இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 21, 2010

திருச்சி 28&வது வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம்


தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி 28&வது வார்டுக்கான தேர்தலில் திமுகவும், மனிதநேய மக்கள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. அங்கு மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிபெறும் நிலையில் உள்ளதால், ஆளும் திமுக வினரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.அமைச்சர் நேரு களத்துக்கு நேரடியாக வரக்கூடிய அளவுக்கு நிலை ஏற்பட்டுவிட்டதால், திமுகவினர் வழக்கம்போல் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர். ஜூலை 18 அன்று இரவு சுமார் 200 திமுகவினர், ரவுடிகளின் துணையோடு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வேட்டி, புடவை, பணம் என வினியோகிக்க முயன்றபோது, அப்பகுதி பொது மக்கள் திமுகவினரை ஓட, ஓட விரட்டியுள்ளனர். இதனால் கொதித்துப்போன திமுகவினர், அப்பகுதி முஸ்லிம்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அப்பகுதி ஜமாத்தினரே அரண்டு போகும் அளவுக்கு திமுகவினரின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனிடையே திருச்சி ஏர்போர்ட் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி பகுருதீன் அவர்கள் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, அவரது காரை உடைத்துள்ளனர். படுகாயமடைந்த பகுருதீனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு பிரச்சார களத்தில் இருந்த மாநில த.மு.மு.க துணைச் செயலாளர் கோவை.சாதிக் தலைமையில் த.மு.மு.க, மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ம.ம.கவின் திருச்சி மாவட்ட செயலாளர் பஷீரின் வீட்டுக் கதவையும் திமுகவினர் தட்டி பெண்களை மிரட்டியுள்ளனர். திமுகவினர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்த செய்தி பரவியதால் திருச்சி பதற்றமானது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. உடனடியாக உதவி ஆணையாளரிடம் சென்று மமகவின் சார்பில் முறையிடப்பட்டது. அதை பட்டும்படாமல் கேட்டுக்கொண்டவர், எந்த பதிலும் சொல்லாமல், அமைச்சர் நேருவுக்கு விசுவாசம் காட்டும் விதமாக, விடைபெற்று சென்றிருக்கிறார். பகுருதீனை தாக்கிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை.

ஆனால் மமக மாவட்ட செயலாளர் பஷீர், த.மு.மு.க மாவட்ட செயலாளர் ஃபைஸ், தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்ட 75 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நிலைமையை நேரில் அறிய மமக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது திருச்சிக்கு சென்றார். தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த திமுகவினரை அடையாளம் காட்டியும் கூட அவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

நல்ல தேர்தல்! நல்ல ஜனநாயகம்! நல்ல போலீஸ்!

July 20, 2010

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது. இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது.

இந்நிலையில் பயந்துபோன திமுகவினர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர். இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணியற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ... www.tmmk.in

28-வது வார்டு இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா (அ.தி.மு.க.) இறந்ததை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு இறுதிகட்ட பிரசாரம் களை கட்டி உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட வில்லை. தேமுதிகவும் போட்டியிடவில்லை. எனவே இடைத்தேர்தல் விறுவிறுப்பு இருக்காது என கூறப்பட்டது.

ஆனால் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக த.மு.மு.கவினரும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் கடைசி கட்ட பிரசாரம் களை கட்டியது.

நாளை மறுநாள் (22-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அரியமங்களம் மாநகராட்சி காமராஜர் நடுநிலைப்பள்ளியிலும், எஸ்.ஐ.டி. பள்ளியிலும் 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆண்களுக்கு 3 வாக்குச்சாவடிகளும் பெண்களுக்கு 3 வாக்குச்சாவடியும், 2 பொது வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7095 வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காலை 7மணி முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வைக்கப் படுகிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி த.மு.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவின் போது வன்முறை நடக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே வாக்குச்சாவடிகளில் முக்கிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்படுகிறார்கள். ஓட்டுப்பதிவு ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

July 17, 2010

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.