இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 01, 2009

மனித நேய மக்கள் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் கேட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது. இதை ஏற்க மனித நேய மக்கள் கட்சி மறுத்து விட்டது. இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறவில்லை.

கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணிகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியை நீடிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழில் அதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் அந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்கள்.

தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: www.maalaimalar.com

No comments: