இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

November 12, 2009

பாங்க் ஆப் இந்தியாவில் 1083 அதிகாரி பணியிடங்கள்

முன்னணி பொதுத் துறை பாங்குகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா 1083 அதிகாரி நிலைப் பணியிடங்களை அறிவித்துள்ளது.



ஜெனரல் பாங்கிங் ஆபிசர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பணியிடங்கள் ஸ்கேல் 1, 2 மற்றும் 3 நிலையிலானவை.
3 ஸ்கேல்களிலான பணிகளாக இருந்தாலும் பாங்க் ஆப் இந்தியா இந்த வேலை அறிவிப்பை பி.ஓ., ரெக்ரூட்மெண்ட் புராஜக்ட் 2009 என்றே பெயரிட்டுள்ளது. தகுதிகளை நவம்பர் 1, 2009 அன்று பெற்றிருக்க வேண்டும். 1083 பணியிடங்களில் முக்கிய பணி இடங்களின் விபரங்கள் இங்கே.
தகுதிகள்
ஸ்கேல் 1 ஆபிசர்

காலியிடங்கள் 460
21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பருக்கு முன்னுரிமை தரப்படும்.
ஸ்கேல் 2 ஆபிசர்
காலியிடங்கள் 386
21 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது பட்ட மேற்படிப்பில் 50 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., போன்ற தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்கேல் 3 ஆபிசர்
காலியிடங்கள் 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது பட்ட மேற்படிப்பில் 50 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., போன்ற தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பணிகளுக்குமே சிறப்பாக கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் பகுதிகளைக் கொண்டிருக்கும். அப்ஜக்டிவ் பகுதியில் ரீசனிங், கணிதம், பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் ஆகிய 3 பகுதிகளில் முறையே 100, 50 மற்றும் 50 கேள்விகள் இடம் பெறும். இவற்றுக்கு மதிப்பெண்கள் முறையே 150, 75 மற்றும் 75 என தரப்படும். மொத்தம் 2 மணி நேரத்தில் இந்த 200 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் தனித்தனியாக பாஸ் செய்வதுடன் மெரிட் பட்டியலிலும் இடம் பெறும் வகையில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும். தவறாக பதிலளித்தால் நெகடிவ் மதிப்பெண்கள் முறையில் பெற்றிருக்கும் மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும்.
விரிவாக விடையளிக்கும் பகுதியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் பதிலளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொன்றும் தனித்தனியாக மாற்று கேள்வியையும் கொண்டிருக்கும். இந்தப் பகுதியில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணைப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் 45 சதவீதம் எடுத்தால் போதும். இப்பகுதிக்கு 100 மதிப்பெண்கள். அப்ஜக்டிவ் தேர்வுக்கு 300, விரிவாக விடையளிக்கும் பகுதிக்கு 100 மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 100 ஆக மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நீங்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து பணி வாய்ப்பு தரப்படும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.400. ஏதாவது ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.bankofindia.co.in என்னும் இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். நவம்பர் 30க்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தளத்தில் ஆன்லைன் விண்ணப்ப லிங்க்கிற்குச் சென்று முதலில் சலானை டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்பு கட்டணத்தை பாங்க் ஆப் இந்தியாவின் எந்தக் கிளையிலும் செலுத்தி டிரான்சாக்ஷன் ஐ.டி., ஒன்றைப் பெற்று தயாராக வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். தற்போது பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரியைப் பெற்றிருப்பதும் அவசியம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்கிடைக்கும் நகலை பிரிண்ட் செய்து எடுத்துக் கொண்டு போட்டோவை ஒட்ட வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை இணைத்து நீங்களே வைத்துக் கொள்ள வேண்டும். தபாலில் அனுப்ப வேண்டாம். தேர்வுக்கு செல்லும் போது அல்லது நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எடுத்துச் சென்றால் போதும்.

1 comment:

Tamil Home Recipes said...

நல்ல பதிவு