இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 02, 2009

தமிழகமே திரண்டு வரட்டும்..!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஏக்கத்தை நீக்க, கண்ணீரைத் துடைக்க, புதிய வரலாறு படைக்க தாம்பரத்திற்குத் தமிழகமே திரண்டு வரட்டும்.

தமிழக மக்களின் சுகத் துக்கங்களில் பங்குகொண்டு வீரியத்துடன் செயலாற்றும் தமுமுகவிற்கு தமிழக அரசியல் வானில் திருப்புமுனைக்குரிய சிறப்பிடம் உண்டு. தமிழக அரசியல் அரங்கில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமுமுக உருவான 13 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
தமுமுக எனும் சமூக விழிப்புணர்வு இயக்கம் அரசியல், சமூக, மார்க்கத் தளங்களில் வெற்றித்தடத்தைப் பதித்தது எனினும் தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் ஒரு பெரும் வெற்றிடம் ஒன்று நீடித்தவண்ணம் இருந்தது.
இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றிப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியல் கட்சி தேவை என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்கüலும் பரவி இருந்தது. யாதொரு பலனும் கருதாது, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் உறக்கம் இல்லாது, கடமையாற்றத் தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு தூய்மையான அரசியல் இயக்கம் வராதா என ஏங்கியதற்கு விடை தரும் விதமாக தமுமுக எனும் மக்கள் இயக்கம் தனது அரவணைப்புடன் அரசியல் கட்சி ஒன்றைத் தோற்று விப்பதற்கான அறிவிப்பை வெüயிட்டிருக்கிறது.
தமுமுகவின் அரசியல் பிரிவிற்கான பிரகடனம் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.
வெற்றிடத்தை நிரப்புவது என்பது தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும் அல்ல, உலகுக்கு ஒரு அரசியல் முன்மாதிரியை உருவாக்கும் விதமாக தமுமுகவின் அரசியல் பிரிவு அரங்கேற இருக்கிறது.
அரசியல் பிரிவு தொடங்குவதற்கு முன்பாக தமுமுக தலைவர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக்குழு தமுமுகவின் உயர்மட்டக் குழுவிடம் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில் 'மனிதநேய மக்கள் கட்சி' மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமரவிருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.
அரசியல் தூய்மையையும், கூர்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து நிலைத்த புகழ்பெற்ற கலிபாக்கள் அபூபக்கர், உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சி, நிர்வாகத் திறமை கடைக்கோடி குடிமகனுக்கும் சமநீதி வழங்கியது. காந்தியடிகள் கூடக் கனவு கண்ட ஆட்சி முறை அது. அத்துணை சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்கüன் வழிமுறையைப் பின்பற்றி அரசியல் நெறி பேண மனிதநேய மக்கள் கட்சி (M.M.K.) சூளுரைக்கிறது.
அரசியலில் புதிய பாடத்தை இந்தத்தேசத்துக்குக் கற்பித்துத்தர தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி தயாராக இருக்கிறது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையென அறிஞர் அல் மவாரிதி கூறியதைப் போல மார்க்கத்தை நெஞ்சில் ஏற்றி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதைச் செயல்ரீதியாக எடுத்துக்காட்டும் மக்கள் பிரதிநிதிகளை இன்ஷா அல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கவிருக்கின்றது,
அரசியல் என்பது ஒரு தீமை. அரசியல் வாதி என்பவர் முறைகேடுகüன் மொத்த உருவம் என்ற கற்பிதங்களை உடைத் தெறியும் விதமாக அரசியல்வாதி என்பவர் இறைவனுக்கு நெருக்கமாகித் தன்னையும் தனது மக்களையும் தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வார், சிறந்த மக்கள் கூட்டத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வழங்கும் இன்ஷாஅல்லாஹ்.
1995 ஆகஸ்ட் 25ஆம் தேதி தடா என்னும் கொடும் சட்டத்தை எதிர்த்து தமுமுக செறுகளம் கண்டது. அஞ்சிய காகிதப் புலிகள் வாயடைத்து நிற்க, திரளான முஸ்லிம்களின் கூட்டத்துக்குத் தலைமை வகித்த தமுமுக அன்றிலிருந்து தமிழக முஸ்லிம்கüன் சமுதாயத்தின் முதல் நிலை சக்தியாக விளங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
உலகப் பயங்கரவாத இஸ்ரேலின் செயற்கைக்கோள் இந்திய மண்ணில் ஏவப்பட்ட போதும், அப்பாவி முஸ்லிம்கüன் மீது பயங்கரவாதப் பழிசுமத்திய போதும், மது என்ற கொடும் தீமை தலைவிரித்து ஆடும் போதும், கந்து வட்டி கொடுமைகளால் ஏழைப் பாட்டாளி வர்க்கம் வேதனையில் ஆழ்ந்த போதும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை போன்ற உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் அரசாங்கப் பரண்களின் தூசு படியக் கிடக்கும் போதும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் வர்க்கம் ஒன்று ஏய்க்கும் போதும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்று கூறிச் சட்டம் இயற்றும் அவைகளில் அமர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள், நசுக்கப்படும் உரிமைகள் முதலியவற்றை வாய்மூடி மவுனமாக அங்கீகரித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் மலையேறி விட்டது என்பதை நிரூபிக்கப் புறப்பட்டு வருகின்றது மனிதநேய மக்கள் கட்சி. ஒரு தூய்மையான, அறிவார்ந்த, செயல் திறன் படைத்த ஒரு வெகுஜன மக்கள் இயக்கம் ஒன்றுவந்து நம் ஏக்கத்தைத் தீர்க்காதா? நம் கண்ணீரைத் துடைக்காதா? என ஏங்கும் மக்களுக்காகப் புது யுகம் படைக்கப் புறப்பட்டிருக்கிறது தமுமுகவின் அரசியல் பிரிவு.
இந்தியாவை எழுச்சியுடன் கட்டமைக்க மனிதநேய மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது. இணைந்து பணியாற்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய வரலாற்றின் முதல் அத்தியாயம் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 7 அன்று எழுதப்படவுள்ளது. அதில் இடம்பெறத் தமிழகமே குடும்பத்துடன் திரண்டு வா என்று அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி]
மனிதநேய மக்கள் கட்சி
தொடக்கவிழா மாநாடு
நாள் பிப்ரவரி 7, 2009 (சனிக்கிழமை)
இடம் தாம்பரம், சென்னை

January 19, 2009

குண்டு வைப்போம்!

கவிதை
ரத்தம் .... எங்கும் ரத்தம்
பூக்களில் ரத்தம்
தேசியப் பாடல்களில் ரத்தம்
வைகறைக் கிரணங்கள் ரத்தம்
வெள்ளைப் புறாக்களின்அலகுகளில் ரத்தம்
புண்ணிய தீர்த்தங்களில்ரத்தம்
வேதப் புத்தகங்களில் ரத்தம்
தாய்ப் பாலில் ரத்தம்.
ரத்தவெள்ளத்தில்
கோயில்களும் பள்ளிவாயில்களும்'சர்ச்'சுக்களும் மூழ்கிவிட்டன !
எல்லாத் தெய்வங்களுக்கும் ரத்தாபிஷேகம் நடக்கிறது.
ஏனிந்த ரத்தப் பாசனம் ? இதில் எந்தப் பயிர் விளையும் ?
சிவப்பு மையால் பிழை திருத்தலாம்
சிவப்பு ரத்தத்தால் திருத்த நினைப்பது பிழையல்லவா ?
மனித தேகம் இறைவனின் நடமாடும் ஆலயம்-உயிராலயம்
அதை இடிப்பவன் எப்படி மதவாதியாவான் ?
'மிருகம்மனிதனாயிற்று' என்றார் டார்வின் !
பல மிருகங்கள்இன்னும் மனிதராகவில்லை !
மதங்கள் ரத்தக் காட்டேரிகளைத்தான் பெற்றெடுக்கும் என்றால்
....அந்த 'மதங்' களுக்குக் குண்டு வைப்போம் !
நன்றி. - 'கவிக்கோ' அப்துல்ரகுமான்

January 12, 2009

ஜனவரி 1, குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

குவைத்தில் வாழும் தமிழர் சமூகத்தில் 2009 புதிய வருடம் மாபெரும் சமூக நீதி எழுச்சியுடன் பிறந்தது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின்(IGC) சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட இந்த நிகழ்ச்சிக்கு லக்கி பிரின்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜனாப்.ஏ.சுலைமான் பாட்சா அவர்கள் தலைமை தாங்கினார். IGC மெளலவி.நசீர் அஹமது ஜமாலி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப், “சமூகப் பணியும் இஸ்லாத்தின் ஒரு முக்கிய கடமை” என்ற பொருள் தரக்கூடிய வசனங்களை ஓதி, நிகழ்ச்சி இனிதே துவக்கிவைத்தார். சகோ.நாகூர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். பேரா.சுப வீரபாண்டியன் அவர்களும், ( செயலாளர் -திராவிட இயக்க தமிழர் பேரவை) சகோ.தமீமுன் அன்ஸாரி, (தமுமுக மாநிலச் செயலாளர்) அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சுபவீ அவர்கள் தமிழ் நாட்டில் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப் பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்று கூறினார். சகோ.தமீமுன் அன்ஸாரி பேசுகையில் தமிழ் நாட்டில் இன்று ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய எழுச்சியில் குவைத் தமிழ் சமூகமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த எழுச்சி 1995 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு அரசியல் இயக்கமாக மாற இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பேரா. தாஜுத்தீன், தமிழர் சமூக நீதி பேரவை தமிழ் நாடான் அவர்களும் உரையாற்றினார்கள். TMCA செயலாளர், சகோ.அப்துல் அலீம் அவர்கள் பேசுகையில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். குவைத் தட்ப வெட்ப நிலை தீடிரென கடுமையாக மாறிய போதும் மக்கள் திரளாக வந்திருந்தது இது ஒரு புதிய சமூக எழுச்சி சுனாமியோ என்று குவைத் தமிழ் மக்கள் வியந்தனர். தலைவர் லால்குடி இக்பால் அனைவருக்கும் நன்றி கூறினார். மாலை 5.30க்கு தொடங்கி, 9.30க்கு நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

ஜனவரி 2, 2009 அன்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், குவைத் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “தேசம் நாமே என்போம்” என்ற சமூக நிகழ்ச்சி மாலை 4.00 மணிக்கு தொடங்கப் பட்டது. தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின்(TMCA) முன்னால் தலைவரும், ஃபிமா (Federation of Indian Muslim Associations) என்ற அமைப்பின் முன்னால் செயலாளருமான சகோ.டானா முஹம்மது இக்பால் அவர்கள் தலைமையில், தமுமுக-குவைத் செயலாளர்-பொறியாளர். ஷாநவாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் சூரா இஃலாஸ் ஓதி, ஏகத்துவத்தை கூற, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஊடகச் செயலாளர், சகோ.பெருங்களூர்-முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சகோ.டானா இக்பால் பாலஸ்தீனத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களின் இன்றைய அவலநிலை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். “ நமது தேசம்; நாமே காப்போம்” என்ற தலைப்பில் பேரா. சுபவீ அவர்கள் உரையாற்றினார்கள். “ வேண்டும் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் சகோ.தமீமுன் அன்ஸாரி உரையாற்றினார். சகோ.தமீம் அன்ஸாரி பாலஸ்தினப் படுகொலைகளைப் பற்றிய பேச்சு அனைவரது சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைந்தது. இறுதியில் தமுமுகவின் செயல்பாடுகள், பணிகள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியான பதில்களைக் கூறி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார். தமிழோசை சகோ.இராவணன் பேசுகையில், அடுத்த தடவை சகோ.தமீமுன் அன்ஸாரி ஒரு இந்திய அரசின் மத்திய அமைச்சராக குவைத்திற்கு வரவேண்டும் என்று கூறியது, குவைத்தில் தனது 4 நாட்கள் நிகழ்ச்சிகளில் அன்ஸாரி ஏற்படுத்திய தாக்கத்தை அனைவராலும் உணர முடிந்தது.
தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் சார்பாக ரூபாய் 10000/-க்கான காசோலையை ஃபிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக சகோ.பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார். சகோ.விட்டுக்கட்டி மஸ்தான் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். விடுதலைச் சிறுத்தைகள் - குவைத் பிரிவின் சார்பாக இரு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு, தொல்.திருமாவளவன் எழுதிய ஒரு புத்தகம் நினைவு பரிசாகக் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகளின் இறுதி தொகுப்பாக புரவலர் எஸ்.கே.எஸ் அவர்கள் குவைத் வாழ் தமிழ் சமுதாயம் இந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மக்களை சிந்தனையை தூண்டும் விதமாக பேசினார். மக்கள் தொடர்பாளர், சகோ.தஞ்சை-அக்பர் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி 4.15 - 8.40 வரை இனிதே நடந்து முடிந்தது.
ஆதரவாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பேரா.சுப வீர பாண்டியனுக்கு சகோ.அன்வர் அலி - தமிழர் சமூக நீதிப் பேரவை.
தமீமுன் அன்ஸாரிக்கு தமுமுக குவைத்தின் பொருளாளர் ஃபஜ்லுர் ரஹ்மான்
சாதியா நிறுவனத்தார்க்கு சகோ.இஸ்மாயில் - செயலாளர் துணை மண்டலம்.
TVS ஹைதர் அலிக்கு துணை மண்டலம் பொருளாளர் அப்துல் அஜீஸ்
டானா முஹம்மது இக்பாலுக்கு துணைமண்டல செயலாளர் - அப்துல்வாஹி
த் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு குவைத்திலுள்ள பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும், குறிப்பாக இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), மனித நீதிப் பாசறை (MNP), குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முஸ்லிம் நல அமைப்பு, Net Achievers Forum (NAF), PACE, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் சமூக நீதி பேரவை, வளநாடன் அறக்கட்டளை, பெரியார் நூலகம், தமிழோசை கவிஞர் மன்றம், போன்றோரும் இன்னும் பல அமைபினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரு தின நிகழ்ச்சிகளுக்கும் பேரதரவு அளித்த TVS நிறுவனங்களின் MD, சகோ.ஹைதர் அலி, TVS நிறுவனத்தின் மேனேஜர்.சகோ.அலாவுத்தீன், புரவலர் லக்கி பிரஸ். சுலைமான், அல்-ஷாஃபி ரெஸ்டாரன்ட் உரிமையாளர். டெல்லி பாஷா, TMCA தலைவர். அல்மாஸ் முஸ்தஃபா, சாதியா - அல்-யஸ்ரா ஃபுட்ஸ் மற்றும் அனைத்து தமிழ் நல்லுள்ளங்களுக் கும் தமுமுக-குவைத்மண்டலத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

