தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ்பானு, "இத்தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசுயலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என நான் கருதவில்லை" எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முஸ்லீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.
இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று பொராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முஸ்லீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவைகள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்" என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.
குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ்பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?
இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப்போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றக்ஙள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங்பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
ஆனால், இந்தியக் 'குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ்பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.

நன்றி : புதிய ஜனநாயகம் பிப்ரவரி/2008
No comments:
Post a Comment