்க் கியாரண்டியை தர வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ் மற்றும் செக்யூரிடி கிளியரன்ஸ் என்னும் சான்றிதழைப் பெறுவதும் தான் இதில் முக்கியம். இதில் பைலட் ஆப்டிடியூட் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.


பிரைவேட் பைலட் லைசென்ஸ்:
ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸைப் பெற்றவுடன் பிளையிங் இன்ஸ்ட்ரக்டர் ஒருவரின் துணையுடன் பிளையிங் பயிற்சி தொடங்கப்படுகிறது. பறப்பதன் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இருவராக 15 மணி நேரம் பறந்த பின் பயிற்சி மாணவர் முதன்முதலாக விமானத்தை ஓட்டவேண்டும். மொத்தம் 60 மணி நேரம் விமான ஓட்டிய பின் இந்த லைசென்ஸ் தரப்படுகிறது. இதில் 20 மணி நேரம் தனியாக ஓட்டுவதும் 5 மணி நேரம் கிராஸ் கன்ட்ரி பிளையிங்கும் அடங்கும் 17 வயது நிரம்பியிருப்பதும் +2 முடித்திருப்பதும் முக்கியம். மிக அதிகமான செலவை உள்ளடக்கியது இந்தப் பயிற்சி.


கமர்சியல் பைலட் லைசென்ஸ்:
மொத்தம் 250 மணி நேரம் பறந்த பின்பு இது தரப்படுகிறது. இயற்பியல் மற்றும் கணிதத்துடன் +2 முடித்திருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பறப்பது தவிர எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தற்போதைய சூழலில் நாளுக்கு நாள் விமான சேவை அதிகரித்து வருவதால் பைலட்டுகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலுள்ள சில பிளையிங் கிளப்புகள்:
Flying Training Institute, Behala, Calcutta.
Government ATraining Institute, Civil aerodrome, Bhulaneswar.
Karnal Aviation Club, Kunjpura Road, Karnal, Haryana.
Government Flying Club,Aerodrome, Lucknow.
School of Aviation Science and Technology, Delhi.
Flying Club Ltd, Safdarjung Airport, New Delhi.
State Civil Aviation, UP.
Govt. Flying Training Center Kanpur and Varanasi.
Mumbai Flying Club, Juhu Aerodrome, Santa Cruz West, Mumbai.
Rajasthan State Flying School, Sanganer Airport, Jaipur.
Govt. Flying Training School Jakkur Aerodrome, Bangalore.
Andra Pradesh Flying Club Hydrabad airport, Hydrabad.

பற்றிப்பிடிக்கப்படுமா..? ஒற்றுமைக் கயிறு..!

அல்லாஹ்வின் திருநாமத்தால்.......

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' (51:55).

'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'(50:35).


அன்புச் சகோதரரே!

பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


அன்புச் சகோதரரே!
தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள்ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப்புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ். அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற்காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும்
கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார். அன்று உருவாகப்பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன்.

ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்துலில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள்விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார். உங்களின் தலைவர் பகிரங்கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக்காட்டவில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.


விஷயத்திற்கு வருவோம்:

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது.

ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போதுமானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீதுக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள். நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள். நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள்.

யா! அல்லாஹ் ஏகத்துவவாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!


நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங்களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ். உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:


ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்பதற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தலைவரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.
அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங்கினார்-சத்தியம் அவர் உள்ளத்தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமுதாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக்கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார். அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ்லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக - நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்) தேசபக்தியின் காரணமாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாதவர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.


உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா!

ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப்படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முதலமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமையின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
தவ்ஹீத் (தமிழ்நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர். ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த
கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச்சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.

இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்த மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித்தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.

அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.


மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கிறார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்லமுடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது. உங்களின் தலைவர், மாமனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.


ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்களுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ்பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப்பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்யவைத்தவர்.


சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்து கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார். பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.


இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன். உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-அல்லாஹ் போதுமானவன்.<br>

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.


கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அல்கோபர்
சவுதி அரேபியா.

பயன்தரும் படிப்புகள்:

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான நவீன இன்ஜினியரிங் படிப்பு மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். இன்டர்நெட் மூலம் இயந்திரங்களை இயக்குவது, தானியங்கி முறையில் ரோபோக்கள், இன்ஜின்களை கட்டுபடுத்தி நிர்வகிப்பது போன்ற பாடங்களை கொண்ட புதுமையான துறை இது. இதற்கான இயந்திரங்களை வடிவமைத்து, இயக்கும் திறன் மிக்க இன்ஜினியர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. சிக்கனமான, நம்பிக்கையான, நவீன தொழில் நுட்பங்களை வடிவமைக்க உதவும் இந்த புதிய படிப்பு, தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
"மெக்கட்ரானிக்ஸ்' என்ற வார்த்தையை முதன்முதலில் "யஸ்காவா' என்ற ஜப்பானிய நிறுவனத்தின் முதுநிலை இன்ஜினியர் டெட்சுரோ மோரி என்பவர் பயன்படுத்தினார். மெக்கட்ரானிக்ஸ், "எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ்', "கன்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
மெக்கட்ரானிக்ஸ் பாடத்திட்டத்தில் கணிதம், இயந்திரவியல், இயந்திர உதிரிபாகங்களின் வடிவமைப்பு, இயந்திரங்களின் வடிவமைப்பு, தகவல்தொடர்பு, தெர்மோடைனமிக்ஸ், சர்க்யூட்ஸ் அண்டு சிஸ்டம்ஸ், கன்ட்ரோல் தியரி, டிஜிட்டல் சிக்னல் புராசசிங், பவர் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
பி.இ., மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை தமிழகத்தில் கீழ்க்கண்ட கல்லூரிகள் வழங்குகின்றன:

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி- கோவை
கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி - பெருந்துறை, ஈரோடு
ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி- கோவை
கே.எஸ்.ஆர்., தொழில்நுட்ப கல்லூரி- திருச்செங்கோடும
காராஜா இன்ஜினியரிங் கல்லூரி - அவினாசி


நேவல் ஆர்க்கிடெக்சர்:
நேவல் ஆர்க்கிடெக்சர் கப்பல் வடிவமைப்பு, கப்பல் கட்டுதல், அவற்றை பழுதுபார்த்தல் தொடர்பான இன்ஜினியரிங் படிப்பு. இது நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிபுணர்கள், கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தில் திறமைமிக்கவர்களுடன் இணைந்து செயல்படும் கூட்டுமுயற்சியாகும். விமானம், கார், விண்கலங்கள் வடிவமைப்பு தொடர்பான கருவிகளும், நிபுணர்கள் அதிக அளவில் உள்ளனர். கப்பல் பயணம், கடல் அலைகளையும், காற்றின் திசையையும் சார்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிடைப்பது கடினம் என்பதால் நேவல் ஆர்க்கிடெக்சர் ஆராய்ச்சிகள் சந்திக்கும் சிக்கல்கள் மற்ற துறைகளை விட அதிகம்.
நேவல் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,
ஆந்திர பல்கலைக்கழகம், விசாகப்பட்டிணம்.


பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்:
பெட்ரோலியம் டெக்னாலஜி பரந்து விரிந்த ஒரு துறை. இதில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்கள் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டறிகின்றனர். இதற்கு நிலஅமைப்பியல் தொடர்பான திறனும் அவசியம். இந்த துறை நிபுணர்களை ஜியாலஜிக்கல் பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட் என்று அழைக்கின்றனர். கச்சா எண்ணெய்யை வெவ்வேறு நிலைகளில் பிரித்து சுத்திகரிக்கும் பணியில் ஈடுபவர் லேபாரட்டரி பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட். எண்ணெய் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பெட்ரோலியம் டெக்னாலஜிஸ்ட்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. விற்பனை பிரிவிலும், மறுசுத்திகரிப்பு பிரிவிலும் கூட இவர்கள் பணியாற்றலாம். இந்த துறை வல்லுனர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு குறைவு.

May 03, 2008

முஸ்லிம்கள் உரிமைமீட்பு மாநாடு

நெல்லையில் 25-4-2008 நடந்த முஸ்லிம்களின் உரிமை மீட்பு மாநாடு

சுத்தியல் ஒடிந்தது! சத்தமும் முடிந்தது!

என்ற உவமைக்கு சமமாக அவ்வப்போது ஓங்கியும் அடுத்தவர்களின் பொய்களை தாங்கியும் வெளிவரக்கூடிய ப்ளாக் ஸ்பாட் செய்திகளையும் கள்ள நோட்டீஸ்களையும் கண்டு துவண்டு விடாமல்களத்தில் நிற்கும் ததஷ வினருக்கு எதிராக புதிய தொரு புனையல் வெளிவர இருக்கின்றது. நிகழ்ச்சியை ஜாக்கின் ஓட்டையில்லா துப்பாக்கியும் ஒருநாள் பெருநாள் என ஓங்கி ஒலித்து ஒரே பெருநாளுக்கு இரண்டு இடங்களில் குத்பா ஓதி தனது (ஊருக்குமட்டும் உபதேச) நிலையை தெளிவுபடுத்திய அஷ்ஷ்ஷ்ஷேஹ் ரஹ்மதுல்லா இம்தாதி தெகுத்து வழங்க இருக்கின்றாராம். அதன் வினியோக உரிமையை வழக்கம்போல் அவதூறுகளால் பரப்புவதன் மூலம் அறியப்பட்டவரும் அட்ஜஸ்ட்மெண்ட் அறிஞனுமாகிய முகவரியற்ற ரைஸூத்தீன் வாங்கியிருக்கின்றார். கும்பகோணம் பேரணிக்காகவும் சிறை நிரப்பும் போராட்டத்திற்காகவும் தயாரான பெண்களை கேலிசெய்து தெருவில் பெண்களை கண்டால் தனது நிலை எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தியவர். (குறிப்பாக இவரது மெயில் முன்னாள் சகாக்களால் பரப்பப்படும்). (தமுமுகவின் செய்தி தமுமுக கிறுக்குக் தளத்தில் வரும்முன் தனது புளுகு ஸ்பாட்டில் எழுதிவிடும் ரைஸுத்தீன் சமீபத்தில் பாண்டிச்சேரியில் வாத்தியார் நடத்திய பேரணியை தனது புளுகு ஸ்பாட்டில் வெளியிடாததை கவனித்தபோது நமது புருவங்கள் உயர்ந்தன!
ததஜ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களை கேலி செய்துவிட்டு இப்போது இந்த செய்தியைப்போட்டால் வசமாக மாட்டிவிடுவோம் என தன் வாழ்நாளில் முதன் முதலாக சிந்தித்ததன் விளைவுதான் அந்த செய்தியை பிரசுரிக்காததற்கு காரணம் என்பதை புரிந்துகொண்டோம்.
நிகழ்ச்சியின் விளம்பர உரிமையை குவைத் தமுமுக நிர்வாகம் எடுத்துக்கொண்டுள்ளது.
இன்ஷா (ஒருவேளை) வெளிவரும் அந்த ஆஹா ஓஹேவைப் பார்த்து அவர்களாகவே காறித்.....காணாமல் போவதை எண்ணினால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. தான் சொல்லப்போகும் தகவல்கள் உண்மையானது தான் என்ற உறுதி ரஹ்மதுல்லா இம்தாதியிடம் இருந்தால் தனது கூற்றை நிரூபிப்பதற்காக எதிரணியடன் மக்கள் முன்னிலையில் தனது ஆதாரங்களை சமர்ப்பிப்பார். இல்லையென்றால் முழுப்பொய்யனின் முதல் முகவரியாக தன்னை அடையாளம் காட்டிவிடுவார். எது எப்படியோ! மாநாட்டுக்கு முன் இவர்களின் கடைச்சரக்குகளை விரிப்பதன் மூலம் மாநாட்டுக்குவருகை தருபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்பதால் எந்த ஒரு ததஜவினரும் கலக்கமடையப்போவதில்லை!
சும்மாயிருந்தவன் கண்ணில் சுண்ணாம்பு இருக்கின்றது எனக்கூறி விளம்பரம் அடைய நினைக்கும் கூட்டங்கள்யாவும் தானாகவே அழிந்துவிடும்.
ததஜவிடம் இருப்பது சுத்தியல் அல்ல! அது தேவையின்றி ஆப்பு வைக்கவும் நினைக்காது!
ததஜவிடமிருப்பது சத்தியம்!! எனவே அதன் சத்தம் ஒருபோதும் ஓய்வதில்லை!