December 17, 2008

சமூக நீதி கருத்தரங்கம்

அனைவரும் வாரீர்!!
தீவிரவாதமும் பயங்கரவாதமும்.
(நிழலும் நிஜமும்)
பேரா. சுப. வீரபாண்டியன்.
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கி யிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.)
மனித குலத்தின் இன்றைய சவால்கள்
சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
இடம்: ஜம் இய்யதுல் இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்
நேரம்: மாலை 5:15, ஜனவரி 1, 2009.
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சி இது.
தமிழகத்திலும் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாகவும், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது
அடுத்த நாளும் (வெள்ளிக் கிழமை) தமுமுக, குவைத் மண்டலத்தின் சார்பாக அதே அரங்கத்தில் மற்றும்ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

புஷ்ஷை செருப்பால்..!

எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...! தோழனே! இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..! தோழனே!உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..! இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!தோழனே!நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!தோழனே! பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!தோழனே! எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை பின்புறம் தேசீய கொடி இருக்குமல்லவா? தோழனே! உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
தமிழச்சி

November 15, 2008

தயாராகுங்கள்..! பாபர் மஸ்ஜித் போராட்டம்

தலைவரின் சிறப்புப் பேட்டி

குவைத்தில் தமுமுக மங்காஃப் கிளை துவக்க விழா

மாநில தலைவர் பேரா. டாக்டர் M.H.ஜவாஹிருலலா அவர்கள் குவைத்தில் த மு மு க நிர்வாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்கு பிறகு முதன் முறையாக 31-10-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஃபாஹில் மண்டல தமுமுக சார்பாக மாபெரும் மஙகாஃப் கிளை துவக்க விழா மஙகாஃப் தீன் மெஸ்ஸில் சிறப்பாக நடை பெற்றது.
குவைத் மண்டல துணை தலைவர் A.K.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் J. சித்திக் அஹ்மத், அப்துல் அஜீஸ், இகபால் அஹ்மத், சலீம் ரப்பானி, நசீர் அஹ்மத் ஜமாலி, சாகுல் ஹமீது பிர்தௌசி ஆகியோர் உரையாற்றினார்கள். மஙகாஃப் கிளையின் நிர்வாகிகளாக தலைவர் J.இக்பால் அஹ்மத் திருச்சி செயலாளர் ஹஜ்ஜப்பா மேலபாளையம் தேர்ந்தெடுக்கபட்டனர்.
இந்தியா திரும்ப விமான டிக்கெட் நிதியுதவி கேடு வந்த அதிரை சகோதரர் அப்துல் மாலிக் என்பவருக்கு கூட்டத்தில் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

November 12, 2008

மார்க்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

கடந்த 9-11-2008 அன்று திருச்சி குத்பிஷாநகர் கிளை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சகோ. கோவை. எஸ். அய்யூப் அவர்களின் சிறப்புரை நடந்தது.

November 05, 2008

சேலத்தில் முதல் முதலில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!

எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், தமுமுக, சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை, 6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம் களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச் செயலர். ஹைதர்அலி பேசுகையில், நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக, அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி, மாற்றி கொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர். மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில துனை செயலாளர் கோவை சாதிக், தலைமைகழக பேச்சாளர் ரபிக், மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன், மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.