இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 29, 2007

மசூதிக்குள் இறந்த பன்றி வீச்சு - சந்தேகம் பணபாலு

தாராபுரம் நகராட்சி கண்ணன் நகர் பைபாஸ் ரோட்டில் மசூதி உள்ளது. நேற்று அதிகாலையில் தொழுகை நடத்த, மசூதி கேட்டை திறந்தனர். அங்கு இறந்த பன்றி கிடந்தது. தகவல் பரவியதும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டனர்.

தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மசூதிக்குள் இருந்த பன்றி உடலை அப்புறப்படுத்தினார். மசூதி பொறுப்பாளர், "பன்றியை மசூதிக்குள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மசூதிக்குள் பன்றி வீசியதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் சாரைசாரையாக வந்து பார்த்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமாக இருந்தது.

அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்க கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் பணபாலு: தென்னமரத்தில தேள் கொட்ட பனை மரத்தில நெறி கட்டுச்சாம். மசூதிக்குள் பன்றிய வீசிட்டு கோயில பாதுகாக்குறாங்களாம்.

December 26, 2007

பராக்.... பராக்.... நரமாமிச நரேந்திரமோடி பராக்

சபர்மதி ரயிலை எரித்த.... அந்த பழியை முஸ்லிம்கள் மீது திணித்த.... கர்பிணி வயிற்றை கிழித்த.... உள்ளிருந்த சிசுவை கொன்ற நரமாமிச வேட்டையன் நரேந்திர மோடி பராக்
சாத்தானின் வருகையால் சந்தோஷப்பட்டவர்கள்
திருச்சியில் பா.ஜ., கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்குஜராத் சட்டசபைத் தேர்தலில் பெருபான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததை, திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். திருச்சி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கண்ணன் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள வழிவிடு வேல்முருகன் கோயில் அருகே கூடிய பாரதிய ஜனதாக் கட்சியினர் வெடி வெடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஜங்சன் பஸ்ஸ்டாண்ட் சென்ற கட்சியினர் அங்கும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் டி.வி.எஸ்., டோல்கேட், பாலக்கரை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பாரதிய ஜனதாவினர் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சியின் மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜப்பா ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் திருமால், சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், மகளிரணி பொறுப்பாளர் அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., கொண்டாட்டம் சேலம்: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை சேலம் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக நரேந்திரமோடி முதல்வராக பொறுப்பேற்கிறார்.சேலத்தில் தலைமை தபால் அலுவலகம் முன் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் கூடினர். அங்கு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

சபர்மதி ரயிலில் இறந்து போன மோடியின் சூழ்ச்சி தெரியாத அப்பாவி பாஜக வினரே இந்த வெற்றிக்கான பலிகடாக்கள். இன்று பட்டாசு வெடித்து பரவசப்படும் பாஜகவினர்களே மோடியின் அற்ப சந்தோஷத்திற்காக நாளை நீங்களும் பலிகடாவாக்கப்படலாம்.

தெஹல்கா கண்டறிந்த வீடியோ ஆதாரங்களை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வெகுஜன மக்களால் படிக்கப்படும் எந்த நாளிதழிலும் வெளியிடவுமில்லை. குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்துவெறி பிடித்த பாஸிஸ சக்திகளின் வெறியாட்டத்தின் போது அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எல்லையோர முகாம்களிலேயே தங்கி வருகின்றனர். காங்கிரஸும், பாஜகவும் பிரச்சாரம் செய்தது முழுக்க, முழுக்க பாஸிஸ வெறிபிடித்த இந்துக்களிடம் மட்டுமே. தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் மட்டுமே. ஊடகங்களின் வீடியோ பதிவுகளுக்காக இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்த இந்துக்களையே காட்டியுள்ளனர். மூன்று நாட்கள் அரசு இயந்திரத்தையே நிறுத்திவைத்து சிறுபான்மையினர் மீது கொலை வெறித்தாக்குதலை தனது தலைமையிலேயே நடத்திய அராஜக நரமாமிச நரேந்திரமோடிக்கு தேர்தலில் வெற்றி வெற்றியடைந்தது ஒரு வீரச்செயலே அல்ல.

அதுமட்டுமின்றி தேர்தல் மட்டுமே ஒரு தனி மனிதனை, ஒரு மனித மிருகத்தை எடை போடும் அளவீட்டுக்கருவியாகாது. ஏனென்றால், இந்தியாவில் தேர்தல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தேர்தலுக்காகவும், தேர்தல் நேரங்களிலும் நடைபெற்று வந்த அராஜகமும், வன்முறைகளும், கலவரங்களுமே ஜனநாயகத்தை விலைபேசுகின்றது. மேலும் தேர்தல் தினத்தன்று பிற்பகல் நேரங்களே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. அமைதிப்பூங்காவான தமிழகத்தின் தேர்தல்களங்களே அனலை பறக்கவிடும் போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளிருக்கும் சிசுவை தீயிலிட்டதையும், கணவர் மற்றும் தந்தை கண்ணெதிரே பெண்களைக் கதற கதற கற்பழித்ததையும் உலகுக்கே மறைத்ததையும், உள்ளுக்குள் பெருமை பொங்க புளங்காங்கிதம் அடைந்து பரவசப்பட்டு ஆனந்தத்தில் கொக்கரிக்கும் கொடுங்கோலர்கள் வாழும் குஜராத்தின் தேர்தல்களம் என்ன பாடுபட்டதோ தெரியவில்லை. இவர்களின் இந்த சந்தோஷம் அரவாணி கற்பம் தரித்ததைப்போல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல்தான் உண்மை ஜனநாயகம் மோடிக்கு ஒருநாளும் வெற்றியைத் தராது என்பது புத்தியில்லாதவனும் விளங்கிக்கொள்ளும் நிதர்சனம். அதைவிடுத்து இந்த வெற்றிக்காக இனிப்பு வழங்குவது, வெடி வெடிப்பது எல்லாம் அரவாணியின் ஆதாரமில்லா சந்தோஷத்தை தான் காட்டுகிறதே தவிர வேறில்லை. அல்லாஹ் அறிவீனர்களின் கண்களை திறக்கட்டும்.

December 17, 2007

கலைஞர் டிவியில் நன்றி அறிவிப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,



19-12-2007 புதன் 20-12-2007 வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கு கலைஞர் டி.வி.யை பார்க்கத் தவறாதீர்கள். 2007 நவம்பர் 24 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஒளிபரப்பாகிறது.

தமுமுக - குவைத் மண்டலத்தின் வாழ்த்துக்கள்

December 13, 2007

மீண்டும்....கொடுத்த வாக்கை காப்பற்றிய முதல்வர்


... யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ,(அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (3:76 )

December 12, 2007

குவைத்தில் நடந்த கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...,

பாபர் மசூதி வழக்கு நிலுவை மற்றும் இலுவையை கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்த தமுமுக ஏற்பாடு செய்தது. அதேபோல், குவைத்திலும் மண்டல தலைமையும் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேடையில் வீற்றிருக்கும் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ், மண்டலச்செயலாளர் சகோ. ஷநவாஸ் மற்றம் சிறப்பு விருந்தினர் தோழர். ஆர். கே. சரவணன்-(CPI).












குவைத் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் வரவேற்புடன் துவங்கியது கண்டனக்கூட்டம்.

மண்டலச்செயலாளர் சகோ. ஷாநவாஸ் அவர்களின் தலைமையுரையின் போது..

பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

துணைச்செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் கண்டனத்தை முன் மொழிகிறார்.

கண்டனக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.





இணைச்செயலாளர் சகோ. முபாரக்அலி அவர்களின் நன்றியுரையுடன் கண்டனக்கூட்டம் இனிதே நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்...,