பி. கு. : வசைபாடும் வாலிபனை தெரியாது என்ற ரீதியில் குவைத் தமுமுக தனது வலைப்பதிவில் அபு நுறாவுக்காக விளக்கம் ஒன்றையும் வெளியிட்டு பயங்கரமான ஆய்வுகளையும் அடுக்கியிருந்தார்கள். எவனாவது எழுதிவிடும் எருக்கைகளை தனது வலைதளத்தில் அடுக்கிவிட்டு பின்னர் தக்க பதில்கிடைத்தால் முதலைக்கண்ணீர் வடிக்கும் குவைத் தமுமுக நிர்வாகிகள் இப்போதும் வரிந்துகட்டி வழுக்கிவிழப்போகின்றார்கள் என்பதில் ஐயமில்லை!
வசைபாடும் வாலிபனை தெரியாது என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூற முடியுமா என இவர்களிடம் நாம் கேட்கமாட்டோம். ஆணையிட்டாலும் இட்டுவிடுவார்கள். அன்று பெருந்தலைவர்கள் ஆணையிட்டதை காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று அரசியலுக்காக அலைந்து கொண்டிருக்க அவர்களது ச்சீள்(பொய்) ஆணையிடத் தயங்கமாட்டார்கள் என்பதால் காலம் கனியும் போது வசைபாடும் வாலிபனுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்படும். இன்ஷா அல்லாஹ். அன்புடன் அபுநூறா.
*******************************************************************
மேலுள்ளது அபுநூறா தமுமுக குவைத் மண்டலத்திற்கு மெயில் அனுப்பியது. வசைபாடும் வாலிபர் சங்கத்தை எங்களுக்கு தெரியாது என பதிவில் குறிப்பிட்டுள்ளதாக கூறியிருக்கும் அபுநூறாவே இப்படித்தான் குர்ஆன் ஹதீஸையும் விளங்கி தலைவனுக்கு கட்டுப்பட்டு அவரின் ஸ்பெஷல் ஸ்லோகன் "அப்படித்தான் வெளங்கிக்கணும்" என்று விளங்கிக் கொண்டதற்கு நன்றி. வ.வ.ச.வை தெரியாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. அன்றும் தெரியும் இன்றும் தெரியும் இதற்கு முஹாபலா தேவையில்லை. ஒவ்வொறு வார்த்தையையும் யோசித்து அல்லாஹ் பார்க்கி்ன்றான் என்ற அச்சத்தோடுதான் எழுதுகிறோம். உங்களை விட அதிக தவ்ஹீது பிடிப்போடு உள்ளோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. ஆனால், அது அல்லாஹ்விற்கு தெரியும். வஸ்ஸலாம்.

இஸ்லாமிய வங்கியியல் - டாக்டர் பட்டத்துடன் த.மு.மு.க தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தங்கள் பி.எச்.டி பட்ட படிப்பை முடித்து விட்டார்கள். அல்லாஹு அக்பர். 29/04/2008 அன்று சென்னை புதுக் கல்லூரியின் அரங்கத்தில் நேர்முகத் தேர்வு இனிதே நடந்து முடிந்தது, கல்வியாளர்கள் 100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு, பலரும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.


பட்டப் படிப்பின் தலைப்பு : இஸ்லாமிய வங்கிகளின் சேவையின் தரம் பற்றிய ஒரு தெளிவான ஆய்வு. இந்தப் புது டாக்டர் பட்டத்துடன் த.மு.மு.க தலைவரது சமுதாயப் பணிகள் மென்மேலும் சிறப்பிக்க இந்த குவைத் - மண்டலம் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறது.


வஸ்ஸலாம்
தமுமுக-குவைத் மண்டலம்
அமானுல்லாஹ் -தலைவர்-7493869
ஷா நவாஸ்- செயலாளர்-9147292
ஃபஜ்லுர்ரஹ்மான் - பொருளாளர்-9369743