இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label முஸ்லிம் லீக் காதர் மைதீன் பாசிச தமுமுக. Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக் காதர் மைதீன் பாசிச தமுமுக. Show all posts

October 15, 2008

மன்னிப்பு கேட்டார் காதர் மைதீன்!

பாசிச ஏடான `துக்ளக்’ வார இதழுக்கு முஸ்லிம் லீக் தலைவரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம். காதர் மைதீன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். தமிழக முஸ்லிம்களின் மாபெரும் இயக்கமான தமுமுகவை தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டு, காழ்ப்புணர்ச் சியுடன் கூடிய காதர் மைதீனின் நேர்காணல் 27.8.08 தேதியிட்ட இதழில் வெளியானது.இது சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.எனினும் தனது கருத்துக் களுக்கு காதர் மைதீன் விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. எனவே தமுமுக சார்பில் வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணிச் செயலாளர்), கே.விஜயகுமார் ஆகியோர், தமுமுக பற்றிய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்குமாறும் இல்லையேல் அவதூறு வழக்கு தொடரப்படும் என காதர் மைதீனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.இதையடுத்து காதர் மைதீன் தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "நான் கூறிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நான் எந்த நிலையிலும் தமுமுக குறித்து தவறாகக் கூறவில்லை, அப்படி ஏதேனும் கருத்துக்கள் தமுமுக வினரை பாதித்திருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் அவர் மீது தொடர இருந்த அவதூறு வழக்கு நிறுத்தப்பட்டது. எனினும் பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் சமுதாயத் தலைவர்கள் சகோதர அமைப்புகள் பற்றி கண்ணியத் துடன் பேச வேண்டும். நமது வார்த்தைகள் எதிரிகளுக்கு ஊக்கம் அளித்து விடக் கூடாது என்பதை உணர்ந்தால் சரி.