தாராபுரம் நகராட்சி கண்ணன் நகர் பைபாஸ் ரோட்டில் மசூதி உள்ளது. நேற்று அதிகாலையில் தொழுகை நடத்த, மசூதி கேட்டை திறந்தனர். அங்கு இறந்த பன்றி கிடந்தது. தகவல் பரவியதும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டனர்.
தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மசூதிக்குள் இருந்த பன்றி உடலை அப்புறப்படுத்தினார். மசூதி பொறுப்பாளர், "பன்றியை மசூதிக்குள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மசூதிக்குள் பன்றி வீசியதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் சாரைசாரையாக வந்து பார்த்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமாக இருந்தது.
அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்க கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் பணபாலு: தென்னமரத்தில தேள் கொட்ட பனை மரத்தில நெறி கட்டுச்சாம். மசூதிக்குள் பன்றிய வீசிட்டு கோயில பாதுகாக்குறாங்களாம்.