குவைத்தில் வாழும் தமிழர் சமூகத்தில் 2009 புதிய வருடம் மாபெரும் சமூக நீதி எழுச்சியுடன் பிறந்தது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின்(IGC) சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட இந்த நிகழ்ச்சிக்கு லக்கி பிரின்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜனாப்.ஏ.சுலைமான் பாட்சா அவர்கள் தலைமை தாங்கினார். IGC மெளலவி.நசீர் அஹமது ஜமாலி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப், “சமூகப் பணியும் இஸ்லாத்தின் ஒரு முக்கிய கடமை” என்ற பொருள் தரக்கூடிய வசனங்களை ஓதி, நிகழ்ச்சி இனிதே துவக்கிவைத்தார். சகோ.நாகூர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். பேரா.சுப வீரபாண்டியன் அவர்களும், ( செயலாளர் -திராவிட இயக்க தமிழர் பேரவை) சகோ.தமீமுன் அன்ஸாரி, (தமுமுக மாநிலச் செயலாளர்) அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சுபவீ அவர்கள் தமிழ் நாட்டில் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப் பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்று கூறினார். சகோ.தமீமுன் அன்ஸாரி பேசுகையில் தமிழ் நாட்டில் இன்று ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய எழுச்சியில் குவைத் தமிழ் சமூகமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த எழுச்சி 1995 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு அரசியல் இயக்கமாக மாற இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பேரா. தாஜுத்தீன், தமிழர் சமூக நீதி பேரவை தமிழ் நாடான் அவர்களும் உரையாற்றினார்கள். TMCA செயலாளர், சகோ.அப்துல் அலீம் அவர்கள் பேசுகையில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். குவைத் தட்ப வெட்ப நிலை தீடிரென கடுமையாக மாறிய போதும் மக்கள் திரளாக வந்திருந்தது இது ஒரு புதிய சமூக எழுச்சி சுனாமியோ என்று குவைத் தமிழ் மக்கள் வியந்தனர். தலைவர் லால்குடி இக்பால் அனைவருக்கும் நன்றி கூறினார். மாலை 5.30க்கு தொடங்கி, 9.30க்கு நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
ஜனவரி 2, 2009 அன்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், குவைத் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “தேசம் நாமே என்போம்” என்ற சமூக நிகழ்ச்சி மாலை 4.00 மணிக்கு தொடங்கப் பட்டது. தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின்(TMCA) முன்னால் தலைவரும், ஃபிமா (Federation of Indian Muslim Associations) என்ற அமைப்பின் முன்னால் செயலாளருமான சகோ.டானா முஹம்மது இக்பால் அவர்கள் தலைமையில், தமுமுக-குவைத் செயலாளர்-பொறியாளர். ஷாநவாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் சூரா இஃலாஸ் ஓதி, ஏகத்துவத்தை கூற, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஊடகச் செயலாளர், சகோ.பெருங்களூர்-முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சகோ.டானா இக்பால் பாலஸ்தீனத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களின் இன்றைய அவலநிலை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். “ நமது தேசம்; நாமே காப்போம்” என்ற தலைப்பில் பேரா. சுபவீ அவர்கள் உரையாற்றினார்கள். “ வேண்டும் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் சகோ.தமீமுன் அன்ஸாரி உரையாற்றினார். சகோ.தமீம் அன்ஸாரி பாலஸ்தினப் படுகொலைகளைப் பற்றிய பேச்சு அனைவரது சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைந்தது. இறுதியில் தமுமுகவின் செயல்பாடுகள், பணிகள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியான பதில்களைக் கூறி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார். தமிழோசை சகோ.இராவணன் பேசுகையில், அடுத்த தடவை சகோ.தமீமுன் அன்ஸாரி ஒரு இந்திய அரசின் மத்திய அமைச்சராக குவைத்திற்கு வரவேண்டும் என்று கூறியது, குவைத்தில் தனது 4 நாட்கள் நிகழ்ச்சிகளில் அன்ஸாரி ஏற்படுத்திய தாக்கத்தை அனைவராலும் உணர முடிந்தது.
தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை-குவைத் சார்பாக ரூபாய் 10000/-க்கான காசோலையை ஃபிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக சகோ.பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார். சகோ.விட்டுக்கட்டி மஸ்தான் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். விடுதலைச் சிறுத்தைகள் - குவைத் பிரிவின் சார்பாக இரு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு, தொல்.திருமாவளவன் எழுதிய ஒரு புத்தகம் நினைவு பரிசாகக் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகளின் இறுதி தொகுப்பாக புரவலர் எஸ்.கே.எஸ் அவர்கள் குவைத் வாழ் தமிழ் சமுதாயம் இந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மக்களை சிந்தனையை தூண்டும் விதமாக பேசினார். மக்கள் தொடர்பாளர், சகோ.தஞ்சை-அக்பர் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி 4.15 - 8.40 வரை இனிதே நடந்து முடிந்தது.
ஆதரவாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஆதரவாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பேரா.சுப வீர பாண்டியனுக்கு சகோ.அன்வர் அலி - தமிழர் சமூக நீதிப் பேரவை.
தமீமுன் அன்ஸாரிக்கு தமுமுக குவைத்தின் பொருளாளர் ஃபஜ்லுர் ரஹ்மான்
சாதியா நிறுவனத்தார்க்கு சகோ.இஸ்மாயில் - செயலாளர் துணை மண்டலம்.
TVS ஹைதர் அலிக்கு துணை மண்டலம் பொருளாளர் அப்துல் அஜீஸ்
டானா முஹம்மது இக்பாலுக்கு துணைமண்டல செயலாளர் - அப்துல்வாஹித் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு குவைத்திலுள்ள பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும், குறிப்பாக இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), மனித நீதிப் பாசறை (MNP), குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முஸ்லிம் நல அமைப்பு, Net Achievers Forum (NAF), PACE, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் சமூக நீதி பேரவை, வளநாடன் அறக்கட்டளை, பெரியார் நூலகம், தமிழோசை கவிஞர் மன்றம், போன்றோரும் இன்னும் பல அமைபினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டானா முஹம்மது இக்பாலுக்கு துணைமண்டல செயலாளர் - அப்துல்வாஹித் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு குவைத்திலுள்ள பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும், குறிப்பாக இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), மனித நீதிப் பாசறை (MNP), குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முஸ்லிம் நல அமைப்பு, Net Achievers Forum (NAF), PACE, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் சமூக நீதி பேரவை, வளநாடன் அறக்கட்டளை, பெரியார் நூலகம், தமிழோசை கவிஞர் மன்றம், போன்றோரும் இன்னும் பல அமைபினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரு தின நிகழ்ச்சிகளுக்கும் பேரதரவு அளித்த TVS நிறுவனங்களின் MD, சகோ.ஹைதர் அலி, TVS நிறுவனத்தின் மேனேஜர்.சகோ.அலாவுத்தீன், புரவலர் லக்கி பிரஸ். சுலைமான், அல்-ஷாஃபி ரெஸ்டாரன்ட் உரிமையாளர். டெல்லி பாஷா, TMCA தலைவர். அல்மாஸ் முஸ்தஃபா, சாதியா - அல்-யஸ்ரா ஃபுட்ஸ் மற்றும் அனைத்து தமிழ் நல்லுள்ளங்களுக் கும் தமுமுக-குவைத்மண்டலத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment