இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label கவிக்கோ குண்டு தமுமுக குவைத். Show all posts
Showing posts with label கவிக்கோ குண்டு தமுமுக குவைத். Show all posts

January 19, 2009

குண்டு வைப்போம்!

கவிதை
ரத்தம் .... எங்கும் ரத்தம்
பூக்களில் ரத்தம்
தேசியப் பாடல்களில் ரத்தம்
வைகறைக் கிரணங்கள் ரத்தம்
வெள்ளைப் புறாக்களின்அலகுகளில் ரத்தம்
புண்ணிய தீர்த்தங்களில்ரத்தம்
வேதப் புத்தகங்களில் ரத்தம்
தாய்ப் பாலில் ரத்தம்.
ரத்தவெள்ளத்தில்
கோயில்களும் பள்ளிவாயில்களும்'சர்ச்'சுக்களும் மூழ்கிவிட்டன !
எல்லாத் தெய்வங்களுக்கும் ரத்தாபிஷேகம் நடக்கிறது.
ஏனிந்த ரத்தப் பாசனம் ? இதில் எந்தப் பயிர் விளையும் ?
சிவப்பு மையால் பிழை திருத்தலாம்
சிவப்பு ரத்தத்தால் திருத்த நினைப்பது பிழையல்லவா ?
மனித தேகம் இறைவனின் நடமாடும் ஆலயம்-உயிராலயம்
அதை இடிப்பவன் எப்படி மதவாதியாவான் ?
'மிருகம்மனிதனாயிற்று' என்றார் டார்வின் !
பல மிருகங்கள்இன்னும் மனிதராகவில்லை !
மதங்கள் ரத்தக் காட்டேரிகளைத்தான் பெற்றெடுக்கும் என்றால்
....அந்த 'மதங்' களுக்குக் குண்டு வைப்போம் !
நன்றி. - 'கவிக்கோ' அப்துல்ரகுமான்