ராணுவ பணிக்கான ஆள்தெரிவு முகாம் திருச்சியில் ஜனவ 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலக ஏ.ஆர்.ஓ., ஹக்மிசந்த் வெளியிட்ட அறிக்கை: திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் மூலம் ராணுவத்தில் தொழில்நுட்பம், நர்சிங் உதவியாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் மத்திய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள கருடா லைன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த பெரம்பலுõர், அரியலுõர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துõத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலை சேர்ந்த தகுதியுடையோர் பங்கேற்கலாம். படைவீரர் (தொழில்நுட்பம்) பணியில் சேர விரும்புவோர் ப்ளஸ்2 வில் இயற்பியல், வேதியியல், கணிதவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது ஆறு மாதத்தில் இருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜனவரி 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 24, 25 தேதிகளில் உடல் தகுதி தேர்வும் நடக்கும்.படைவீரர் (நர்சிங் உதவியாளர்) பணியில் சேர விரும்புவோர் பத்தாம் மற்றும் ப்ளஸ் 2 வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலம், உயிரியல், விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்ணும், சராசரியாக 40 சத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் 17 வயது ஆறு மாதத்தில் இருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்2 வில் தொழிற்கல்வி படித்தவர்கள் பங்கு பெற முடியாது. 18 வயதுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஃபோட்டோ ஒட்டி பெற்றோரின் ஒப்புதல் கையெழுத்து மற்றும் ரப்பர் ஸ்டாம்பு பெற வேண்டும். 21 வயதுக்குள் திருமணமானவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவராவர்."அனைத்து சான்றிதழ்களிலும் உரிய அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் ராணுவ தேர்வுக்கு வழங்கப்படுகிறது' என எழுதி கையெழுத்து பெற்று கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ஏற்கப்பட மாட்டாது. பங்கேற்போர் காலை 5.30 மணிக்குள் தேர்வு நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். தாமதமாக வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து விண்ணப்பதாரரும் சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் இரண்டு சான்றொப்பம் பெற்ற நகல்களுடன் வர வேண்டும்.ராணுவத்தில் சேரும் தேர்வுக்கு இடைத்தரகர்களுக்கோ, மற்றவர்களுக்கோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். போலி சான்றிதழ் கொடுப்பதும், தவறான தகவல் கூறுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment