இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 23, 2009

பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு

15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.--Posted By முகவைத்தமிழன்

April 13, 2009

தேர்தலுக்கு தயார்..!


உழைக்கக் காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கையிலே, உழைப்பிற்கு கூலி கொடுக்க அல்லாஹ் தயாராய் இருக்கும் நிலையிலே சலசலப்புகளும், முக்கல் முனகல்களும் நம்மை என்ன செய்துவிடும்.
வெற்றிடங்கள் நிரம்பிவிடும்..!
வெற்றிகள் தேடிவரும்..!!
இன்ஷாஅல்லாஹ்

April 10, 2009

ம ம க போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.

விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்.....

இறைவனுக்கே புகழ் அனைத்தும்..!

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.
நீதியின் குரல்Date 10-04-2009

April 01, 2009

மனித நேய மக்கள் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் கேட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது. இதை ஏற்க மனித நேய மக்கள் கட்சி மறுத்து விட்டது. இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறவில்லை.

கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணிகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியை நீடிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழில் அதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் அந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்கள்.

தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: www.maalaimalar.com